Click here to Goto New Forum

ammavukku oru kaditham

Discussion in 'Tamil Novels Flash Fiction (Short Stories)' started by Sudha Ravi, Oct 11, 2015.

  1. Sudha Ravi

    Sudha Ravi Bronze Wings Moderator New wings LW WRITER

    Messages:
    7,659
    Likes Received:
    3,307
    Trophy Points:
    113
    அம்மாவுக்கு ஒரு கடிதம்..........

    முகநூலில் நடைபெற்ற ஒரு கடிதபோட்டிக்கு நான் எழுதிய கடிதம்.........முதல் பத்து இடங்களில் தேர்வானது இக்கடிதம்...........உங்களின் பார்வைக்கு................


    அன்புள்ள அம்மாவுக்கு ,

    எதை எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை எதுவும் அருகில் இருக்கும் போது அதன் அருமை புரியவில்லை எட்டி இருக்கும் போது தான் தெரிகிறது. பிறந்ததில் இருந்து இன்று வரை அன்பை மட்டுமே தந்த உங்களுக்கு இன்று வரை நான் என்ன செய்து விட்டேன்.........எதுவும் இல்லையே.....

    இது பெற்றோர்களின் கடமை என்று எண்ணி உங்களின் அன்பை கூட புரிந்து கொள்ள முடியாதவளாக இருந்து இருக்கிறேன் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. ஒவ்வொரு முறை தவறை சுட்டிக்காட்டும் போதும் உங்களுக்கு என்ன தெரியும் என்று ஏளனமாக பேசி இருக்கிறேன். என் உணர்வுகள் ஒவ்வொன்றும் உங்களின் உணர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணராமல் போனேனே.

    உலகத்தில் எல்லாவற்றிற்குமே ஒரு விலை உண்டு ஆனால் தாயின் அன்பிற்கு மட்டும் எந்த விலையும் கிடையாது....................தன் மகளோ / மகனோ சுயநலமாக யோசித்தால் கூட அதை புறம் தள்ளி விட்டு எங்களின் நல்லவற்றிற்கு மட்டுமே யோசிக்கும் உள்ளம். எத்தனையோ சந்தர்பங்களில் உங்களின் தேவைகளை விட்டுக் கொடுத்து எங்களுக்காக மட்டுமே யோசித்தீர்கள். அப்பொழுதெல்லாம் இது ஒரு தாயின் கடமை என்று எண்ணினேனே தவிர இது அன்பால் விளைந்த ஒன்று என்று புரியாமல் போனது. இன்று நானும் ஒரு தாயாக மாறிய பின் தான் உங்களின் அனைத்து உணர்வுகளையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது......

    அதிலும் என் குழந்தைகளும் நான் அன்று உங்களை பேசிய அதே வார்த்தைகளை என்னிடம் திருப்பும் போது அன்று உங்களுக்கு என்ன மாதிரியான ஒரு வலியை கொடுத்திருக்கும் என்பதை புரிந்து கொண்டேன். குழந்தைகளின் நிலையில் இருந்து பார்க்கும் போது தாயின் செயல்கள் யாவும் தவறான கண்ணோட்டத்திலேயே தெரிகிறது. நீங்கள் எப்பொழுதும் சொல்லும் வார்த்தைகளை இன்று தான் அர்த்தமுள்ளதாக தோன்றுகிறது....” மகளே அடுத்தவரிடம் பேசும் போது உன் வார்த்தைகளில் கவனம் வைக்க வேண்டும் ஒரு முறை கடுமையான வார்த்தைகளை அள்ளித் தெளித்து விட்டால் அந்த நோவு வாழ்நாளின் கடைசி நாட்கள் வரை கூட இருந்து கொல்லும் தன்மையுடையது......” வாழ்வின் எத்தனையோ மோசமான சம்பவங்களை சந்தித்த போதும் நீங்க எனக்கு அறிவுறித்திய நாவடக்கம் மேலும் மேலும் என்னை பிரச்சனைகளில் உழலாமல் காப்பாற்றியது.

    இந்த நாவடக்கமும் பொறுமையும் அன்றே வந்து இருக்க கூடாதா? உங்களை எவ்வாறெல்லாம் புண்படுத்தி இருக்கிறேன் இன்று அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் இன்று எட்டாத இடத்துக்கு சென்று விட்ட உங்களிடம் இக்கடிதத்தின் மூலம் மன்னிப்பை யாசிக்கிறேன்.........

    இப்படிக்கு மன்னிப்பை யாசிக்கும் அன்பு மகள்
     
    Last edited: Oct 11, 2015
    shanthinichandra likes this.
     
  2. kohila

    kohila Wings New wings LW WRITER

    Messages:
    830
    Likes Received:
    242
    Trophy Points:
    93
    ஹாய் சுதாக்கா,


    no words to say....

    டைட்டில் கொடுத்து எழுத சொன்னாங்களா?.. நைஸ்.. அதிலும் அந்த கடைசி லைன் தான் ஹைலைட்... யதார்த்தமா.. நிறைய பேரின் மனதில் இருப்பதை பிரதிபலித்தது இந்த கடிதம்..


    எப்படி அக்கா?.. உங்களால் நச்சுன்னு நாலுவரியில் விமர்சனம் செய்து எங்களை சிரிக்க வைக்கவும் முடியுது... உணர்வு பூர்வமான கடிதம் எழுதி எங்கள் மனதில் கனத்தை ஏற்றவும் முடியுது.. இரண்டு எக்ஸ்ட்ரீமையும் அசால்ட்டாக ஹேண்டில் பண்றீங்க.. சூப்பர்க்கா
     
     
  3. Latha

    Latha Contributor New wings

    Messages:
    1,778
    Likes Received:
    83
    Trophy Points:
    48
    உண்மை தான் sudha .உறவுகள் பக்கத்துல இருக்கும்போது அவர்கள் அருமை தெரிவதில்லை .
     
     
  4. Sudha Ravi

    Sudha Ravi Bronze Wings Moderator New wings LW WRITER

    Messages:
    7,659
    Likes Received:
    3,307
    Trophy Points:
    113
    ஹாய் கோகிலா,

    நன்றி பா.......... உங்க நெருங்கிய உறவுக்கு ஒரு கடிதம் எழுதுங்கன்னு சொன்னாங்க............சிலர் அம்மாவுக்கு, சிலர் அப்பாவுக்கு ஏன் சிலர் வயிற்றில் இருந்த சிசிவிற்கு, சிலர் பிறவாமலே போன சிசுவிற்கு என்று எழுதினாங்க.........................
    மீண்டும் நன்றி கோகிலா..............................................
     
     
  5. Sudha Ravi

    Sudha Ravi Bronze Wings Moderator New wings LW WRITER

    Messages:
    7,659
    Likes Received:
    3,307
    Trophy Points:
    113
    நன்றி லதா,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
     
     
  6. sakkra

    sakkra Wings

    Messages:
    983
    Likes Received:
    40
    Trophy Points:
    0
    சுஜி அக்கா

    நீங்க கடைசியா சொன்னிங்க பாருங்க அதை தான் இன்றும் நினைத்து வருந்தி கொண்டு இருக்கிறேன் ,,உங்களுக்கு ஒன்னும் தெரியாதுன்னு,, எதனோயோ தடவை அம்மாவை சொல்லி இருக்கேன் ,,இப்போ அதை என் பொண்ணு என்கிட்டே சொல்லுற ,,,அனால் அருகில் இருக்கும் போது அதன் மதிப்பு தெரியாது அப்படிங்குறது ரொம்ப சரியான வரிகள்,,,அவங்க இப்போ இல்லை
    இப்போ தான் தெரயுது ,,அவங்க அருமை ,,,

    ரொம்ப அழகா அருமையா சொல்லி இருக்கீங்க அக்கா ,,,சூப்பர்
     
     
  7. sakkra

    sakkra Wings

    Messages:
    983
    Likes Received:
    40
    Trophy Points:
    0
    சுதா அக்கா என்று அழைத்தால் நீங்க ரொம்ப வயசு அனவங்கனு பீல் வருது சோ.இன்று முதல் நீங்க சுஜி டார்லிங் என்றே என்னால் அழைக்க படுவிர்கள்
    இதற்கு ஏதேனும் ஆட்சேபனை உண்டா
     
     
  8. anisaran

    anisaran Pillars of LW LW WRITER

    Messages:
    4,972
    Likes Received:
    10
    Trophy Points:
    0
     
  9. Sudha Ravi

    Sudha Ravi Bronze Wings Moderator New wings LW WRITER

    Messages:
    7,659
    Likes Received:
    3,307
    Trophy Points:
    113
    நன்றி கவிதா...................என் வயசை குறைச்சு காண்பிக்க நான் ஏன் ஆட்சபனை சொல்ல போறேன்...................................:7_2_111::7_2_111:
     
     
  10. Sudha Ravi

    Sudha Ravi Bronze Wings Moderator New wings LW WRITER

    Messages:
    7,659
    Likes Received:
    3,307
    Trophy Points:
    113
    நன்றி அனிதா........................................................................
     
     
Loading...

Share This Page

loading...