1. Welcome to ladyswings contest
    Dismiss Notice

ORU POOVIN RAGASIYAM by kodiuma

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by kodiuma, Apr 25, 2016.

Thread Status:
Not open for further replies.
  1. kodiuma

    kodiuma Wings New wings LW WRITER

    Messages:
    773
    Likes Received:
    141
    Trophy Points:
    43
    HELLO FRIENDS.jpg

    ஹாய் ஹாய் திரும்பவும் நானே .. ஒரு முழு கதையை கொடுக்கலாம் தான் நினைச்சேன் நண்பர்களே .. ஆனால் முடியவில்லை , அதான் உடனே களத்துல குதிச்சிட்டேன் ..

    கதையின் தலைப்பு : ஒரு பூவின் ரகசியம் ..

    கதையின் கரு : இப்போதைக்கு ரகசியம் ..

    கதையின் ஹீரோ ஹீரோயின் : அதுவும் இப்போதைக்கு ரகசியம் ..

    ஆக மொத்தத்தில் எல்லாமே இப்போதைக்கு ரகசியம் தான் மக்கா ..

    opr.jpg

    இந்த கதைக்கு பதிவு வாரம் ஒன்று அல்லது இரண்டு தான் இனி கொடுப்பேன் , ஏனெனில் அடுத்து நிறைய வேலை அணிவகுத்து இருக்கிறது எனக்கு ..

    ஆகையால் நண்பர்களே மெதுவா வந்து கொடுத்தாலும் , கதையை உங்களுக்கு பிடித்த விதத்தில் தான் கொடுக்க போகிறேன் ..

    இந்த கதை மற்ற கதை போல் சிறிதாக இருக்காது , கொஞ்சம் பெரிய கதையா தான் இருக்கும் ..

    சோ நான் பொறுமையா தான் கொடுக்க நினைக்கிறன் மக்களே .. உங்கள் ஊக்கமும் உற்சாகமும் தான் என் பலமே , உங்க கருத்துக்கள் தான் மேலும் என்னை பலப்படுத்த உதவும் ..

    ஆகையால் நான் உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான் , அது என் தவறுகளை சுட்டி காட்டி , எனக்கு ஊக்கமும் , உற்சாகமும் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ..


    சீக்கிரம் பதிவோடு வருகிறேன் மக்களே ..

    இப்படிக்கு ,
    அன்புடன் ,
    கோடிஉமா ..
    ஒரு பூவின் ரகசியம் - ORU POOVIN RAGASIYAM Kodiuma comments
     
    Last edited: Apr 25, 2016
     
  2. kodiuma

    kodiuma Wings New wings LW WRITER

    Messages:
    773
    Likes Received:
    141
    Trophy Points:
    43
    ரகசியம் - 1

    opr1.jpg


    அத்தியாயம் – 1

    இடம் : பெங்களூர் , பெண்கள் விடுதி .

    நேரம் : நள்ளிரவு பன்னிரெண்டு மணி .

    அந்த விடுதியில் ஒரு அறையில் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்து கொண்டு இருந்தது . அந்த அறையில் பல்லூன் வெடிக்கும் சத்தம் , பெண்களின் ஆராவாரம் காதை பிளந்தது .

    இதனால் மற்ற அறை மாணவிகள் , விடுதியை நடத்தும் வார்டன் என்று யாராலும் தூங்கவும் முடியாமல் , அவர்களை அதட்டவும் முடியாமல் சலித்தபடி இருந்தனர் . ஆனால் அங்கே புதிதாக விடுதியில் சேர்ந்த ஒரு மாணவியால் , அப்படி இருக்க முடியவில்லை .

    அவள் நேராக அந்த அறை கதவை தட்டி , கதவு திறப்பதற்காக காத்து நின்றாள் . யாரும் கதவை திறப்பதாக தெரியவில்லை எனவும் , அவள் இன்னும் தன் பலம் கொண்டு அந்த அறை கதவை ஓங்கி தட்டினாள் .

    சிறிது நேரத்தில் அங்கே கதவை திறந்த ஒரு பெண் , அவளை பார்த்து என்னவென்று தன் புருவம் உயர்த்தி வினவினாள் .

    “ நீங்க கொஞ்சம் சத்தத்தை குறைச்சு கொண்டாடுங்க , இப்படி சத்தம் போட்டா , எல்லோரோட தூக்கமும் கெடுது “ என்று கூறிய பெண்ணை பார்த்து சிரித்தாள் அந்த பெண் .

    “ இந்த விடுதிக்கு புதுசா வந்து இருக்கியா “ என்று கேட்டாள் அப்பெண் .

    “ ஆமாம் ஏன் கேட்குறீங்க “ என்றாள் .

    “ அதான் உனக்கு ரூல்ஸ் தெரியல , இவ்வளவு சத்தம் கொடுக்குறோம் யாராவது எங்களை வந்து கேட்டாங்களா , வார்டன் தான் வந்தாங்களா , இல்லையே . இதுலையே நீ புரிஞ்சு இருக்கணும் , ஆமா உன் பெயர் என்ன , எந்த காலேஜ் நீ “ என்று வினவினாள் .

    “ என் பெயர் ஸ்ரீஜா , பைனல் இயர் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் . பக்கத்துல இருக்கிற v.r.s . இன்ஜினியரிங் காலேஜ் ல படிக்கிறேன் . நீங்க என்ன படிக்குறீங்களா , இல்லை வேலை பார்க்குறீங்களா “ என்று அப்பெண்ணிடம் தன்னை பற்றி கூறி பதிலுக்கு அப்பெண்ணை பற்றி கேட்டாள் ஸ்ரீஜா .

    “ ம்ம்.. அதை நீயே உள்ள வந்து தெரிஞ்சிக்கோ “ என்று அப்பெண் அவளை உள்ளே இழுத்துக் கொண்டு கதவை சாற்றினாள் .

    அங்கே cd பிளேயரில் ஒலித்த பாட்டை அமர்த்தி விட்டவள் , பாடல் ஒலி நின்ற சத்தத்தை கேட்டு அங்கே இருந்த அனைவரும் திரும்பி அவளை பார்த்தனர் .

    “ ஹலோ லேடீஸ் , இந்த பொண்ணு நம்ம விடுதிக்கு புதுசா வந்து இருக்கா , பெயர் ஸ்ரீஜா “ என்று கூறி அவளை பற்றிய தகவல்களை கூறினாள் .

    “ இப்போ நம்ம ஸ்ரீஜாக்கு நான் யார் , என்ன வேலை பார்க்குறேன் எல்லாம் தெரியனுமா , கொஞ்சம் எடுத்து சொல்லுங்க “ என்று கூறிவிட்டு அங்கே இருந்த டேபிளில் ஏறி , ஒரு காலை மட்டும் டேபிள் மேல் வைத்துக் கொண்டு , மற்றொரு காலை ஆட்டிக் கொண்டே , அவர்களை பார்த்து எடுத்துக் கூறுமாறு தெனாவட்டாக போஸ் கொடுத்துக் கொண்டு இருந்தாள் .

    “ ஹாய் ஸ்ரீஜா அவ பெயர் மதுஸ்ரீ , கோயம்புத்தூர் தான் அவ சொந்த ஊர் . அவங்க அப்பா சிங்காரமுத்து மினிஸ்டர் , அரசியல் ல பெரிய புள்ளி . அவங்க அம்மா வள்ளியம்மை குடும்ப தலைவி , அண்ணா தேவராஜன் அவங்க குடும்ப தொழில் ஜவுளி கடை வியாபாரம் பார்க்குறாங்க “.

    “ அவங்க அண்ணி கல்யாணி வக்கீல் , கிரிமினல் லாயர் . அவங்க பையன் நிரஞ்சன் இப்போ U .K.G . படிக்கிறான் இதான் அவ குடும்ப வரலாறு “ என்று கூறி முடித்தாள் மதுவின் உற்ற தோழி அமுதா @ அம்மு .

    “ அது சரி அவங்க என்ன படிச்சு இருக்காங்க , அவங்க என்ன பண்ணுறாங்க இப்போ . நான் அதை தான் கேட்டேன் , அதை சொல்லுங்க முதல “ என்று ஸ்ரீஜா சற்று அழுத்தி கேட்கவும் , மதுவிற்கு சிரிப்பு வந்தது .

    “ நான் M.Phil கணிதம் முடிச்சு இருக்கேன் , இப்போ இங்க இருக்கிற St . Joseph காலேஜ் ல விரிவுரையாளரா வேலை பார்க்குறேன் . அப்படியே என் சீனியர் உதவியோட , நான் PHD பண்ணிக்கிட்டு இருக்கேன் “.

    “ என்ன ஸ்ரீஜா , விவரம் போதுமா , இல்லை இன்னும் வேணுமா “ என்று மது அப்போதும் அதே தெனாவட்டு போஸ் கொடுத்து கெத்தாக கேட்கவும் ஸ்ரீஜா அவளை ஏற இறங்க பார்த்தாள் .

    தலையை சரியாக வாராமல் , சும்மா கொண்டை மட்டும் போட்டுக் கொண்டு , முன் நெற்றியில் சிறிய அளவு முடியை மட்டும் தவள விட்டு இருந்தாள் . நெற்றியில் சிறிதாக ஒரு போட்டு , ஒரு கையில் பேஷன் ப்ரேஸ்லெட் , மற்றொன்றில் ஒரு வாட்ச் .

    காதில் கடுக்கன் அளவு தோடு , கழுத்தில் சிறிய கயிறு போன்று செயின் , ஒரு வைட் டாப்ஸ் இடுப்பு வரைக்கும் , சாயம் போன ஜீன்ஸ் , தெனாவட்டான ஒரு போஸ் என்று அவள் பார்பதற்கு ஒரு பக்கா மார்டர்ன் சொர்ணாக்கா மாதிரி இருக்கவும் ஸ்ரீஜா சிரித்தாள் .

    “ என்னது நீங்க கல்லூரி விரிவுரையாளரா , உங்களை பார்த்தா மார்டர்ன் சொர்ணாக்கா மாதிரி இருக்கு , பொய் சொல்லாம உண்மையை சொல்லுங்க “ என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் .

    இப்பொழுது சிரிப்பது , அங்கே இருக்கும் அனைவருடைய முறையானது . எல்லோரும் சிரிக்கவும் , ஸ்ரீஜா சட்டென்று தன் சிரிப்பை நிறுத்திவிட்டு , கையை இடுப்பில் வைத்துக் கொண்டு மதுவை முறைத்தாள் .

    அவளின் முறைப்பை பார்த்து தனக்குள் சிரித்து விட்டு , பின்னர் கண் ஜாடையில் எல்லோரையும் அமைதி படுத்தினாள் . அதன் பின் பார்வையை ஸ்ரீஜா பக்கம் திருப்பி , அவளை தன்னருகே வருமாறு சைகை செய்தாள் .

    அங்கே அவளின் அருகே சென்ற ஸ்ரீஜா , என்னவென்பது போல் பார்த்தாள் . மது அவளிடம் ஒரு பைலை நீட்டவும் , அதை வாங்கி பார்த்தவள் அதிர்ந்தாள் . ஏனெனில் அதில் மது கூறிய அனைத்தும் உண்மை , என்று கூறியது .

    “ ஹே ஸ்ரீஜா , என்ன படிப்புக்கும் , ஆளுக்கும் சம்மந்தமே இல்லையேன்னு பார்க்குறியா . இப்போ தான இங்க சேர்ந்து இருக்க , இனி போக போக உனக்கே இது பழகிடும் “ என்று அமுதா அவளை தட்டி கொடுத்தாள் .

    அப்பொழுது தான் ஸ்ரீஜா , தன்னை சுற்றி அனைவரையும் பார்த்தாள் . அவளுக்கு ஏதோ ஒரு ரவுடி கும்பலுக்குள் தெரியாமல் நுழைந்த ஒரு பீல் உருவானது .

    இருந்தாலும் மதுவிடம் ஏதோ ஒன்று இருக்கிறது போல் உணர்ந்தாள் , அவளிடம் நட்பு பாராட்ட விருபினாள் . எனவே ஸ்ரீஜா , அவளை நோக்கி சிரித்த முகமாக , நட்பு கரம் நீட்டினாள் .

    “ ம்ம்.. நீ செம பாஸ்ட் ஸ்ரீஜா , என்னை சீக்கிரம் புரிஞ்சுகிட்டு நட்பு கரம் நீட்டிட “ என்று மதுவும் சிரித்துக் கொண்டே அவள் புறம் கையை நீட்டி , அதை பற்றிக் கொண்டு அவள் நட்ப்பை ஏற்றுக் கொண்டாள் .

    பின்னர் அங்கே புதிய நட்பு கிடைத்த மகிழ்ச்சியில் , மேலும் சில ஆரவாரமுடன் அந்த இடம் பழைய உற்சாகத்தோடு கலகலத்தது . சிறிது நேரத்தில் அந்த இடத்தை , எல்லோரும் ஆளுக்கு ஒரு வேலையை எடுத்துக் கொண்டு சுத்தம் செய்தனர் .

    மதுவிற்கு ஸ்ரீஜாவை பார்க்கும் பொழுது , வேறு ஒரு முகம் அவள் நினைவில் வந்து அவளை வேதனை அடைய செய்தது . அவளின் முக மாற்றத்தை கண்டு கொண்ட அம்மு , ஸ்ரீஜாவை அவள் அறைக்கு அனுப்பி வைத்தாள் .

    பின்னர் மதுவின் தோளில் கை வைத்து அழுத்தவும் , மது சுதாரித்துக் கொண்டாள் . பின்னர் அம்முவிடம் தூக்கம் வருகிறது என்று கூறி , அங்கே தன் கட்டிலில் படுத்துக் கொண்டு , போர்வையை இழுத்து மூடினாள் .

    என்ன தான் கண் மூடி படுத்து இருந்தாலும் , அவளால் தூங்க முடியவில்லை . நடந்து போன சில கசப்பான சம்பவங்களின் நினைவில் , அவள் மனதில் மீண்டும் பாரம் ஏறியது . அதை நினைத்துக் கொண்டு படுத்தவள் , எப்பொழுது உறங்கினாள் என்று தெரியவில்லை .

    நன்றாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை , அவளின் செல்பேசி காலை எட்டு மணியளவில் அவளை எழுப்பியது . எரிச்சலுடன் எடுத்து யார் என்று பார்த்தவள் , அவளின் அன்னை அழைப்பதை பார்த்து வேகமாக எடுத்து காதுக்கு கொடுத்தாள் .

    “ என்ன மா திடிர்ன்னு இவ்வளவு சீக்கிரம் கூப்பிட்டு இருக்கீங்க , என்ன விஷயம் “ என்று எடுத்த உடனே கேட்டாள் .

    “ அது சரி , அம்மா போனை போட்டு இருக்காளே , எப்படி இருக்கா என்னனு ஒரு வார்த்தை கேட்காம , நேரா விஷயத்துக்கு வாங்கன்னு சொல்லுற பிள்ளை நீ ஒருத்தி தான் டி “ என்று அவர் காலை சுப்ரபாரதம் வாசிக்க தொடங்கினார் .

    “ ஹையோ வள்ளிம்மா , நேத்து தான செல்லம் உங்க கிட்ட எப்படி இருக்கீங்ன்னு கேட்டு , கொஞ்சிகிட்டே ஊர்ல இருக்கிற நடப்பன , பறப்பன , மிதப்பனன்னு இப்படி எல்லோரை பத்தியும் கேட்டேன் . வர வர உங்களுக்கு நியாபக மறதி அதிகமாகிட்டே இருக்கு , ஒரு நல்ல டாக்டர் கிட்ட முதல உங்களை காட்டனும் “ என்று மது அவரை உற்சாகத்துடன் வம்பு இழுத்துக் கொண்டு இருந்தாள் .

    “ ஆரம்பிச்சிடியா , சரி , சரி பேசிகிட்டு இருக்க நேரம் இல்லை . நீ சீக்கிரம் குளிச்சிட்டு , எல்லாம் எடுத்து எடுத்து வச்சு தயாரா இரு . உன்னை கூப்பிட சிபி தம்பி வந்துகிட்டே இருக்கு , இங்க உங்க பெரியப்பா பொண்ணு லக்ஷ்மிக்கு நிச்சயம் ஆகிருக்கு “ என்று அவர் கூறியதை கேட்டவுடன் , அவள் கட்டிலில் இருந்து எழுந்து குதித்துக் கொண்டு இருந்தாள் .

    “ ஹையோ சூப்பர் வள்ளிமா , இதை தான நீங்க முதல சொல்லி இருக்கணும் “ என்று குதித்தாள் மது .

    “ அது சரி , உனக்கும் அவளுக்கும் தான் ஆகாதே . ஏதோ ஜென்ம விரோதி மாதிரி தான முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு இருப்ப , அவளை பார்த்தா . இப்போ அவளுக்கு முடிவு ஆகிருக்கு சொன்ன உடனே , இவ்வளவு சந்தோஷப்படுற என்ன விஷயம் “ என்று அவளை பற்றி அறிந்தவராக கேட்டார் .

    “ வேற என்ன எனக்கு தான் ரூட் கிளியர் ஆகிருச்சே , ஷப்பா எப்போ டா இவளுக்கு முடியும்ன்னு காத்துகிட்டு இருந்தேன் . நல்ல வேலை , என் பீலிங்க்ஸ் புரிஞ்ச ஒரு நல்லவான் வந்து , இந்த லக்ஸ்சை தள்ளிகிட்டு போயிட்டான் “ என்று அவள் கூறியதை கேட்டு தலையில் அடித்துக் கொண்டார் வள்ளியம்மை .

    “ உன்னை எல்லாம் திருத்த முடியாது , சீக்கிரம் கிளம்பு இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த சிபி தம்பி அங்க வந்திடும் “ என்று சில பல அறிவுரைகள் கூறி போனை வைத்தார் .

    போனை வைத்தவுடன் , அவர் கூறிய சிபி தம்பி மதுவின் காதில் ஓடி அவளை பல்லை கடிக்க வைத்தது . கடிகாரத்தை பார்த்தவள் , செல்லை சார்ஜில் போட்டுவிட்டு , குளிக்க தேவையானதை எடுத்துக் கொண்டு , குளியறைக்குள் சென்று குளித்து விட்டு வந்தாள் .

    அதன் பின் வேகமாக தான் எடுத்து செல்ல வேண்டியதை எல்லாம் எடுத்து ஒரு பெட்டியில் வைத்துவிட்டு , மீண்டும் ஒரு முறை சரிபார்த்து சார்ஜெரையும் செல்லையும் தன் கைபையில் போட்டுக் கொண்டு அறையில் இருந்து வெளியேறி கீழே லாபிக்கு வந்து சேர்ந்தாள் .

    அங்கே அவள் வந்தவுடன் , முதலில் அவள் பார்த்தது திமிராகவும் , தெனாவெட்டாகவும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டு இருந்த சிபி தான் . இவள் வந்ததை பார்த்தவன் , அவனின் கண் அசைவில் அவனோடு வந்து இருந்தவர்கள் அவளின் பெட்டியை வாங்கிக் கொண்டு காருக்கு விரைந்தனர் .

    “ இன்னைக்கு ஒழுங்கா நீ என் கூட கார் ல வருகிறது நல்லது , மீறி நீ ஏதாவது செய்ய நினைச்சா அப்புறம் உன்னை தொட்டு தூக்கிட்டு வர மாதிரி இருக்கும் . யோசிச்சு நல்ல முடிவா எடு , புரிஞ்சு இருக்கும் நினைக்கிறன் , நேரம் ஆகிருச்சு வண்டியில் ஏறு “ என்று சிபி கூறியதை கேட்டு , தன் பல்லை கடித்துக் கொண்டே வண்டியில் பின் பக்கம் ஏறி அமர்ந்தாள் .

    அவள் அமைதியாக வண்டியில் ஏறி அமர்ந்ததை பார்த்து , சிபி தனக்குள் புன்னகைத்துக் கொண்டான் . பின்னர் காரின் முன் கதவை திறந்து கொண்டு , டிரைவர் இருக்கைக்கு பக்கத்தில் ஏறி அமர்ந்து அவரை வண்டியை எடுக்க கூறினான் .

    அவனின் கட்டளைக்கு அடி பணிந்தவர் , காரை சீரான வேகத்தில் கோயம்பத்தூர் நோக்கி ஓட்ட தொடங்கினார் . நேற்றைய இரவில் சரியாக தூங்காமல் இருந்ததால் , காலையில் தான் நன்றாக தூங்க தொடங்கினாள் மது .

    அதற்குள் அவளின் அன்னை எழுப்பிவிடவும் , கிளம்ப தொடங்கினாள் மது . இப்பொழுது சற்று தூங்கி எழுந்தால் தான் , அடுத்து மூளை சுறுசுறுப்பாக இருக்கும் என்று எண்ணியதால் , உடனே அங்கு இருந்த சிறிய தலையணையை கதவுக்கு அருகில் போட்டுக் கொண்டு , கதவு சரியாக லாக்காகி இருக்கிறதா என்று ஒரு பார்வை பார்த்துவிட்டு , கால்லை நீட்டி படுத்து விட்டாள் .

    அவள் படுத்து நன்றாக உறங்கியவுடன் , சிபி அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு தனக்குள் பொருமிக் கொண்டு இருந்தான் . அவன் இப்படி ஒரு சந்தர்பத்திற்காக தான காத்துக் கொண்டு இருந்தான் , அவளை கடத்த இதுவே சரியான சமயம் என்று எண்ணினான் .

    “ டிரைவர் நீங்க வண்டியை அந்த பஸ் ஸ்டாப் கிட்ட நிறுத்துங்க , நீங்க பஸ்ஸை பிடித்து போங்க . நானே இவளை வேகமா அங்க கூட்டிட்டு வந்து விட்டுறேன் , அப்புறம் இவ எழுந்தா அவ எப்படி எல்லாம் ஒடுவாளோ தெரியாது “ என்று சிபி கூறியதை கேட்டு அவர் புன்னகைத்துக் கொண்டார் .

    “ தம்பி பாப்பா நல்லா அசதியா இருக்கு , இப்போ அது அவ்வளவு சீக்கிரம் எழுந்துக்காது . நீங்க தைரியமா இருங்க , அது மட்டும் இல்லை , அய்யா என்னை இருந்து கையோட கூட்டிட்டு வர சொல்லி இருக்கார் “ என்று இருபது வருடம் , அங்கே வேலை செய்த விசுவாச டிரைவர் மணி கூறினார் .

    “ ஹ்ம்ம்.. இந்த சந்தர்ப்பமாவது பயன்படுத்திக்கலாம் நினைச்சேன் , இதுவும் போச்சா . இன்னும் எவ்வளவு நாள் காத்து இருக்கிறது இவளை கடத்திட்டு போக , ஏதாவது சீக்கிரமா ஒரு வழி கிடைச்சா நல்லா இருக்கும் “ என்று மனதிற்குள் பொரிந்தான் சிபி .

    அவனுக்கு தெரியவில்லை , இவளை கடத்துவது என்பது அவ்வளவு சுலபமான ஒன்று இல்லை என்று . இன்னும் சிறிது நாட்களில் அவனுக்கு இவள் பெரிய அதிர்சிகளை கொடுத்து , அவனை மிரள செய்ய போகிறாள் என்பதை இவன் அறிவானா .

    மதியம் ஒரு ஊரில் நிறுத்தி சாப்பிட்டு விட்டு , மீண்டும் கார் பயணம் . அந்த பயணத்தில் சிபி இவளை எப்பொழுது கடத்துவது , என்று யோசித்தான் ஒரு புறம் . மற்றொரு புறம் சிபி வந்து சேர்ந்த விதத்தை நினைத்து , தனக்குள் பொரிந்து கொண்டு இருந்தாள் மது மற்றொரு புறம் .

    இப்படி இவர்கள் ஒருவருக்கு ஒருவர் நினைத்துக் கொண்டு இருக்கையில் , இரவு எட்டு மணி அளவில் கோயம்பத்தூர் வந்து சேர்ந்தனர் . அந்த வீட்டை பார்த்து இறங்கிய மது , எப்பொழுதும் போல் அவள் கண்களில் நீர் வழிந்து கொண்டு இருந்தது .

    பார்பவர்களுக்கு அவள் ரொம்ப நாள் கழித்து வீட்டிற்கு வந்ததால் , இப்படி அழுகிறாள் என்று தான் எண்ணுவர் . ஆனால் அவள் மனதின் ஆழத்திற்கு தான் , அந்த கண்ணீரின் ரகசியம் தெரியும் .

    உள்ளே கார் வந்த சத்தத்தை கேட்டு , வீட்டில் இருந்து வெளியே வந்தார் வள்ளியம்மை . மது அதற்குள் தன்னை சுதாரித்து , அவரை பார்த்தவுடன் ஓடி சென்று அவரை கட்டி அனைத்துக் கொண்டாள் .

    “ என்ன மதுமா இப்படி இளச்சிட்ட , வா முதல இங்க வெளியே கை , கால் கழுவிட்டு உள்ளே வா “ என்று கூறி அவளை உள்ளே அழைத்து சென்றார் .

    மதுவின் இந்த கலங்கிய நிலையை பார்த்த சிபிக்கு , எரிச்சல் வந்தது .

    “ இன்னும் நல்லா அழுவ டி நீ , உன் குடும்பத்தையே அழ வைக்குறேன் . எங்க குடும்பத்தை ஏன் டா பகைசிட்டோம்னு உங்க அப்பாவை வருத்த பட வைக்குறேன் , உன்னை சீக்கிரமே இவங்க கிட்ட இருந்து பிரிக்கிறேன் “ என்று மனதிற்குள் கருவிக் கொண்டான் .

    வீட்டிற்க்குள் உள்ளே வந்த மதுவை , வள்ளியம்மை அவளை அமர வைத்து முதலில் சாப்பாடை கொடுத்து உபசரித்தார் . அவரின் அன்பில் எப்பொழுதும் போல் , அவள் கண்கள் கலங்கியது .

    “ இது என்ன மது எப்போ பார்த்தாலும் இப்படி அழுகை , வீட்டுக்கு வந்த உடனே அழுதா நல்லதுக்கு இல்லை டா . அதான் உன்னை இங்கேயே இருக்க சொன்னேன் , நீ கேட்டா தான “ என்று அவர் பிரிந்து இருப்பதால் தான் மகள் அழுகிறாள் என்று நினைத்து கூறினார் .

    ஆனால் அவள் அழுவதற்கு ஆயிரம் காரணம் இருக்கிறதே , அது ரகசியமாகவே இருக்கிறது .

    “ சரி மா இனி அழ மாட்டேன் , ஆமா அப்பா எங்க . இந்நேரம் நான் வந்தா , என்னை வரவேற்க உனக்கு முந்தியே வந்து நிற்பாரே “ என்று தந்தையை பற்றி பேச்சு எடுத்தாள் .

    “ அவர் கட்சி மீட்டிங் முடிஞ்சு , உங்க பெரியப்பா கூட ஒரு சோலியா வெளியூர் போயிருக்கார் . ராத்திரி பதினொரு மணிக்கு மேல தான் வருவார் , லக்ஷ்மிக்கு நிச்சய சடங்கு நாளைக்கு வைக்குறாங்க மது அந்த வேலையா தான் போய் இருக்காங்க “ என்று அன்னை கூறியதை கேட்டு புன்னகைத்து விட்டு , சாப்பிட்டு முடித்தவுடன் , கையை கழுவிவிட்டு , மேலே அவள் அறைக்கு வந்தாள் .

    அறை கதவை பூட்டிவிட்டு , அவள் தன் உடமைகளை எடுத்துக் கொண்டு முதலில் குளிக்க சென்றாள் . குளித்துவிட்டு வழக்கம் போல் நைட்டி பண்ட் அணிந்து வந்தவள் , தன் அறை ஜன்னல் வழியே உள்ளே பைப் மூலம் கீழே தோட்டத்திற்கு வந்தாள் .

    சுற்றி முற்றும் பார்த்துவிட்டு , அவள் தோட்டத்தின் பின்னே சென்றாள் . அங்கே அவள் சென்றதை பார்த்துவிட்டு , சிபி அவளை பின் தொடர்ந்து சென்றான் .

    அங்கே ஓரத்தில் உள்ள மரம் நோக்கி சென்று , அங்கே தரையில் அமர்ந்து அந்த மண்ணை எடுத்து அழுது கொண்டே இருந்தாள் . அவள் அழுவதை பார்த்து , இவனுக்கு ஏன் இவ்வளவு அழுகிறாள் என்று புரியவில்லை .

    அருகில் சென்றவன் , அங்கே அவள் உதிர்த்த வார்த்தைகளை கேட்டு அவன் ஸ்தம்பித்து நின்றான் .

    பூவின் ரகசியம் வரும் ...




     
    mala, star arokia viji, Sree and 3 others like this.
     
  3. kodiuma

    kodiuma Wings New wings LW WRITER

    Messages:
    773
    Likes Received:
    141
    Trophy Points:
    43
    mala likes this.
     
  4. kodiuma

    kodiuma Wings New wings LW WRITER

    Messages:
    773
    Likes Received:
    141
    Trophy Points:
    43
    அத்தியாயம் – 2

    இடம் : சென்னை

    காலை மணி ஏழு , அந்த இரண்டு மாடி பங்களாவில் உள்ள ஒரு உடற்பயிற்சி அறையில் அருள்மொழிவர்மன் தன் ட்ரெட்மில்லில் வேகமாக ஓடிக் கொண்டு இருந்தான் . அவனின் எண்ணமெல்லாம் நேற்று அவன் தம்பி சிபி , போனில் கூறியதை மனதில் அசை போட்டுக் கொண்டு இருந்தது .

    அதற்குள் ஓடுவதற்கான நேரம் , முடிந்ததற்கான அறிகுறி அவனின் டைமரில் சிக்னல் வரவும் ஓடுவதை நிறுத்திக் கொண்டான் , அதோடு அவனின் சிந்தனையையும் . அதன் பின் வழக்கம் போல் அவனின் காலை நேர ஓட்டம் , அவனை முழுவதும் இழுத்துக் கொண்டது .

    அவனின் ஹோட்டலுக்கு செல்ல தயாராகி கீழே இறங்கி வரும் பொழுது , சாப்பாடு மேஜையில் அவனுக்கான உணவு தயாராகி இருந்தது . அவனின் மொத்த குடும்பமும் , அவனுக்காக காத்துக் கொண்டு இருந்தனர் .

    எப்பொழுதும் போல் அவர்களை பார்த்து , ஒரு சின்ன சிரிப்பு சிரித்துவிட்டு , அவனின் உணவை முடித்துக் கொண்டு ஒரு தலையசைப்புடன் எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு , தன் ரேஞ்சு ரோவரில் கிளம்பினான் .

    அவனின் இந்த செய்கை , அவனின் மொத்த குடும்பத்தையும் வருத்தத்தில் ஆழ்த்தியது . கடந்த பத்து வருடமாக இவன் இப்படி தான் இருக்கிறான் , அதற்கான காரணம் தெரிந்தாலும் அவர்களால் அவனை ஒன்றும் சொல்ல முடியாமல் போனது .

    அருள் அவனின் T.A .C செயின் ஆப் ஹோட்டல்ஸ் அலுவலக வளாகத்திற்குள் காரை செலுத்தினான் . அவனின் கார் சத்தத்தை வைத்தே , அவனின் காரியதரிசி மித்ரா தயாரான நிலையில் இருந்தாள் .

    “ இவன் எந்த நேரத்துல என்ன மாதிரி ரியாக்ட் செய்வானோ , இவனோட பெரிய தொல்லை . எல்லாம் பக்காவா இருக்கணும் , கொஞ்சம் தாமதமானாலும் பிடிச்சு திட்ட வேண்டியது “ .

    “ இவன் சிரிக்க காசு கேட்குற ஆள் வேற , எப்போ பார்த்தாலும் மூஞ்சை உம்னு வச்சு இருக்கான் . சிரிச்சா குறைஞ்சா போயிடுவான் , பார்க்க நல்லா இருக்கான் , இந்தியாவிலே பெரிய தொழிலதிபர் வேற , அந்த கெத்து தான் இவனை இப்படி இருக்க வைக்குது போல “ .

    “ கொஞ்சம் சிரிச்சிகிட்டே , பாராட்டி , தட்டி வேலை வாங்கினா நல்லா இருக்கும் , நமக்கும் வேலை பார்க்க . எப்போ பார்த்தாலும் ரோபட் மாதிரியே , எல்லோரையும் நடத்துறது “ என்று எப்பொழுதும் போல் இன்றும் மனதிற்குள் கருவிக் கொண்டு இருந்தாள் மித்ரா .

    அதற்குள் அருள் அவனின் அலுவலக அறைக்குள் செல்வதை பார்த்துவிட்டு , மித்ரா அவன் கேட்க போகும் அணைத்து விவரங்களையும் பைல் செய்து அவனின் அழைப்புக்காக காத்து இருந்தாள் .

    “ மிஸ் மித்ரா அந்த சிங்கப்பூர் ப்ராஜெக்ட் சம்மந்தப்பட்ட டிடைல்ஸ் எல்லாம் , எடுத்துட்டு வாங்க “ என்று இண்டர்காம் வழியாக அருள் செய்தி சொல்லவும் , மித்ரா அதை எடுத்துக் கொண்டு அவனின் அறைக்கு சென்றாள் .

    “ குட் மார்னிங் சார் , இதோ நீங்க கேட்ட டிடைல்ஸ் “ என்று அவன் கேட்ட விவரத்தை கொடுத்தாள் .

    “ குட் மார்னிங் மிஸ் மித்ரா , அப்புறம் இன்னைக்கு உள்ள மீட்டிங் எல்லாம் சொல்லுங்க “ .

    “ சார் மதியம் ஒரு மணிக்கு , நம்ம மெயின் பிரான்ச் ஹோட்டல் ல மிஸ்டர் நந்தகுமார் கூட ஒரு மீட்டிங் . அப்புறம் மாலை அஞ்சு மணிக்கு அந்த சிங்கப்பூர் clients கூட , omr ரோடு ல இருக்கிற நம்ம பீச் வியூ ஹோட்டல் ல மீட்டிங் சார் “ என இன்று அவனுக்குரிய முக்கியமான மீட்டிங் பட்டியலை கூறி முடித்தாள் மித்ரா .

    “ ஒ , சரி அப்புறம் நாளைக்கு அந்த அனாதை ஆஸ்ரமம் ல இருக்கிற குழந்தைகளுக்கு , நம்ம தாம்பரம் ரிசார்ட் கார்டன் ஹோட்டல் ல தான் மூணு வேளை சாப்பாடு கொடுக்க ஏற்பாடு செய்ய சொல்லி இருக்கேன் “.

    “ அங்க அந்த இன்சார்ஜ்க்கு கால் பண்ணி , எல்லாம் சரியா இருக்கணும்னு சொல்லிருங்க . இல்லைனா அடுத்து என்ன நடக்கும்ன்னு உங்களுக்கு தெரியும் , தெளிவா சொல்லிடுங்க “ என்று அருள் அழுத்தி கூறவும் , மித்ரா புரிந்ததற்கான அடையாளாமாக தலையை ஆட்டினாள் .

    “ மிஸ் மித்ரா நாம ரெண்டு நாள் சிங்கப்பூர் பயணம் போகணும் , அதற்கான ஏற்பாடு எல்லாம் பண்ணுங்க . வர சனி , ஞாயிறு ரெண்டு நாள் டிக்கெட் புக் பண்ணிருங்க “ என்று அருள் கூறியதை கேட்டு அதிர்ந்தாள் .

    “ நாம அன்னைக்கு ஊருக்கு போக பிளான் போட்டோம் , இவன் அதை கெடுத்துடுவான் போலையே . எப்படியாவது இந்த ட்ரிப்பை போஸ்ட்போன் பண்ண வைக்கணும் , கடவுளே காப்பாத்து “ என்று கடவுளிடம் ஒரு மனு போட்டுவிட்டு அவனிடம் தன் தைர்யத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டாள் .

    “ சார் எனக்கு அன்னைக்கு ஊருக்கு போக வேண்டி இருக்கு , என் தங்கச்சி பிறந்தநாளைக்கு நான் அங்க இருக்கிறதா வாக்கு கொடுத்து இருக்கேன் . அதனால ட்ரிப்பை போஸ்ட்போன் பண்ணலாம் சார் , ப்ளீஸ் “ என்று கெஞ்சினாள் மித்ரா .

    “ உங்க தங்கச்சி பிறந்தநாள் , வருஷா வருஷம் வர தான் செய்யும் . இந்த ப்ராஜெக்ட் ரொம்ப முக்கியம் அது உங்களுக்கே தெரியும் , சோ நேரத்தை கடத்தாம நான் சொன்னதை செய்யுங்க முதல “ என்று கட்டளை இடவும் அவளும் மண்டையை உருட்டிவிட்டு வெளியேறி , அவன் சொன்னதை செய்ய தன் அறைக்குள் விரைந்தாள் .

    அதன் பின் அருள் அவனின் ஹோட்டல்களை எல்லாம் மேற்பார்வையிட , அவனின் மெய்காப்பாளர்களை அழைத்துக் கொண்டு சென்றான் . அங்கே இருக்கும் குறைகளை கண்டு அறிந்து அங்கே உள்ள மேனேஜரை பிடித்து வசை பாடிவிட்டு , அன்றைய மீட்டிங்கை வெற்றிகரமாக முடித்துவிட்டு வீடு திரும்பினான் .

    காலில் சக்கரம் கட்டி ஓடாத குறையாக தான் , அவனின் நாட்கள் ஓடிக் கொண்டு இருக்கும் . இப்படியே நாட்கள் ஓடி , வெள்ளி இரவு அருளும் , மித்ராவும் சிங்கப்பூர் செல்ல விமானம் ஏறினர் . அருள் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் அவளுக்கும் சேர்த்து எடுத்து வைக்க கூறியதால் , மித்ரா அவளுக்கு முதன் முதலாக எடுத்து இருந்தாள் .

    இருவருக்கும் அடுத்த அடுத்த சீட் , முதல் முறையாக அவனோடு இப்படி நெருக்கமாக அமர்ந்து பயணம் செய்வதால் மித்ரா ஏதோ முள்ளின் மேல் அமர்வது போல் அமர்ந்து இருந்தாள் .

    “ இவன் கூட இப்படி பேசாம உட்கார்ந்து வரணும்ன்னு வேண்டுதல் வாங்கிட்டு வந்து இருக்கேன் போல . ச எப்போவும் போல பின்னாடி எகனாமி கிளாஸ் எடுத்து இருந்தா , பக்கத்துல யார் கூடயாவது அரட்டை அடிச்சிட்டு , வெளியே விமானம் மேகத்துக்கு உள்ள போறதை ரசிச்சிகிட்டு வந்து இருக்கலாம் “.

    “ என்னைக்கும் இல்லாம , இந்த தடவை இப்படி எனக்கு பிசினஸ் கிளாஸ் ல சேர்த்து எடுக்க சொல்லும் பொழுதே சுதாரிச்சு இருக்கணும் . ஹ்ம்ம்.. இந்நேரம் நான் எங்க ஊருக்கு போய் இருக்க வேண்டியது , தங்கச்சி தான் பாவம் நான் வருவேன்னு ரொம்ப ஆசையா இருந்தா , இந்த தடியனால இந்த தடவையும் போக முடியல “ என்று மனதிற்குள் அவனை வறுத்து எடுத்தும் , தன்னை நினைத்து புலம்பிய படியும் இருந்தாள் மித்ரா .

    அருளோ இவளுக்கு நேர்மாறாக , யோசனையில் மூழ்கி இருந்தான் . அன்றைக்கு சிபி கூறிய தகவலை நினைத்து பார்த்து , அவன் ஒரு முடிவுக்கு வந்து இருந்தான் , அதை இந்த சிங்கப்பூர் பயணம் முடிந்த பிறகு செயாலாற்ற முடிவு செய்தான் .

    அதற்குள் விமான பணிப்பெண் , சிங்கப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க போவதாக அறிவிப்பு விடவும் , அருள் தன் நினைவுகளில் இருந்து திரும்பினான் .

    “ அப்பாட ஒரு வழியா தரை இறங்க போறோம் , எவ்வளவு நேரம் தான் இந்த உம்மணா மூஞ்சியோட ஒரே இடத்தில உட்கார்ந்துட்டு வரது . முதல ஹோட்டல்க்கு போய் நல்லா ஒரு ரெண்டு மணி நேரம் தூங்கி எழுந்துக்கணும் , அப்போ தான் கொஞ்சமாவது பிரெஷா இவன் கூட மீட்டிங் போக முடியும் “.

    “ அதுவும் கால் ல ஏதோ சக்கரம் கட்டி விட்ட மாதிரி தான் , எல்லாம் வேகமா போவான் , பின்னாடியே ஓடனும் . இவனை கல்யாணம் பண்ண போற புண்ணியவதி , இவன் கூட ஓட ரெடியா இருக்கணும் போல , பாவம் அந்த பொண்ணு “ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே சிறிது சத்தமாக முணுமுணுத்தது இவன் காதில் விழுந்தது .

    உடனே அருள் அவனறியாமல் முதல் முறையாக , அவளை முழுதாக தன் எக்ஸ் ரே கண்களால் பார்வையிட்டான் . தலையை வாரி தூக்கி வைத்து போட்ட கொண்டை , கண்ணுக்கு கண்ணாடி , நெற்றியில் சிறிது பெரிய சைஸ் பொட்டு , கழுத்தில் சிறிய டாலர் செயின் , கைத்தறி புடவை என்று நேர்த்தியாக ஒரு காரியதரிசி உடை போல் இருந்தவளை பார்த்து ஆச்சரியம் அடைந்தான் .

    அவன் பார்த்த , பழகிய காரியதரிசி அனைவரும் , தங்களை அலங்கரித்து கவரவே முயல்வர் . ஆனால் மித்ரா அந்த பதவிக்குரிய மரியாதையை கொடுக்கும் விதமாக உடை அணிந்து இருந்தது , அவனை வியக்க வைத்தது .

    அதற்குள் விமானம் தரையிறங்கவும் , பயணிகள் எல்லோரும் இறங்க தொடங்கினர் . அருளும் சுதாரித்து மித்ராவுடன் இறங்கினான் . அதன் பின் அங்கே அவர்களுக்கான பார்மாலிடீஸ் முடிந்து , வெளியே இவர்களுக்காக காத்து இருந்த வண்டியில் ஏறி ஹோட்டல் வந்து சேர்ந்தனர் .

    செக் இன் முடிந்து அவரவர் அறை சாவியை வாங்கிக் கொண்டு , லிப்டில் ஏறினர் . பத்தாவது தளத்தை அழுத்தி விட்டு , அருளும் , மித்ராவும் தளம் வரவும் அவர்களுக்கு அளிக்கப்பட அறைக்கு சென்றனர் .

    அறைக்குள் சென்றவுடன் அருள் தன் அலைபேசியை எடுத்து சிபிக்கு கால் செய்தான் . அந்த பக்கம் சிபி இவனின் அழைப்பை பார்த்து , உடனே ஒரு மறைவிடத்திற்கு சென்று எடுத்து பேச தொடங்கினான் .

    “ என்ன அண்ணா , இந்த நேரம் கூப்பிட்டு இருக்க . எதுவும் முக்கியமான விஷயமா , எதுவும் பிளான் போட்டு இருக்கியா அடுத்து “ என்று சிபி வேகமாக பேசுவதை வைத்து , அப்பொழுது தான் அருளுக்கு நேர வித்தியாசம் உரைத்தது .

    “ சாரி டா சிபி , நான் நேரத்தை கவனிக்கல . ஆமா டா பிளான் பண்ணிட்டேன் , அது விஷயமா தான் பேச கூப்பிட்டேன் . நீ அவளை கடத்த வேண்டாம் டா , அதுக்கு பதிலா அவளை லவ் பண்ணிரு . நமக்கு தெரியாத ரகசியம் நிச்சயம் அவ கிட்ட இருக்கு , அதுக்கான சாவி தான் காதல் “ .

    “ நீ அவளை காதலிக்கிற மாதிரி நடிச்சி , எப்படியாவது நமக்கு தேவையான சில உண்மைகளை கரைந்திடு . நீ இனி ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் , எக்காரணம் கொண்டும் உன்னோட பின்புலம் தெரிய கூடாது , புரியுதா “ என்று அருள் கூறிய திட்டத்தை கேட்டு சிபி ஒரு நிமிடம் திடுகிட்டான் .

    அதன் பின் சுதாரித்துக் கொண்டு அண்ணன் இட்ட கட்டளைக்கு கீழ்பணிந்து அவன் சொன்னதை செய்ய தயாரானான் . சிபியிடம் விஷயத்தை கூறிய பிறகு தான் , அருளுக்கு சற்று நிம்மதியாக இருந்தது .

    அதன் பின் சற்று தூங்கி எழுந்தவுடன் , அவனுக்கு தொழில் பற்றிய சிந்தனை ஆக்கிரமித்தது . உடனே அவனின் காரியதரிசி மித்ராவிற்கு அழைத்து , மீட்டிங்கிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய சொல்லிவிட்டு அவன் தயாராக சென்றான் .

    “ என்னடா இன்னும் போனை காணோமேன்னு இப்போ தான் நினைச்சேன் , அதுக்குள்ள இந்த ரோபோ கூப்பிட்டிருச்சு . இவன் கூப்பிடுவான் தெரிஞ்சு , நாம தயாரா இருந்தது நல்லதா போச்சு “ .

    “ மித்ரா இனி உன்னால ஒரு நிமிஷம் கூட உட்கார முடியாது , ரோபோ பின்னாடி வேகமா சுத்த தான் நேரம் சரியா இருக்கும் “ என்று எண்ணிக் கொண்டே மித்ரா அவனிட்ட கட்டளைகளை சரியாக செய்ய தன் அறையில் இருந்து வெளியேறினாள் .

     
    mala, star arokia viji, Sree and 4 others like this.
     
  5. kodiuma

    kodiuma Wings New wings LW WRITER

    Messages:
    773
    Likes Received:
    141
    Trophy Points:
    43
    நேராக அந்த ஹோட்டலில் உள்ள conference ஹாலிற்கு சென்று , மீட்டிங்கிர்க்கு தேவையான அணைத்து ஏற்பாடுகளையும் அங்கு உள்ள உதவியாளர் ப்ரியாவை வைத்து எல்லாவற்றையும் செய்து முடித்தாள் .

    “ மித்ரா அக்கா நீங்க ரொம்ப லக்கி ல , உங்க M .D செம ஸ்மார்ட் , ஹன்ட்சம் . அந்த கெத் இன்னும் சும்மா நச்சுனு இருக்கு , உங்களுக்கு அவர் கூடவே இருக்கிறது வரம் ல “ என்று அந்த ப்ரியா அருளை ஸ்லாகித்து பேசவும் , மித்ராவிற்கு சிரிப்பு வந்தது .

    “ ப்ரியா நீ அவன் கூட ஒரு மணி நேரம் இருந்து பாரு , துண்டை காணோம் , துணியை காணோம்னு ஓடிருவ . அந்த அளவுக்கு செம கோவம் வரும் , அழுத்தமா ஒரு பார்வை பார்த்தாலே எல்லோரும் அலெர்ட் ஆகிருவாங்க தெரியுமா “.

    “ கிட்ட தட்ட ஒரு ரோபோ அவன் , எப்போவும் கால் ல சக்கரம் கட்டி ஓடிகிட்டே இருக்கிற ஒரு பக்கா தொழிலதிபன் . அவன் கூட இருக்கிறவங்களும் , அவனை மாதிரியே ஒடனும்ன்னு நினைக்கிறவன் “.

    “ இன்னைக்கு என் தங்கச்சி பிறந்தநாள் ஊருக்கு போகணும்ன்னு லீவ் கேட்டேன் , அதுக்கு கூட லீவ் போட பெர்மிஷன் இல்லை . இவனுக்கு வர பொண்டாட்டி தான் பாவம் , இவன் கூட ரோபோ மாதிரி அவளும் மாறனும் “ என்று மித்ரா கூறியதை கேட்டு ப்ரியா வாயை பிளந்தாள் .

    “ அட கடவுளே , இப்படியா அக்கா ஒருத்தர் இருப்பார் . ஹ்ம்ம்.. உண்மைக்குமே நீங்க பாவம் தான் அக்கா , ஆமா எத்தனை மாசமா நீங்க இந்த வேலையை பார்க்குறீங்க “ என்று பிரியா கேட்கவும் அவள் சிரித்தாள் .

    “ நான் மூணு வருஷமா , இந்த வேலையை பார்க்குறேன் டா ப்ரியா . என் குடும்பத்துக்காக மட்டும் தான் நான் இன்னும் இந்த வேலை ல இருக்கேன் டா , இல்லைனா இந்நேரம் நான் எஸ்கேப் ஆகிருப்பேன் “ என்று கூறி கண்ணடித்து சிரிக்கவும் , ப்ரியாவும் சேர்ந்து சிரித்தாள் .

    அதற்குள் மீட்டிங்கிர்க்கு அனைவரும் வரவும் , மித்ரா மீண்டும் பம்பரமாக அருள் கோடிட்ட தகவல்களை சேகரித்து வைத்துக் கொண்டாள் . மீட்டிங் முடிந்தவுடன் , அதை அவன் பார்வைக்கு வைத்தாள் .

    “ மிஸ் மித்ரா மீட்டிங் வெற்றிகரமா , நமக்கு சாதகமா முடிஞ்சிருக்கு . இந்த தகவல்களை எல்லாம் ஒரு டாகுமென்ட் மாதிரி தயாரித்து , நாளைக்கு வக்கீல் மூலமா இதை எல்லாம் லீகலாக்கணும் “ .

    “ இன்னைக்கு வேற எந்த வேலையும் இல்லை , உங்க பர்சனல் வேலை எதுவும் இருந்தா அதை பாருங்க . நாளைக்கு காலையில் வக்கீல் முன்னாடி சைன் பண்ணிட்டு , நாம நாளைக்கே சென்னைக்கு போகலாம் . அப்புறம் இங்க இருக்கிற ஒரு நம்பிக்கையான ஆளை வைத்து வேலையை ஆரம்பிக்கணும் “ என்று அருள் கூறியதை கேட்டு அவள் ஆனந்தம் அடைந்தாள் .

    அவனிடம் மண்டையை உருட்டிவிட்டு , அவன் கூறிய வேலைகளை வேகமாக முடித்துவிட்டு , அவன் பார்வைக்கு வைத்து சரி பார்த்து முடித்தவுடன் அதை அவள் பத்திரமாக தன் பைலில் எடுத்து வைத்து விட்டு தன் அறைக்கு விரைந்தாள் .

    “ அப்பாடி நான் கூட டைம் கிடைக்காதோன்னு நினைச்சேன் , ஒரு வழியா டைம் கிடைச்சு அவனும் போயிட்டு வான்னு அனுமதி கொடுத்துட்டான் “ என்று அவன் கொடுத்த அரை நாள் லீவை நினைத்து சந்தோசம் அடைந்தாள் .

    அதன் பின் வேகமாக திரும்பவும் ஒரு குளியலை போட்டுவிட்டு , அவள் நீண்ட தலை கூந்தலில் ஒரு கிளிப்பை மட்டும் மாட்டிவிட்டு , முடியை படர விட்டாள் . அவளுக்கு பிடித்த டாப்ஸ் , ஸ்கர்ட் அணிந்து கொண்டாள் .

    முகத்திற்கு சிறிது காம்பக் பவுடர் போட்டுவிட்டு , நெற்றியில் ஒரு பொட்டு வைத்து , உதட்டுசாயம் மட்டும் போட்டுவிட்டு கண்ணாடியில் தன்னை சரி பார்த்துக் கொண்டாள் . அதன் பின் ஒரு கையில் வாட்ச் , மற்றொரு கையில் ஒரு ஜோடி வளையல் அணிந்து கொண்டு தன் செல்பேசி , கைப்பை சகிதம் அவள் அறையில் இருந்து வெளியேறினாள் .

    முதலில் அங்கு உள்ள ஒரு விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு , அதன் பின் அவர்கள் தங்கி இருந்த ஹோட்டல் அருகே உள்ள மாலில் சுற்ற தொடங்கினாள் . அங்கே உள்ள கண்கவர் பொருட்களை எல்லாம் பார்த்து ரசித்தாள் .

    அதன் பின் சில இடங்களில் தன்னை செல்பி எடுத்து , வாட்ஸ் அப்பில் தன் தங்கைக்கு அதை அனுப்பி வைத்தாள் . அதற்க்கு அவள் தங்கையிடம் இருந்து கோவமாக ஒரு ஸ்மைலி வந்து சேர்ந்தது .

    அதை பார்த்து சிரித்துக் கொண்டாள் மித்ரா , அதன் பின் அந்த மாலில் தன் தங்கைக்கு பிடித்த மாதிரி சில கிளிப் , கம்மல் என பார்த்து பார்த்து வாங்கி குவித்தாள் . அதன் பின் நேரமாதலால் , அவள் அந்த மாலில் இருந்து வெளியேறி , ஹோட்டலுக்குள் நுழைந்தாள் .

    “ சார் இங்க துணையோட வர தான் அனுமதி , நீங்க தனியா எல்லாம் போக முடியாது சார் “ என்று அந்த ஹோட்டலில் உள்ள பப்பில் வெளியே இருந்த அடியாட்கள் போல் இருந்தவர்கள் , அருளை உள்ளே விட மறுத்தனர் .

    அப்பொழுது அவன் தன் கண்களை சுழல விட்டான் , யாரும் தனியாக தென்படுகிறார்களா என்று . எல்லோரும் அவரவர் ஜோடிகளுடன் சுற்றி திரிந்து கொண்டு இருந்தனர் . அவனுக்கு இருந்த எரிச்சலில் யாரையாவது இழுத்துக் கொண்டு உள்ளே செல்லலாம் போல் தோன்றியது .

    அப்பொழுது ஒரு ஓரத்தில் மின்தூக்கிக்காக காத்துக் கொண்டு இருந்த மித்ராவை பிடித்து இழுத்துக் கொண்டான் . அவளை அவன் சரியாக பார்க்கவில்லை , தனியாக ஒரு பெண் நிற்கவும் அவனின் அவசரத்திற்கு அவளை இழுத்து சென்றான் .

    “ இதோ என் துணை “ என்று அவர்களிடம் கூறிவிட்டு அவளோடு உள்ளே சென்றான் .

    கண்களை சுழல விட்டவன் , கண் ஒரு இடத்தில் நிலைத்து நின்றது . நேராக அங்கே சென்று , அந்த இளைஞனை போட்டு அடி பின்னி எடுத்து விட்டான் .

    “ ஏன்டா நாயே உனக்கு டைம் பாஸ் பண்ண , என் தங்கச்சி தான் கிடைத்தாளா . நீ மினிஸ்டர் பையன்னா , என்ன வேண்ணாலும் மிரட்டுவியா அவளை . குடிச்சிட்டு இப்படி கும்மாளம் அடிக்கிற உனக்கு , காதல்ன்னா என்னனு தெரியுமா டா ராஸ்கல் “ .

    “ இன்னொரு தடவை நீ என் தங்கச்சியை மிரட்டி , என்னை காதல் பண்ணுன்னு சொல்லி மிரட்டுரதை பார்த்தேன் , அன்னைக்கு தான் உனக்கு கடைசி நாள் தெரிஞ்சிக்கோ “ என்று அவனை மேலும் அடித்துவிட்டு வெளியேறினான் அருள் .

    கோபத்துடன் வெளியேறியவனை பின் தொடர்ந்து வந்த மித்ரா , அவன் மின்தூக்கியில் ஏறவும் , இவளும் பின் தொடர்ந்து சென்றாள் . பத்தாவது தளத்தை அழுத்திவிட்டு , அவன் நிமிரும் பொழுது அவன் எதிரே உக்கிரமாக நின்று கொண்டு இருந்தாள் மித்ரா .

    பூவின் ரகசியம் வரும் ...


     
    priyaganeshan, mala, Ishwarya and 6 others like this.
     
  6. kodiuma

    kodiuma Wings New wings LW WRITER

    Messages:
    773
    Likes Received:
    141
    Trophy Points:
    43
    ஹாய் நண்பர்களே நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் உங்களை சந்திக்க வந்துவிட்டேன் . உங்கள் கருத்துகளை எனக்கு தெரிவித்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் .. இனி வாரம் இரண்டு பதிவு கண்டிப்பாக இருக்கும் ...
     
     
  7. kodiuma

    kodiuma Wings New wings LW WRITER

    Messages:
    773
    Likes Received:
    141
    Trophy Points:
    43
     
  8. kodiuma

    kodiuma Wings New wings LW WRITER

    Messages:
    773
    Likes Received:
    141
    Trophy Points:
    43
    அத்தியாயம் – 3

    இடம் : கோயம்புத்தூர் மதுஸ்ரீ வீடு ..

    காலை நேரம் அந்த வீட்டு ஆட்கள் பம்பரமாக சுற்றி கொண்டு இருந்தனர் . மதுஸ்ரீயின் பெரியப்பா மகள் லக்ஷ்மிக்கு , அன்று நிச்சய சடங்கு வீட்டில் வைத்து இருந்தனர் .

    “ ஏய் சரசு , அந்த பெரிய குத்து விளக்கை இங்க எடுத்து வை . டேய் ராசப்பா , அந்த குமாரு பையன் பூ வாங்கிட்டு வர எப்போவோ போனான் , இன்னும் ஆளை காணோம் போய் என்னனு பாரு “ என்று வள்ளியம்மை மதுவின் அன்னை அங்கு உள்ள வேலையாட்களை எல்லாம் விரட்டி வேலை வாங்கிக் கொண்டு இருந்தார் .

    “ என்னமா வள்ளி , காலையில் இருந்து ஓடிகிட்டே இருக்க , கொஞ்சம் ஒய்வு எடு மா “ என்று அங்கு உள்ள வயதான மூதாட்டி ஒருவர் அவரை ஒய்வு எடுக்க கூறினார் .

    “ இல்லை பெரியம்மா , லக்ஷ்மிக்கு அம்மா , அப்பா ஸ்தானத்துல இருந்து நாங்க தான எல்லாம் செய்றோம் . எல்லாம் சரியா செய்யணுமே , லக்ஷ்மி எனக்கு பொண்ணு மாதிரி அவ சடங்கு எந்த ஒரு குறையும் இல்லாம நடக்கணும் “.

    “ அதனால தான் , நானே எல்லாத்தையும் மேற்பார்வை பார்க்குறேன் பெரியம்மா “ என்று வள்ளியம்மை கூறினார் .

    அதன் பின் வேலைகள் எல்லாம் துரித கதியில் மடமடவென நடந்து கொண்டு இருந்தது . வெளி வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு , உள்ளே வந்த சிங்காரமுத்து வீட்டின் அலங்காரங்களை எல்லாம் பார்த்து அசந்து விட்டார் .

    “ வள்ளிமா நம்ம வீடு தானா இது , ம்ம்.. அசத்திட்ட பிள்ளை . என்ற பொண்டாட்டினா என்ன சும்மாவா , காளிமுத்து அண்ணே பார்த்தீங்களா , லஷ்மி நிச்சயம் இன்னைக்கு ஜாம் ஜாம்னு நடக்கும் “ .

    “ வர போற விருந்தாளிகள் எல்லாம் அசந்து இருக்க போறாங்க . உங்க பொண்ணு நிச்சயம் இன்னைக்கு சிறப்பா இருக்க போகுது பாருங்க “ என்று சிங்காரமுத்து தன் அண்ணன் காளிமுத்துவிடம் ஸ்லாகித்து பேசினார் .

    “ ஆமாம் தம்பி , எல்லாம் உங்க ரெண்டு பேரோட முயற்சினால தான் . ஆமா உன் பொண்ணு மதுஸ்ரீ கண்ணுலையே படலையே , பிள்ளை நேத்தே வந்திருச்சு ல “ என்று மதுஸ்ரீ பற்றி விசாரித்தார் காளிமுத்து .

    “ ஆமாம் ல மது எங்க மா வள்ளி , பிள்ளையை இன்னும் பார்க்க கூட இல்லை “ என்று மதுவை பற்றி விசாரித்தார் சிங்காரமுத்து .

    “ அவ காலையிலே வழக்கம் போல , அவ பிள்ளையாரை பார்க்க போயிட்டாங்க இப்போ வர நேரம் தான் . நேத்தே உங்க ரெண்டு பேரையும் பிள்ளை தேடினா , நீங்க வர தான் தாமதம் ஆகிடுச்சு “ என்று வள்ளி கூறினார் .

    “ ஒ சரி சரி , பிள்ளை வரதுக்குள்ள நாங்க மத்த வேலையை எல்லாம் முடிச்சிட்டு இங்க முன்னாடி நடு ஹால் ல உட்கார்ந்து இருக்கோம் “ என்று கூறி சென்றனர் இருவரும் .

    தன் இஷ்ட தெய்வமான பிள்ளையாரை பார்த்து விட்டு , வீடு வந்த மதுவை வரவேற்றனர் ஹாலில் இருந்த அவளின் அப்பாவும் , பெரியப்பாவும் .

    “ அப்பா , பெரியப்பா எப்படி இருக்கீங்க “ என்று அவர்களை பார்த்த உற்சாகத்தில் அவர்களை கட்டிக் கொண்டாள் .

    “ நாங்க நல்லா இருக்கோம் தாயி , நீ என்ன இப்படி இளைச்சு போயிட்ட . பேசாம இங்கேயே வந்திடு மா , இங்க நம்ம ஊர் ல தான் ஏகப்பட்ட காலேஜ் இருக்குதுல “ என்று அவளை கனிவாக விசாரித்துக் கொண்டு இருந்தார் காளிமுத்து , அவளின் பெரியப்பா .

    “ அச்சோ பெரியப்பா , நான் ஒன்னும் அங்க வேலை மட்டும் பார்க்கிறதுக்காக போகல . என்னோட படிப்புக்காகவும் தான் அங்க போய் இருக்கேன் , அங்க தான் என்னோட குரு இருக்காங்க . அவங்க கிட்ட தான் , என் படிப்பு சம்மந்தமான உதவி கேட்குறேன் “.

    “ இன்னும் ஒரு நாலு மாசம் தான் , அதுக்கு அப்புறம் நான் இங்கேயே வந்திடுவேன் “ என்று மது கூறியதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தார் .

    “ அது எல்லாம் சரி மா , அடுத்து உனக்கு தான் மாப்பிளை பார்க்கிறதா இருக்கேன் . அதனால சீக்கிரம் உன் படிப்பை முடிச்சிட்டு வா , இப்போவே லேட்டு . எங்க காலத்துல எல்லாம் இப்படி இல்லை “.

    “ ஏதோ மினிஸ்டர் பொண்ணு , டாக்டர் பட்டம் வாங்கி இருக்கேனு நாலு பேர் பேசுவாங்கன்னு தான் இத்தனை நாள் உன் போக்குல விட்டேன் . இனி லக்ஷ்மி கல்யாணம் முடிஞ்ச உடனே , அடுத்து உனக்கு தான் பண்ணனும் “ என்று அவள் தந்தை கூறியதை கேட்டு மது உள்ளுக்குள் புகைந்தாலும் , வெளியே சிரித்த முகமாக அவளுக்கு பதில் அளிக்க தொடங்கினாள் .

    “ அட என்ன அப்பா , அதான் நான் முதலிலே நீங்க போட்ட கண்டிஷன்க்கு எல்லாம் ஒத்துகிட்டேனே . நான் அதை மறப்பேனா அப்பா , நான் அம்மாவை போய் பார்த்துட்டு அப்படியே நானும் தயாராகிட்டு வரேன் அப்பா “ என்று அவர்களிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு , தன் அம்மாவை காண சென்றாள் .

     
     
  9. kodiuma

    kodiuma Wings New wings LW WRITER

    Messages:
    773
    Likes Received:
    141
    Trophy Points:
    43
    அத்தியாயம் – 3

    இடம் : கோயம்புத்தூர் மதுஸ்ரீ வீடு ..

    காலை நேரம் அந்த வீட்டு ஆட்கள் பம்பரமாக சுற்றி கொண்டு இருந்தனர் . மதுஸ்ரீயின் பெரியப்பா மகள் லக்ஷ்மிக்கு , அன்று நிச்சய சடங்கு வீட்டில் வைத்து இருந்தனர் .

    “ ஏய் சரசு , அந்த பெரிய குத்து விளக்கை இங்க எடுத்து வை . டேய் ராசப்பா , அந்த குமாரு பையன் பூ வாங்கிட்டு வர எப்போவோ போனான் , இன்னும் ஆளை காணோம் போய் என்னனு பாரு “ என்று வள்ளியம்மை மதுவின் அன்னை அங்கு உள்ள வேலையாட்களை எல்லாம் விரட்டி வேலை வாங்கிக் கொண்டு இருந்தார் .

    “ என்னமா வள்ளி , காலையில் இருந்து ஓடிகிட்டே இருக்க , கொஞ்சம் ஒய்வு எடு மா “ என்று அங்கு உள்ள வயதான மூதாட்டி ஒருவர் அவரை ஒய்வு எடுக்க கூறினார் .

    “ இல்லை பெரியம்மா , லக்ஷ்மிக்கு அம்மா , அப்பா ஸ்தானத்துல இருந்து நாங்க தான எல்லாம் செய்றோம் . எல்லாம் சரியா செய்யணுமே , லக்ஷ்மி எனக்கு பொண்ணு மாதிரி அவ சடங்கு எந்த ஒரு குறையும் இல்லாம நடக்கணும் “.

    “ அதனால தான் , நானே எல்லாத்தையும் மேற்பார்வை பார்க்குறேன் பெரியம்மா “ என்று வள்ளியம்மை கூறினார் .

    அதன் பின் வேலைகள் எல்லாம் துரித கதியில் மடமடவென நடந்து கொண்டு இருந்தது . வெளி வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு , உள்ளே வந்த சிங்காரமுத்து வீட்டின் அலங்காரங்களை எல்லாம் பார்த்து அசந்து விட்டார் .

    “ வள்ளிமா நம்ம வீடு தானா இது , ம்ம்.. அசத்திட்ட பிள்ளை . என்ற பொண்டாட்டினா என்ன சும்மாவா , காளிமுத்து அண்ணே பார்த்தீங்களா , லஷ்மி நிச்சயம் இன்னைக்கு ஜாம் ஜாம்னு நடக்கும் “ .

    “ வர போற விருந்தாளிகள் எல்லாம் அசந்து இருக்க போறாங்க . உங்க பொண்ணு நிச்சயம் இன்னைக்கு சிறப்பா இருக்க போகுது பாருங்க “ என்று சிங்காரமுத்து தன் அண்ணன் காளிமுத்துவிடம் ஸ்லாகித்து பேசினார் .

    “ ஆமாம் தம்பி , எல்லாம் உங்க ரெண்டு பேரோட முயற்சினால தான் . ஆமா உன் பொண்ணு மதுஸ்ரீ கண்ணுலையே படலையே , பிள்ளை நேத்தே வந்திருச்சு ல “ என்று மதுஸ்ரீ பற்றி விசாரித்தார் காளிமுத்து .

    “ ஆமாம் ல மது எங்க மா வள்ளி , பிள்ளையை இன்னும் பார்க்க கூட இல்லை “ என்று மதுவை பற்றி விசாரித்தார் சிங்காரமுத்து .

    “ அவ காலையிலே வழக்கம் போல , அவ பிள்ளையாரை பார்க்க போயிட்டாங்க இப்போ வர நேரம் தான் . நேத்தே உங்க ரெண்டு பேரையும் பிள்ளை தேடினா , நீங்க வர தான் தாமதம் ஆகிடுச்சு “ என்று வள்ளி கூறினார் .

    “ ஒ சரி சரி , பிள்ளை வரதுக்குள்ள நாங்க மத்த வேலையை எல்லாம் முடிச்சிட்டு இங்க முன்னாடி நடு ஹால் ல உட்கார்ந்து இருக்கோம் “ என்று கூறி சென்றனர் இருவரும் .

    தன் இஷ்ட தெய்வமான பிள்ளையாரை பார்த்து விட்டு , வீடு வந்த மதுவை வரவேற்றனர் ஹாலில் இருந்த அவளின் அப்பாவும் , பெரியப்பாவும் .

    “ அப்பா , பெரியப்பா எப்படி இருக்கீங்க “ என்று அவர்களை பார்த்த உற்சாகத்தில் அவர்களை கட்டிக் கொண்டாள் .

    “ நாங்க நல்லா இருக்கோம் தாயி , நீ என்ன இப்படி இளைச்சு போயிட்ட . பேசாம இங்கேயே வந்திடு மா , இங்க நம்ம ஊர் ல தான் ஏகப்பட்ட காலேஜ் இருக்குதுல “ என்று அவளை கனிவாக விசாரித்துக் கொண்டு இருந்தார் காளிமுத்து , அவளின் பெரியப்பா .

    “ அச்சோ பெரியப்பா , நான் ஒன்னும் அங்க வேலை மட்டும் பார்க்கிறதுக்காக போகல . என்னோட படிப்புக்காகவும் தான் அங்க போய் இருக்கேன் , அங்க தான் என்னோட குரு இருக்காங்க . அவங்க கிட்ட தான் , என் படிப்பு சம்மந்தமான உதவி கேட்குறேன் “.

    “ இன்னும் ஒரு நாலு மாசம் தான் , அதுக்கு அப்புறம் நான் இங்கேயே வந்திடுவேன் “ என்று மது கூறியதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தார் .

    “ அது எல்லாம் சரி மா , அடுத்து உனக்கு தான் மாப்பிளை பார்க்கிறதா இருக்கேன் . அதனால சீக்கிரம் உன் படிப்பை முடிச்சிட்டு வா , இப்போவே லேட்டு . எங்க காலத்துல எல்லாம் இப்படி இல்லை “.

    “ ஏதோ மினிஸ்டர் பொண்ணு , டாக்டர் பட்டம் வாங்கி இருக்கேனு நாலு பேர் பேசுவாங்கன்னு தான் இத்தனை நாள் உன் போக்குல விட்டேன் . இனி லக்ஷ்மி கல்யாணம் முடிஞ்ச உடனே , அடுத்து உனக்கு தான் பண்ணனும் “ என்று அவள் தந்தை கூறியதை கேட்டு மது உள்ளுக்குள் புகைந்தாலும் , வெளியே சிரித்த முகமாக அவளுக்கு பதில் அளிக்க தொடங்கினாள் .

    “ அட என்ன அப்பா , அதான் நான் முதலிலே நீங்க போட்ட கண்டிஷன்க்கு எல்லாம் ஒத்துகிட்டேனே . நான் அதை மறப்பேனா அப்பா , நான் அம்மாவை போய் பார்த்துட்டு அப்படியே நானும் தயாராகிட்டு வரேன் அப்பா “ என்று அவர்களிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு , தன் அம்மாவை காண சென்றாள் .

     
    star arokia viji, mala and Deepa123 like this.
     
  10. kodiuma

    kodiuma Wings New wings LW WRITER

    Messages:
    773
    Likes Received:
    141
    Trophy Points:
    43
    அங்கே அவர்கள் வீட்டின் பின்னால் இருக்கும் தோட்டத்தை , அலங்கரித்துக் கொண்டு இருந்தவர்களை எல்லாம் வேலை வாங்கிக் கொண்டு இருந்த தன் அம்மா வள்ளியை பார்த்து இரக்கம் கொண்டாள் . அவரின் அருகே சென்று , அவர் கை பிடித்து அங்கே போடப்பட்டு இருந்த நாற்காலியில் அமர வைத்தாள் .

    “ அம்மா நீங்க எவ்வளவு நேரம் , இப்படியே சுத்திக்கிட்டு இருக்க போறீங்க . கொஞ்சம் உங்க உடம்பையும் பார்க்க வேண்டாமா , இங்க தான் இதை எல்லாம் பார்க்க இத்தனை பேர் இருக்காங்கள அப்புறம் என்ன “ என்று செல்லமாக அதட்டிக் கொண்டு இருந்தாள் .

    “ நல்லா சொல்லு உங்க அம்மாவுக்கு , இதை தான் நானும் உங்க அம்மாவுக்கு சொல்லிக்கிட்டு இருக்கேன் . எங்க கேட்குறா , கேட்டா லட்சுமிக்கு எந்த மன குறையும் வந்திட கூடாதுங்கறா “ என்று அங்கு வந்த அந்த மூதாட்டி , மதுவிடம் கூறிவிட்டு சென்றார் .



    “ அம்மா லக்ஸ்க்கு எந்த கஷ்டமும் வராது , எல்லாம் சரியா தான் நடக்குது . இப்போ தான் அப்பாவும் , பெரியப்பாவும் எல்லாம் நல்லா தான் ஏற்பாடு நடக்குது சொன்னாங்கள . அப்புறம் என்ன கொஞ்ச நேரம் போய் ஒய்வு எடுங்க , இங்க இருக்கிறவங்க இதை எல்லாம் பார்த்துப்பாங்க “ என்று தாயிடம் அன்பு கட்டளையிட்டாள் மது .

    “ என்ன தான் இருந்தாலும் நம்ம வீட்டு விசேஷம் , நாம தான் எல்லாம் சரியா இருக்குதான்னு பார்க்கணும் மது மா . பாவம் லட்சுமிக்கு அம்மா இல்லை , அவ வாழ்கையில் நடக்க போற நல்லதுக்கு எல்லாம் அவளுக்கு பிடித்த மாதிரி சரியா இருக்கணுமேன்னு தான் நான் பார்க்குறேன் “ என்று வள்ளி அவளுக்கு விளக்கம் அளித்தார் .

    “ அம்மா நீங்க சொல்லுறது எனக்கு நல்லா புரியுது , ஆனா நாளைக்கு எனக்கும் இந்த மாதிரி விசேஷம் வரும் பொழுது நீங்க ஓடி ஆடி பார்க்க வேண்டாமா அம்மா . அதுக்கு தான் சொல்லுறேன் , கொஞ்சம் உங்க உடம்பையும் கவனிங்கன்னு”.

    “ வீட்டு ஆளா நான் வேணும்னா , மிச்ச இருக்கிற வேலை எல்லாம் சரியா நடக்குதான்னு பார்க்குறேன் . இப்போ சமத்தா நீங்க போய் ஓய்வு எடுங்க , சுமதி அக்கா அம்மாவை கூட்டிட்டு போங்க “ என்று அங்கே இருந்து தன் அம்மாவை ஓய்வு எடுக்க அனுப்பினாள் .

    “ ம்ம்.. இன்னும் இந்த மேடை அலங்காரமும் , அந்த buffet முறை சாப்பாடு வைக்க தேவையான டேபிள்ஸ் வைக்க மட்டும் பார்கிறது ஒன்னு தான் பாக்கி “ என்று எண்ணிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தவள் அங்கே பாதுகாப்புக்கு இருந்த சிபியை பார்த்து , அவள் கண்கள் பளிச்சிட்டது .

    “ ஹலோ மிஸ்டர் சிபி , கொஞ்சம் இங்கே வாங்க “ என்று அதிகாரத் தோரணையில் மது அவனை அழைத்தாள் .

    “ இந்த லூசுக்கு என்ன ஒரு அகங்காரம் , என்னை இப்படி அதிகாரமா கூப்பிடுறா . போயும் , போயும் இவளை போய் என்னை காதல் செய்ய சொன்னானே என் அண்ணன் . முதல இப்படி அதிகாரமா கூப்பிடுற வேலை எல்லாம் வேண்டாம்னு , கட் அண்ட் ரைட்டா சொல்லணும் “ என்று எண்ணிக் கொண்டே அவளை நோக்கி முறைத்துக் கொண்டே சென்றான் சிபி .

    “ இங்க இன்னும் சில வேலை எல்லாம் பாக்கி இருக்கு , அது எல்லாம் சரியா நடக்குதான்னு பாருங்க . அப்புறம் மினிஸ்டர் வீட்டு விசேஷம் , பாதுகாப்பு எல்லாம் சரியா இருக்கணும் . இல்லைனா வேலையை விட்டு தூக்க சொல்லிருவேன் , பார்த்து நடந்துக்கோங்க “ என்று மது , அவன் பேச இடம் கொடுக்காமல் எச்சரித்து விட்டு சென்றாள் .

    “ இவளை “ என்று பல்லை மட்டும் கடிக்க முடிந்தது அவனால் அப்பொழுது .

    தன் அண்ணன் கூறிய வார்த்தைக்காக , அவன் இவ்வளவு தூரம் பொறுமையாக இருக்கிறான் . இல்லையென்றால் அவனுக்கு இருக்கும் பழி வெறியில் , என்ன செய்து இருப்பானோ .

    அங்கே மேடை அலங்காரம் , மற்ற வேலைகள் எல்லாம் சரியாக நடக்குமாறு அவன் கண்ணசைவில் ஆட்களை நியமித்து விட்டு அவன் பாதுகாப்பு ஏற்பாடை கவனிக்க சென்றான் .

    சரியாக விழா தொடங்கும் நேரத்தில் தான் , அங்கே மதுஸ்ரீ வந்து சேர்ந்தாள் . அழகிய பச்சை நிறத்தில் உள்ள , ஒரு சில்க் காட்டன் பட்டு புடவை அணிந்து , அதற்க்கு பொருத்தமான அணிகலன் அணிந்து ஒரு இளவரசி போல் நடந்து வந்தவளை பார்த்த சிபி அதிர்ந்தான் .

    இதுவரை அவளை ஒரு சாயம் போன ஜீன்ஸ் , ஸ்கர்ட் பாவாடை , ஒரு பர்முடாஸ் என்று ஒரு ரவுடி மங்கம்மா போல் கண்ணில் ஒரு அலட்சிய பார்வை உள்ளவளை தான் பார்த்து இருக்கிறான் . இப்பொழுது புடவையில் பாந்தமாக , அதுவும் தலை முடியை நன்றாக பின்னிவிட்டு , பூ சூடி சாந்தம் தவழும் சிரித்த முகமாக இருந்தவளை பார்த்து அதிராமல் என்ன செய்வான் சிபி .

    “ இந்த மாதிரியே எப்போவும் இருந்தா என்ன மது , இப்போ பார்கிறதுக்கு நீ அப்படியே மகாலட்சுமி மாதிரியே இருக்க “ என்று அங்கு அவளின் அன்னை கூறிவிட்டு அவளுக்கு சுத்தி போடவும் , அவள் பதிலுக்கு முறைத்தாள் .

    “ இத்தனை நாள் அப்போ நான் பத்ரகாளியா இருந்தேன்னா என்ன அம்மா , நீங்க நலங்கு வைக்க போங்க உங்களை கூப்பிடுறாங்க அங்க “ என்று தாயை அங்கு அனுப்பிவிட்டு , பெருமூச்சு விட்டாள் .

    பக்கத்தில் இருந்த சிபி இதை கேட்டு , அவனை அறியாமல் சிரித்து விட்டான் . அவனின் சிரிப்பு சத்தத்தில் திரும்பிய மது , அவனை பார்த்து முறைத்தாள் .

    “ என்ன சிரிப்பு , போய் வேலையை பாருங்க “ என்று சிடுசிடுத்துவிட்டு மேடையில் தன் குடும்பத்தாருடன் நின்றாள் .

    லக்ஷ்மியின் நிச்சய சடங்கு ஒரு பக்கம் மேடையில் நடந்து கொண்டு இருக்க , சிபி பாதுகாப்பை பலப்படுத்தி விட்டு , யாருமறியாமல் மதுஸ்ரீயின் அறைக்குள் சென்றான் . அறையை பார்த்த சிபி , ஒரு நிமிடம் அரண்டு விட்டான் .



    “ பொண்ணுங்க அறையை சுத்தமா வச்சு இருப்பாங்கன்னு சொல்லுவாங்க , இங்க அப்படியே தலைகீழா ல இருக்கு . அது சரி முதல அவ ஒரு பொண்ணு மாதிரியா நடந்துக்குறா , சரியான பஜாரி மாதிரி ல இருக்கா “.

    “ இங்க இன்னைக்கு தான் கொஞ்சம் அடக்கி வாசிச்சு இருக்கா , எப்போவும் இப்படி இருந்தா தேவலை “ என்று சிபி எண்ணிக் கொண்டே அறையை ஆராய்ந்தவன் , தன் எண்ணம் போகும் போக்கை கண்டு திடுகிட்டான் .

    “ சிபி இது சரி வராது , முதல இங்க உனக்கு உருப்படியான தகவல் இருக்கா என்னனு பாரு “ என்று தனக்கு தானே கூறிக் கொண்டு அறையை அலச தொடங்கினான் .

    ஒரு மணி நேரமாக அவன் அந்த அறையை அலசி இருக்கிறான் , ஆனால் அவனுக்கு தேவையான எந்த ஒரு தகவலும் அவனுக்கு கிட்டவில்லை . அங்கே விழா முடியும் தருவாயில் இருப்பதால் , உடனே அவன் அங்கே யாருமறியாமல் சென்று அவன் இடத்தில் நின்று கொண்டான் .

    மேடையில் லக்ஷ்மி சந்தோஷமாக அவளுக்கு நிச்சயம் செய்து இருக்கும் மாப்பிள்ளை சிவநந்தனுடன் பேசிக் கொண்டு இருந்தாள் . மதுவோ அவளின் அம்மா சொல்லுக்கிணங்க , வந்து இருக்கும் விருந்தினரோடு , முகத்தில் எரிச்சல் தெரியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு சிரித்து பேசிக் கொண்டு இருந்தாள் .

    அவளுக்கு எப்பொழுது தன் அறைக்கு சென்று உறங்குவோம் என்று இருந்தது , அதனால் கண்களால் தன் தாயை தேடினாள் . அவர் அங்கே லக்ஷ்மியின் புகுந்த வீட்டு ஆட்களோடு , மும்முரமாக கல்யாணத்தன்று என்ன செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டுக் கொண்டு இருந்தார் .

    “ சரி சம்மந்தியம்மா , அப்போ நீங்க சொன்ன மாதிரியே நாம செய்திடலாம் . அப்புறம் ஒரு வாரத்துல பதிவு திருமணம் செய்துட்டு , அதை வைத்து லக்ஷ்மிக்கு விசா விண்ணப்பம் போட்டு விடலாம் . கல்யாணம் முடிஞ்சு ஒரு ரெண்டு வாரத்துல ரெண்டு பேரும் சேர்ந்தே அமெரிக்கா போயிறலாம் “ என்று வள்ளி லக்ஷ்மியின் மாமியாரோடு பேசிக் கொண்டு இருந்தார் .

    மது அறுத்துக் கொண்டு இருக்கும் உறவினரிடம் இருந்து தப்பி ஓடி வந்து , தன் தாயை நோக்கி வந்தவளுக்கு அவர் சொன்ன அனைத்தும் காதில் விழுந்தது . அமெரிக்கா மாப்பிளை எனவும் , முதலில் அவளுக்கு தோன்றியது பயம் தான் .

    “ ஏதோ இங்கேயே நல்ல பெரிய இடத்து மாப்பிளையா , பார்த்து கல்யாணம் பேசி இருப்பாங்க பார்த்தா அமெரிக்கா மாப்பிளையா . முதல நல்லா விசாரிக்கணும் , என்ன தான் லக்ஸ் கூட பிரச்சனைனாலும் இது அவளோட வாழ்க்கை அதனால நாளைக்கு முதல் வேலையா , இந்த சிவநந்தன் பற்றி விசாரிக்கணும் “ என்று தனக்குள்ளே முடிவு எடுத்துக் கொண்டு தாயிடம் சென்று நின்றாள் .

    “ அம்மா நாளைக்கு எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு , அதனால நான் இப்போ சீக்கிரம் போய் தூங்க போறேன் “ என்று அவரிடம் கூறிவிட்டு , பக்கத்தில் இருக்கும் மற்ற உறவினர்களிடம் ஒரு தலையசைப்போடு விடைபெற்று விட்டு தனதறைக்கு வந்து சேர்ந்தாள் .

    அங்கே அவளின் அறை இருந்த நிலையை பார்த்து , ஒரு நிமிடம் மலைத்து நின்றாள் . ஆனால் பின்னர் சுதாரித்துக் கொண்டு , முதலில் தன் டிரெஸ்ஸிங் அறைக்கு சென்று உடை மாற்றி விட்டு வந்து அறையை ஒதுக்கினாள் .



    “ ச இதுக்கு தான் முதலிலே சுத்தமா வச்சு இருக்கணும் , அப்புறம் ரெண்டுகட்டான் வேலை எல்லாம் நாம தான் பார்க்க வேண்டி இருக்கு “ என்று அலுத்துக் கொண்டாள் .

    கண்கள் மெல்ல சொக்கவும் , மெத்தையை நன்றாக உதறிவிட்டு நன்றாக படுத்து உறங்கி விட்டாள் . மறுநாள் சிபியோடு ஒரு இடத்திற்கு சென்றவள் அங்கே கண்ட காட்சியில் , அதிர்ந்து விட்டாள் .

    பூவின் ரகசியம் வரும் ...



     
     
Thread Status:
Not open for further replies.

Share This Page