_ap_ufes{"success":true,"siteUrl":"ladyswings.com","urls":{"Home":"http://ladyswings.com","Category":"","Archive":"http://ladyswings.com/2017/03/","Post":"http://ladyswings.com/novels-download/tamil-novel-and-book-writer-index/","Page":"http://ladyswings.com/contest-submission/","Attachment":"http://ladyswings.com/?attachment_id=5385","Nav_menu_item":"http://ladyswings.com/uncategorized/ad-test-2/","Wp_automatic":"http://ladyswings.com/wp_automatic/2394/"}}_ap_ufee
Breaking News
Home / lavender (page 4)

lavender

Shenba Ninnai Saranadainthen -47

download-1

அத்தியாயம் –47   காலையில் எழுந்து  குளித்துவிட்டு வந்த மது வார்ட்ரோபை திறந்து புடவைகளைப் பார்த்துக்கொண்டு வர அர்ஜுன் அவளுக்குக் கடைசியாக வாங்கிக்கொடுத்த இளம் கத்தரிப்பு நிற புடவை கண்ணில் பட அதை ஒருமுறை தடவியவள் அந்த புடவையை எடுத்தாள்.   அர்ஜுனின் மறைவுக்குப் பிறகு அவன் வாங்கிக்கொடுத்த எந்தப் பொருளையும் உபயோகபடுத்தாமல் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தாள். இன்று என்னவோ அந்த புடவையைக் கட்டிக்கொள்ளவேண்டும் போல தோன்ற அதையே கட்டிக்கொண்டு …

Read More »

Shenba Ninnai Saranadainthen -46

download

அத்தியாயம் —46     ஸ்ரீராமின் ஹோமிலிருந்து வீட்டிற்கு வந்த பிறகும் மதுவின் கோபம் கொஞ்சம் கூட குறையவில்லை. மது வருவதற்கு முன்பே ஸ்ரீராம் விமலாவிற்குப் போன் செய்து நடந்த அனைத்தையும் சொல்லி இருந்தான். வெளியில் சென்றுவந்தச் ச்ந்த்ருவிடம் விமலா ஸ்ரீராம் சொன்ன அனைத்தையும் சொல்ல, சந்துரு அமைதியாக கேட்டுக்கொண்டார்.   “மது அவ மனசுல என்னதான் நினைச்சிகிட்டு இருக்கா? இன்னைக்கு அவ வரட்டும். நான் எல்லாத்தையும் பேசிடபோறேன். இனியும் …

Read More »

Shenba Ninnai Saranadainthen-45

images-2

அத்தியாயம் —45   இரவின் துணையோடுச் சித்தார்த் ரூஃப் கார்டனில் அமர்ந்து வானத்தை வெறித்தபடி யோசனையில் மூழ்கி இருந்தவனின் எதிரில் சுபா வந்து அமர்ந்தாள்.   “என்ன சித்தார்த், எந்த கோட்டையை பிடிக்க இந்த யோசனை?” என்றாள் புன்னகையுடன்.   சித்தார்த் சலிப்புடன் “மச்….” என்றான். “ஒஹ்ஹ்….மதுமிதாவோட மனக் கோட்டையை பிடிக்க தான் இந்த யோசனையா?”   “நான் எவ்வளவு முட்டாள்தனமா நடந்து இருக்கேன் சுபா. ரெண்டு மூணு முறை …

Read More »

Shenba Ninnai Saranadainthen-44

images-1

அத்தியாயம் –44   அர்ஜுனும் மதுவும் தங்கள் திருமண நாளை எதிர்பார்த்து நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தனர். அர்ஜுன் நினைத்த போது மதுவுடன் போனில் பேசிக்கொண்டிருந்தான். தீபக்கின் கிண்டலையும் பொருட்படுத்தாமல் மது அர்ஜுனின் போனை எதிர்பார்த்து காத்திருப்பதும், போன் வந்ததும் மணிக்கணக்கில் பேசுவதுமாக தங்களின் காதலை மேலும் மேலும் வளர்த்துக்கொண்டிருந்தனர்.   மதுவிற்கு எப்போது அர்ஜுனை நேரில் பார்ப்போம் என ஏங்க ஆரம்பித்தாள். அங்கே அர்ஜுனின் நிலையும் அதே போலயிருந்தது. திருமணத்திற்கு ஒரு …

Read More »

Shenba Ninnai Saranadainthen-43

images

அத்தியாயம் –43     மது முகம் கொள்ளா சந்தோஷத்துடனும், பரபரப்புடனும், நிமிடதிற்கொருமுறை தன் கைகடிகாரத்தைப் பார்ப்பதுமாக, நேரத்தை பிடித்து தள்ளிக்கொண்டிருந்தாள். ராஜேஷ் தன் தங்கையின் தவிப்பை பார்த்துவிட்டு , “மதும்மா, மூணு மாசம் அர்ஜுனைப் பார்க்காமல் இருந்த . இதோ இன்னும் பத்து நிமிடத்தில் ப்ளைட் வந்துட போகுது அதுக்குள்ளே இந்த தவிப்பு தவிக்கிறேயேடா”   வித்யா, “உங்களுக்கு என்ன தெரியும், எங்க தவிப்பு. உங்களுக்கெல்லாம் கண்டதே காட்சி …

Read More »

Shenba Ninnai Saranadainthen-42

download-1

அத்தியாயம் –42   இன்றோடு அர்ஜுன் கிளம்பி சென்று பத்து நாட்கள் ஆகிவிட்டது. தினமும் காலையில் அர்ஜுனின், “குட் மார்னிங்டா தேனு” என்ற குரலுக்காக கண்விழித்து காத்திருப்பதும், இரவில் குறைந்தது அரைமணி நேரம் சாட்டிங்கில் பேசிக்கொள்வதும் வழக்கமாகியது.   பத்து நாட்களுக்கு முன் அர்ஜுன் ஏர்போர்டில் நின்றிருந்த போது மதுவிடம், “ஏன் தேனு, நீதான் உங்க காலேஜ்ல நல்லா படிப்பியாமே. உங்க அண்ணன் பெருமையா சொல்லிக்கிட்டு இருந்தாரே” என்றான். மது …

Read More »