_ap_ufes{"success":true,"siteUrl":"ladyswings.com","urls":{"Home":"http://ladyswings.com","Category":"","Archive":"http://ladyswings.com/2017/01/","Post":"http://ladyswings.com/novels-download/vasagargalin-top-list/","Page":"http://ladyswings.com/contest-submission/","Attachment":"http://ladyswings.com/?attachment_id=4276","Nav_menu_item":"http://ladyswings.com/uncategorized/ad-test-2/","Wp_automatic":"http://ladyswings.com/wp_automatic/2394/"}}_ap_ufee
Breaking News
Home / Novels / Shenba Ninnai Saranadainthen (page 10)

Shenba Ninnai Saranadainthen

Shenba- Ninnai Saranadainthen -11

images-2

அத்தியாயம்-11 அலுவலகம் முடிந்து கிளம்பிய சித்தார்த் ,ஜீவாவையும் அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். ஜீவாவிற்கு வரவேற்பு பலமாக இருந்தது. தேவகி, “அடடே ஜீவாவா..! வாப்பா. என்ன ஜீவா எப்படி இருக்கே? நாங்க இந்த வீட்டுக்கு வந்த அன்னைக்கு வந்தே. அப்புறம் சித்தார்த் டெல்லில இருந்து வந்த அன்னைக்கு ஏர்போர்ட் வந்துட்டு அப்படியே கிளம்பிட்டே. இப்போதான் உனக்கு இந்த வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதா?” என்றார். சித்தார்த், “அட இன்னைக்கு …

Read More »

Shenba- Ninnai Saranadainthen -10

download-1

அத்தியாயம்–10      மது தன் தந்தையை மொபைலில் அழைத்தாள்.   மது,”அப்பா வீட்டில் இருக்கீங்களா?” என்றாள். சந்துரு,” சொல்லுடா மது, நான் வீட்லே தான் இருக்கேன்”என்றார்.   மது தன் தந்தையிடம் விஷயத்தை சொன்னாள். முழுதையும் கேட்டுக்கொண்ட மதுவின் தந்தை,” சரிம்மா, நல்ல விஷயம் தானே.உனக்கு ஒரு சேலஞ்சிங்கா இருக்குன்னு நீ நினைத்தால் தாராளமாக செய். நேரமானால் பரவாயில்லை நான் இல்லை தீபக் யாராவது வருகிறோம். நானே தீபக்கிடம் பேசுகிறேன்” …

Read More »

Shenbas- Ninnai Saranadainthen -9

images-4

அத்தியாயம்– 9 அலுவலகத்துக்கு வந்த சித்தார்த் அனைவரின் காலை வணக்கத்தையும் ஏற்றுக்கொண்டு பதில் வணக்கம் சொல்லிக்கொண்டே மதுவின் இடத்தையும் ஒரு நோட்டம் விட்டுக்கொண்டே மது ஏன் வரவில்லை…? என யோசனையுடன் தன் கேபினுக்குள் வந்து அமர்ந்தான். அப்போது தான் அவனுக்கு மது 2 நாட்களுக்கு அலுவலகம் வரமாட்டாள் என்ற ஞாபகம் வந்தது. அதுவும் நல்லதுக்குத்தான். ஏற்கெனவே இந்த கனவு என்னை பாடாகப்படுத்துகிறது.இப்போதைக்கு அவள் முகத்தை பார்க்காமல் இருப்பதே மேல் என …

Read More »

Shenba _Ninnai Saranadainthen -8

images-1

அத்தியாயம் — 8 பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவனை, “சித்தப்பா!” என அவன் காலைக் கட்டிக்கொண்ட ஆர்த்தியின் அழைப்பில் சுய நினைவுக்கு வந்த சித்தார்த் சிரித்துக்கொண்டே தூக்கிக்கொண்டான். சித்தார்த் வரும் போதே அவன் முகத்தை பார்த்த அத்வைத் என்ன அஷ்வந்த் சித்தார்த் ஏன் டல்லா இருக்கான் என கேட்க அஷ்வந்த் அத்வைதின் கையை பிடித்து தூரம் சற்று தள்ளி அழைத்து சென்று தான் பார்த்ததை ஒன்று விடாமல் அத்வைதிடம் சொன்னான்.அத்வைத் …

Read More »

Shenba _Ninnai Saranadainthen -7

images

அத்தியாயம்-7   மறுநாள் அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு டெல்லி வந்து சேர்ந்தான்.வேலை நேரம் தவிர மற்ற நேரத்தில் மதுவின் எண்ணமே அவனை சுற்றி சுற்றி வந்தது. நாளுக்கு நாள் அவள் நினைவு அதிகமானதே தவிர குறையவில்லை. வேலையில் சேர்ந்த புதிது என்பதால் விடுமுறை எடுத்துக்கொண்டுச் சென்னை செல்லவும் முடியவில்லை. இதன் இடையில் சித்தார்த்தின் திறமையைக் கண்டு அவனுக்கு us செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அவன் பெற்றோரும் இது அவனுக்கு கிடைத்த …

Read More »

Shenba _Ninnai Saranadainthen -6

bhcnzrfa4aa-sptcow_iiosegve5fji0es36nebshke-960x640

அத்தியாயம் –6   மறுநாள் காலையில் முகூர்த்த நேரத்திற்குச் சற்றுமுன்பே, மண்டபத்திற்கு வந்துவிட்ட சித்தார்த்தின் கண்கள் மதுவைத் தேடி அலைந்தன. ஆனால், அவனது கண்களுக்கு அகப்படவில்லை. இன்று எப்படியும் சந்தித்து பேசிவிட வேண்டும் என்று எண்ணி இருந்தவன், மதுவை காணாமல் செய்வதறியாமல் நின்றுகொண்டிருந்தான். மது கண்டிப்பாக வருவாளே..!!! .ஏன் இன்னும் காணவில்லை? என்று மறுபடியும் கண்களை நாலாப்புறமும் சுழலவிட்டான். இந்த முறை மது சித்தார்த்தை ஏமாற்றாமல் அவன் கண்களில் விழுந்தாள்.. …

Read More »