Click here to Goto New Forum

Riyahari ' s - Unathu Kaadhalil Vizhunthen Naan!!!! Story

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by Riyahari, Jul 2, 2016.

 1. Riyahari

  Riyahari Bronze Wings New wings LW WRITER

  Messages:
  1,258
  Likes Received:
  6,881
  Trophy Points:
  113
  upload_2017-2-26_22-7-27.jpeg


  ஹாய் ப்ரெண்டிஸ்,

  இது என்னோட முதல் கதை, ஏதோ ஒரு ஆர்வக்கோளாறுல எழுத வந்துட்டேன் .... அதனால ஏதாவது பிழைகள் இருந்தால் என்னை மன்னித்து சரியாக எழுத எனக்கு வழிகாட்டுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  கதையின் நாயகன் - கவுதம் வர்மா ஆறடி உயரம் , மாநிறம் , யாருக்கும் நான் அடங்காதவன் என்று சொல்லும் கண்களும், உடல் வலிமையும் கொண்டவன்,நினைத்ததை சாதிக்க கூடியவன் அதற்காக எதையும் செய்ய கூடியவன்.அன்பானவன் குடும்பத்தினருக்கு மட்டும்...
  கதையின் நாயகி - மதுமதி பால் நிறம், முழு மதி போன்ற முகம் , யாரையும் திரும்பி பார்க்க வைக்கும் மீன் போன்ற கண்கள்,குழந்தைத்தனமும்... குறும்புத்தனமும்.... மாறாதவள் , யாரிடமும் அன்பாக பழக கூடியவள் ....

  எதிர் எதிர் குணம் கொண்ட இவர்கள் விதியால் இணைந்து காதலில் விழுந்து,அதை உணர்ந்து வாழ்ந்தார்களா ....... என்பது தான் கதை.

  உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் பதிவு செய்யுங்கள்


  Riyahari's-உனது காதலில் விழுந்தேன் நான் comments[/URL]


  அன்புடன்,

  ரியாஹரி

  [/ATTACH]
  [/color][/size][/color][/size]
   
  Last edited: Feb 26, 2017
  Sruti, vijivetri and baby like this.
   
 2. Riyahari

  Riyahari Bronze Wings New wings LW WRITER

  Messages:
  1,258
  Likes Received:
  6,881
  Trophy Points:
  113
  ஹாய் ப்ரண்ட்ஸ்,

  “உனது காதலில் விழுந்தேன் நான் ” கதையின் முதல் பதிப்பை பதிவு செய்துவிட்டேன். கதையின் துவக்கம் சரியாக இருக்கிறதா? படித்துவிட்டு..., கதையின் நிறைகள், குறைகள் என அனைத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

  உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன்.

  உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் பதிவு செய்யுங்கள்

  http://ladyswings.com/community/thre...omments-Thread


  அன்புடன்,
  ரியாஹரி


   
  Sruti, vijivetri, baby and 1 other person like this.
   
 3. Riyahari

  Riyahari Bronze Wings New wings LW WRITER

  Messages:
  1,258
  Likes Received:
  6,881
  Trophy Points:
  113
  காதல் - 1

  "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா ...
  குறையொன்றுமில்லை கண்ணா" ...

  அந்த பாடல் வரிகள் போலத்தான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புவரை லக்ஷ்மியம்மாள் வாழ்ந்தார்கள் .... ஆனால் இன்று தன் மகனால் தனக்கு உண்டான குறையை எப்படியாவது தீர்த்துவை என்று இறைவனிடன் தினமும் வேண்டுகிறார்கள்...
  கடவுள் அவரின் குறையை தீர்ப்பாரா?... பார்ப்போம்...


  வா.. வா ... அஷோக் எப்ப வந்த ?...( அஷோக் கௌதமின் சிறுவயது முதல் இப்போவரைக்கும் அவனின் உயிர்தோழன்)இப்போதான் வந்தேன்மா
  .... என்னப்பா.... இவ்ளோ அதிகாலைல வந்துருக்க?... ஏதாவது பிரச்சனையா ?...உங்களுக்கு தெரியுது இது அதிகாலைனு ... ஆனா உங்க புள்ளைக்கு தெரியலையே ...., அவனும் என்ஜாய் பண்ணமாட்டான் என்னையும் கனவுல டூயட் பாட விட மாட்டான் ...என்னப்பா சொல்ற ?... கொஞ்சம் சத்தமா சொல்லு ... அப்படியே சத்தமா சொல்லிட்டாலும்ம்ம்ம் ..., ஒன்னும் இல்லம்மா ...


  கௌதம் எங்கே அம்மா ?....அவன் ஆபீஸ் கெளம்பிட்டு இருப்பான்னு நெனைக்குறான்பா... சரி நீயும் கவுதம் கூட இருந்து சாப்பிட்டு போப்பா...... சாப்பாடா!!!! யாரு உங்க பையன் கூடவா? அவன் என்ன மூட்ல இருக்கான்னே தெரியல...இதுல அவன் வந்து என்கூடசாப்பிடுவனோ?..
  இல்ல என்னையவே சாப்பிடுவானோ தெரியலையே?... ஆண்டவா எப்படியாவது இன்னைக்கு மட்டும் அவன் கிட்டயிருந்து என்னை மட்டும் காப்பாத்துப்பா....( டேய் இதத்தாண்டா நீ தினமும் வேண்டுற .... என்ன பண்றது இவனுக்கு ப்ரெண்டா போய்ட்டேன....)
  கவுதம் வரட்டும்மா, அவன் கூடவே சாப்பிடுறேன் .


  இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே படிகளில் கவுதம் வரும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான் , அவன் முகத்தில் இருக்கும் பாவனையை வைத்து இன்றும் இவனால் அவன் என்ன நினைக்கறான் என்று அறியமுடியவில்லை ,... இவனால் மட்டும் அல்ல அது யாராலும் முடியாது.... அது தான் கவுதம் வர்மா.
  ( சொல்லும்போதே ஒரு கர்வம் உண்டாகுது....) எதிரில் இருப்பவர்களின் எண்ணத்தை ஒரு பார்வையில் அறியக்கூடிய இவனை யாராலும் என்ன நினைக்குறான் என்ன செய்வான் என்று அறியமுடியாது....


  சொல்லுடா எப்படி நடந்தது ?... எவன் எத கேட்குறான்னே தெரியலையே ... இதை கேட்டா அதுக்கும் சேர்த்து குதிப்பான் , அதனால silent a மெயிண்டைன் பண்ணுடா அஷோக்குஉஉஉ அது தான் உனக்கு நல்லது.....
  என்னடா அமைதியா இருக்க???? (பின்ன உன்கிட்ட பேச முடியுமா?....)


  அது வந்து கவுதம் .... என்னடா வந்து போயினு? ... நான் என்ன கேட்குறேன்னு தெரியாம, மைண்ட்வாய்ஸ்ல பேசிட்டு இருக்கியா ?...(அய்யோஓஓஓ வட போச்சே ....)
  அதானே.... நீ கண்டுபிடிக்கலைனா தான் அதிசயம் இந்த பையன்கிட்ட மனசுக்குள்ள கூட பேசமுடியலைய ஆண்டவா?...


  எப்படிடா ஆப்போசிட் பார்ட்டி நாம டெண்டெற்கு quote பண்ணதைவிட ஒரு ரூபாய் கம்மியா பண்ணுவான்...
  கவுதம் அந்த டெண்டர் நாளைக்கு தாண்ட , அதுக்குள்ள உனக்கு எப்படிடா தெரிஞ்சது?... கவுதம் பார்த்த பார்வையில் அஷோகால் புரிந்துகொள்ளமுடிந்தது அவன் யார் என்று....

  திடீர்னு ஒரு அமைதி இருவருக்குள்ளும்... அந்த அமைதியை கிழித்துக்கொண்டு வந்தது கௌதமின் வார்த்தைகள்...

  "ஏற்கனவே ஒரு தடவ நான் ஏமாந்துட்டேன் "... அது தான் என்னுடைய முதலும் கடைசியுமான தோல்வியா இருக்கணும் அஷோக் ...
  அவன் சொன்ன வார்த்தையின் அர்த்தமும் அதன் வலியும் அஷோக்கு நன்றாகவே உணர முடிந்தது...
  (இவன் இன்னுமா அதை நினைச்சுகிட்டு இருக்கான்....)
  நினைத்ததை வாய்வழியாக கேட்கவும் செய்தேன்.... அதை" மறந்தால்தானடா... நினைப்பதற்கு".... அவன் சொன்ன பதிலில் திடுக்கிட்டு அவனை பார்த்தான்...
  என்ன சொல்வது என்று புரியாது யோசித்துக்கொண்டு இருந்தான்....


  உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் பதிவு செய்யுங்கள்

  http://ladyswings.com/community/thre...omments-Thread


  அன்பு
  டன்,
  ரியாஹரி

   
   
 4. Riyahari

  Riyahari Bronze Wings New wings LW WRITER

  Messages:
  1,258
  Likes Received:
  6,881
  Trophy Points:
  113
  காதல் - 1(1)

  கடந்த இரண்டு வருடங்களில் அவனுடைய ஏமாற்றத்தை பத்தி ஒரு தடவ கூட அவன் சொன்னது இல்ல... அவனுடைய தாத்தா ,அப்பா உருவாகின பிசினெஸ்ச இவன் இந்த அளவுக்கு உலகஅளவுல நடத்தி,.. தனக்குன்னு ஒரு பிசினெஸ் சாம்ராஜியத்திய உருவாக்கி இருக்கானு தெரியும் ... ஆனா இந்த வெறித்தனமான அவனுடைய உழைப்புக்கு அந்த முதல் ஏமாற்றம் தான் காரணம் என்று உணரும் போது... தன் நண்பனுக்காக வேண்டிக்கொள்ள தான் முடிந்தது .

  அந்த spy யாருனு கண்டுபிடிச்சு சொல்லு ,அவன என்ன பண்ணனும்னு நான் பாத்துக்குறேன்.
  அவன் என்ன செய்வான்னு புரிந்த அஷோக் ... டேய் நான் பாத்துக்கிறேன் நீ ஒன்னும் அவன செய்துடாதடா ...
  "என்ன ஏமாத்த நினைச்சா" அவன் என்ன ஆவான்னு அவனுக்கு மட்டும் இல்ல அவனை அனுப்புனவனுக்கும் தெரியணும்டா.... அதை சொன்ன அவன் இதழ்கள் லேசாக விரிந்தன அதை பார்த்துகொண்டு இருந்தவனுக்கு பயம் மட்டுமே தோன்றியது , ஏன்னா அந்த சிரிப்பின் பின் இருந்த குரோதத்தை அவனால் உணர முடிந்தது...

  pleaseda உன் கோவத்தை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுடா .... தான் சொல்வதை அவன் கேட்கமாட்டான் என்று தெரிந்தும் சொன்னான் .
  சரிவா சாப்பிட்டு ஆபீஸ்க்கு ஒன்ன போகலாம்....
  இல்லடா நான் போய் first நீ சொன்ன வேலைய பார்க்குறேன்.... நீ சாப்பிட்டு வாடா ...இது தான் அஷோக் கொஞ்சம் விளையாட்டு குணம் இருந்தாலும் நண்பனுக்கு தோள் கொடுப்பதில் அந்த கர்ணனையும் மிச்சிடுவான்....

  நண்பனுக்கு தேவையான தகவல்களை சேகரித்துவிட்டு, அவனை தொலைபேசியில் அழைத்தான் ...
  சொல்லு அஷோக் ...
  நண்பன் சொன்ன செய்தியை கேட்டவன்,அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து அது தொடர்பான செயல்களில் ஈடுபட்டான்...அவனிடம் பேசிவிட்டு வைத்த அஷோக் அய்யோஓஒ... இப்போ என்ன செய்யப்போறன்னு தெரியலையே ... என்று அவனிடமே அவன் கேள்வி கேட்டு கொண்டிருந்தான்....

  அவன் கேள்விக்கான பதில் அடுத்த நாள் காலை நாளிதழில் வெளிவந்தது. அதை படித்த அஷோக் கவலையில் மூழ்கினான்
  முதல் பக்கத்திலேயே கவுதம் constructions உடைய டெண்டர் வெற்றி செய்தி அச்சிடப்பட்டுஇருந்தன ...
  ஆனால் அவன் கவலைப்படத்திற்கான காரணம் அந்த நாளிதழின் ஒரு மூலையில் வந்த செய்தியால் ..
  அந்த செய்தி இதுதான் ஒரு லாரி விபத்தில் ஒருவரின் இரண்டு கைகளும் அறுவைசிகிச்சை செய்து அகற்றப்பட்டு உயிர் தப்பினார் ... இதற்கு காரணம் யாரென்று தெரிந்து... அவனால கவலை படாமல் இருக்க முடியவில்லை ....

  நண்பனின் வாழ்க்கை சந்தோஷமா மாறிவிடாதா ????
  இவனை மாற்ற யாராவது வரமாட்டார்களா ??? அப்படினு ஆசைப்பட்டு கொண்டு இருந்தான்...
  இதையேதான் லக்ஷ்மியம்மா பூஜையறையில் கடவுளிடம் வேண்டிகொண்டு இருந்தார்கள் ...
  (கடவுள் அவர்களின் ஆசை மற்றும் வேண்டுதலை கூடிய சீக்கிரம் நிறைவேற்ற போகிறார் என்று பாவம் அவர்களுக்கு தெரியவில்லை)

  கௌதமின் வாழ்க்கையை சந்தோசமாகவும்,அன்பான இம்சையாகவும் மற்ற போவது யார் ??
  என்பதை அடுத்த பதிவில் தருகிறேன் ப்ரெண்ட்ஸ்....

  ஸப்பா இப்பவே கண்ண கட்டுதே!!!!!! நான் ஏதோ ஒரு ஆர்வத்துல எழுத வந்துட்டேன் ப்ரெண்ட்ஸ் .... ஒரு வேலை நான் எழுதுறது நல இல்லாம மொக்க போடுற மாதிரி இருந்தா சொல்லிடுங்கமா... என் ஆர்வத்தை அப்படியே பெரிய குழியா தோண்டி பொதச்சுடுறேன் .... எதுவா இருந்தாலும் சொல்லுங்கமா... அதுக்காக கழுவி கழுவி ஊத்திடாதீங்க..... மீ பாவம்... கொஞ்சம் லைட்டா திட்டுங்க ப்ரெண்ட்ஸ் ....

  உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் பதிவு செய்யுங்கள்

  http://ladyswings.com/community/thre...omments-Thread


  அன்பு
  டன்,
  ரியாஹரி
   
  Sruti, Vsathu1988, vijivetri and 15 others like this.
   
 5. Riyahari

  Riyahari Bronze Wings New wings LW WRITER

  Messages:
  1,258
  Likes Received:
  6,881
  Trophy Points:
  113
  ஹாய் ப்ரண்ட்ஸ்,

  “உனது காதலில் விழுந்தேன் நான் ” கதையின் இரண்டாவது பதிப்பை பதிவு செய்துவிட்டேன். கதையை படித்துவிட்டு நிறைகள், குறைகள் என அனைத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

  என்னோட கதையை படிச்சுட்டு , நான் எப்படி எழுதுனா நன்றாக இருக்கும்னு எனக்கு சொல்லிக்கொடுத்த அனைவர்க்கும் என்னோட மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...

  என்னையும் மதிச்சு நீங்க எழுதுன கமெண்ட்ஸ் தான் என்ன அடுத்து எழுத வச்சு இருக்கு...

  உங்களோட நம்பிக்கைய நான் காப்பாத்துவேனான்னு தெரியல???? ஆனா கண்டிப்பா முயற்சி செய்றேன் ப்ரெண்ட்ஸ்...

  அறியாப்பிள்ளை பிள்ள தெரியாம ஏதாவது மறுபடியும் பிழை செய்துஇருந்தா என்னை மன்னித்து, அதை எனக்கு புரிய வைக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மக்களே ....

  உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் பதிவு செய்யுங்கள்...

  http://ladyswings.com/community/thre...omments-Thread


  அன்புடன்,
  ரியாஹரி


   
  Sruti, vijivetri, baby and 3 others like this.
   
 6. Riyahari

  Riyahari Bronze Wings New wings LW WRITER

  Messages:
  1,258
  Likes Received:
  6,881
  Trophy Points:
  113
  காதல் - 2

  பூஞ்சோலை கிராமம் - பெயருக்கு ஏத்த மாதிரி வீடுதோறும் பூக்கள் நிறைந்த கிராமம். அதற்காக அதை பட்டிக்காட்டு கிராமம்னு சொல்ல முடியாது... மண் மனம் மாறாத...,
  சகல வசதிகளும் நிறைந்த...,இயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கையை அங்கு வாழும் மக்கள் வாழ்கிறார்கள்...,அவர்களின் தொழிலே விவசாயமும்,பூக்கள் ஏற்றுமதியும் தான்...


  ஏய் மதி ... போதும் வாடி யாராவது வந்துட போறாங்க...

  இரு கயல் இன்னும் கொஞ்சம் தாண்டி வந்துடுறேன்...(கயல் மதியின் மாமா பொண்ணு... இருவரும் ஒண்ணா தான் வளந்தார்கள்... அதனால ரெண்டுபேருக்கும் இடையில் சொந்ததையும் தாண்டி ஒரு நட்பின் புரிதல் உண்டு...)

  இரண்டு மல்லிகை தோட்டத்துக்கு சொந்தக்காரியா இருந்தும்...

  இப்படி அடுத்தவங்க தோட்டத்துல வந்து திருட்டுத்தனமா பூ பறிக்குறாளே...

  ஏண்டினு கேட்டா ???

  திருட்டு மாங்கா மாதிரி , திருட்டு மல்லி தாண்டி... நல்லா வாசம் தரும்னு நமக்கே lecture கொடுப்பா...

  கயல் புலம்பிக்கொண்டு இருக்கும்போதே...

  மடி நிறைய பூவோடவும்..., முகம் நிறைய மகிழ்ச்சியோடவும் வந்தால் மதுமதி...

  அவளை பார்க்கும் போது கயலுக்கு தோன்றுவது ஒன்றுதான் " இவ எவ்ளோ அழகு "...

  ஆனால் அதை பத்தி சிறிதும் யோசிக்காமல் , வாழ்க்கையை அதன் போக்கிலேயே சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறாளே... "கொடுத்து வைத்தவள்"
  என்று நினைத்து கொண்டு இருக்கும் போதே...
  மதி அவள் அருகில் வந்துவிட்டாள் .

  எதுக்குடி இப்படி பயப்படுற ???

  நம்ம சாமிஅண்ணா தோட்டம் தானடி... அண்ணா பார்த்தாலும் ஒன்னும் சொல்லமாட்டாங்க...

  நீ ஏண்டியம்மா சொல்லமாட்ட....

  உன்ன... யாரும்...பார்த்தாலும்... ஒன்னும் சொல்ல மாட்டாங்க ....

  ஆனா என்ன ????

  என்னவோ நான் தான் உன்ன திருட சொன்ன மாதிரி, ஆளாளுக்கு என்னதான் திட்டுவாங்க.

  அதெப்புடி டி... பண்றது எல்லாம் முள்ளமாரித்தனம்...முடுச்சவிக்கித்தனம்...
  ஆனா மூஞ்ச மட்டும் இந்த பூனையும் பால்குடிக்குமா ?????
  ரேஞ்சுக்கு அப்பாவியா வச்சுக்குற????

  நானும் தான் try பண்றேன் ..... முடியமாட்டேங்குதே ....

  அவள் பொலம்பும்போதே , அவள் முகபாவனைகளை வைத்து மதி சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்....
  அவள் சிரிப்பதை கண்ட கயல்...

  ஏண்டி... இங்கே ஒருத்தி புலம்பிகிட்டு இருக்கேன்.... உனக்கு என்ன பார்த்தா சிரிப்பாஇருக்கா???

  உன்ன சொல்லி குத்தமில்லடி...உன்கூட கூட்டு சேர்ந்து திரியுறேன் பாரு என்ன சொல்லணும்...

  கோச்சுக்காதடி வா... வீட்டுக்கு போகலாம்... அம்மா பணியாரம் செய்றதா சொன்னாங்க...
  வா போய் சாப்பிடலாம்...

  அது!!! அந்த பயம் இருக்கட்டும...

  மதிக்கு தெரியும் கயலிடம் என்ன சொன்னால் அவள் கோபம்போகும் என்று...

  அதுமட்டும் இல்லாமல் தன் தாயை சமாளிக்க அவளுக்கு ஒரு அடிமை இப்போ தேவை..., அதற்கு தான் அவள் கயலை கூட்டி செல்கிறாள்...

  அது தெரியாமல் பாவம் அந்த அப்பாவி கயல் .... பணியாரத்துக்கு ஆசை பட்டு என்ன பாடுபட போகிறாளோ....

  நான் ஒன்னும் உங்க வீட்டு பணியாரத்துக்காக வரல...
  நாளைக்கு வரலாறு "தனியா ப்ரெண்ட விட்டுட்டு போய்ட்டா கயலுன்னு"...
  என்ன பத்தி தப்பா சொல்லிட கூடாது பாரு....
  அதான் வரேன்...
  ஏன்னா எங்களுக்கு எல்லாம் வரலாறு ரொம்ப முக்கியம் புரியுதா ?????

  தன் அம்மாவிடம் அவள் பட போகும் பாட்டை நினைத்து இப்போவே மதிக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது...
  ஆனாலும் இருக்கும் இடம் கருதி அடக்கி கொண்டாள்...

  மதியின் இதழில் இருந்த சிரிப்பை கண்ட கயல்...

  இப்போ எதுக்கு இவ ஒரு மர்மா சிரிக்குறானு தெரியலயே....

  ஒருவேளை நம்மள வச்சு ஏதாவது plan போடுறாளா ???? என்று யோசித்து கொண்டு இருந்தால்...

  இருவரும் ஒருவரை பற்றி ஒருவர் யோசித்து கொண்டே விடு வந்து சேர்ந்தனர் ....


  அன்புடன்,
  ரியாஹரி  உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் பதிவு செய்யுங்கள்...

  http://ladyswings.com/community/thre...omments-Thread


  அன்புடன்,
  ரியாஹரி
   
  Last edited: Jul 5, 2016
  Sruti, vijivetri, kala12345 and 10 others like this.
   
 7. Riyahari

  Riyahari Bronze Wings New wings LW WRITER

  Messages:
  1,258
  Likes Received:
  6,881
  Trophy Points:
  113
  காதல் - 2(1)

  கல்லுரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மதியின்,
  அப்பா - கதிரவன் கைதேர்ந்த விவசாயி,
  அம்மா-காமாட்சி குடும்ப தலைவி ..., அவருக்கு உலகமே அவர் கணவரும்,மகளும் தான்.
  அவள் அந்த வீட்டின் ஒரே செல்ல பெண்... காமாட்சி எவ்ளோ செல்லம் கொடுக்கிறாரோ.... அதே அளவு அவளை கண்டிக்கவும் தவறமாட்டார்...
  அதனால் தான் மதி எப்பொழுதும் தாயிடம் கொஞ்சம் பயப்படுவாள்...

  பூனை பாதம் வைத்து வீட்டின் உள்ளே நுழைந்து கொண்டுருந்த மதியை கண்ட காமாட்சி.. கோபத்துடன்
  "ஏண்டி வயசுப்புள்ள வீட்டுக்கு வர நேரமாடி இது???" என கத்தினார்....


  மதிக்கு பின்னாடி வந்த கயலை பார்த்து ...

  "நீயும் இவகூடத்தான் சேர்ந்து... இவ்ளோநேரம் ஊர்சுத்திட்டு வரியா???
  கொஞ்சமாவது பொறுப்பு இருக்காடி ரெண்டு பேருக்கும்???..." என்று திட்டிக்கொண்டு இருந்தார்...

  அதை கேட்ட கயலு... ஆவேசத்துடன்... இங்க பாருங்க அத்த... நீங்க திட்றத பார்த்தா...

  "எங்கயோ போற மாரியாத்தா....
  என் மேல வந்து ஏறு ஆத்தானு "
  சொல்றமாதிரில இருக்கு...

  " உங்க பொண்ண திட்டுறதுன்னா அவள மட்டும் திட்டுங்க...
  உங்க பொண்ணுதான் சும்மா... இருக்குற என்ன கூட்டிட்டு போய் ஊரெல்லாம்... திட்டுவாங்க வைக்கிறான்னா....
  இப்போ நீங்களும் என்ன திட்டுனா... என்ன அர்த்தம்???...

  என்ன பார்த்தா எப்படி தெரியுது உங்க குடும்பத்துக்கு ???

  கயலின் ஆவேசத்தை கண்ட காமாட்சி ...சற்று இறங்கி வந்து ...

  "அடி ஏண்டி இப்படி கோவிச்சுக்கிற???"

  வயசு பொண்ணுங்க நேரம் கழிச்சு வரிங்கனு... தானடி கேட்டன்???...

  சரி வா.... சூடா பணியாரம் செய்து வச்சுருக்கேன்... வந்து சாப்பிடு... என்று சொல்லி...
  அவர் மதியின் தாய் என்பதை நிரூபித்தார்...

  பணியாரம் என்றவுடனே சற்று அடங்கிய கோபம்...
  அவர் கேட்ட அடுத்த கேள்வியில் ஆத்திரமாக மாறியது...

  மதி எங்கடி ????

  அதானே... இங்கே இவ்ளோ சண்டை நடந்துகிட்டுருக்கு இவ எங்க... போனா ???
  என்று தேடி கொண்டுருந்தவளின் பார்வையில்...
  கண்டதை... பார்த்து...
  ஆத்திரத்தின் உச்சிக்கே போனால்...

  ஏன்னா... அவ பார்த்தது ....
  பணியாரத்தை ரசித்து ருசித்து சாப்பிட்டுக்கொண்டு இருந்த மதியை....

  ஏண்டி ...
  அங்கே நான் அவ்ளோ திட்டு வாங்கிட்டு இருக்கேன் நீ இங்க நல்லா எல்லாத்தையும் முழுங்கிக்கிட்டு இருக்கியா ????
  மனச்சாட்சி இருக்காடி உனக்கு ???

  மனச்சாட்சி இருக்குறதனாலதான் உனக்கு ரெண்டு வச்சுருக்கேன் ....
  சீக்கிரம் சாப்பிடுடி... சூடு ஆறிட போகுது....

  உனக்கு மட்டும் ஒரு தட்டு நிறைய... எனக்கு மட்டும் ரெண்டா ???
  (என்னவோ அதுதான் பிரச்சனை என்பது போல் கயலும் மத்ததை மறந்துட்டு பணியாரத்துக்கு சண்டை போட்டால்...)

  நல்லா... தின்னுடி... நல்லா தின்னு...

  இப்படி நல்லா.. தின்னு... தின்னு... குண்டோதிரி மாதிரி ஆயிட்டு ....

  என்கிட்ட வந்து

  "கயலு நான் குண்டவா... இருக்கேனு????"
  கேட்டு பாரு ....

  உன்ன நான் கொல்லாம விட மாட்டேண்டி .... என்று கத்தி கொண்டு இருந்தால்...

  (மதி ஒன்றும் குண்டு எல்லாம் இல்ல... வயுத்துக்கு வஞ்சகம் செய்யாமல் சாப்பிடுவதால்...
  கொஞ்சம் அமுல் பேபி மாதிரி இருப்பாள்...,
  ஆனா யாரையாவது ஒல்லியா பார்த்துட்டா நாம குண்டா இருக்கமோனு???
  கயலுகிட்ட கேட்டு... கேட்டே .... அவள... சாகடிப்பா ...
  அதனாலதான் கயல் இவ்ளோ டென்ஷன் ஆகுறா....)

  அத்த...
  இவ சாப்பிடுறத பார்த்தா எனக்கு ஒன்னும் தரமாட்டானு தெரியுது ....
  please எனக்கு தனியா குடுங்க... உங்க ரெண்டு பேர்கூட பேசி பேசியே நான் tired ஆகிட்டேன்...

  சொன்னபின் அவள் மதியை தான் பார்த்துக்கொண்டு இருந்தால்...

  அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்த மதி... நிமிர்ந்து...

  ஏண்டி எப்போ பாரு நான் சாப்பிடும்போது கண்ணு வைக்குற ????
  "எனக்கு வயிறு வலிக்க போகுது"...
  என்று கூறினால்.

  அதை கேட்டவள்
  "நீ இவ்ளோ திங்குறதுல வலிக்காத.... வயிறு....
  நான் பாக்குறதுனாலதான் வலிக்க போகுதாடி"????
  இது உனக்கே... கொஞ்சம் ஓவரா தெரியல ???

  மதி ரசிச்சு... ருசிச்சு.... சாப்பிடும் அழகிலேயே .... மற்றவருக்கு வாய் ஊற ஆரம்பித்துவிடும்... அதனால் தான் கயல் அவளை அப்படி பார்த்து கொண்டு இருந்தால்.

  அத்தை...கொடுத்த பணியாரத்தை கயலும் ஒரு பிடி பிடித்தால்...

  அவர்கள் செய்யும் சேட்டைகளையும்,பேச்சுக்களையும் ரசித்து பார்த்து கொண்டு இருந்த காமாட்சிக்கு ஒரு புறம் சந்தோசமாக இருந்தாலும்,தன் பெண்ணை நினைத்து கொஞ்சம் கவலையாகவும் இருந்தது...

  "அது இவள் வளர்ந்தாலும்... இன்னும்... குழந்தையாகவே...இருக்காலே"...
  இவள் குணத்துக்கு ஏத்தமாதிரி ஒரு வாழ்க்கை அமையுமா????

  "ஆண்டவா என் பொண்ணுக்கு அவள் மனசுக்கு பிடிச்ச மாதிரி ஒரு வாழ்க்கையை அமைத்து கொடுப்பா "
  என எப்போதும்போல் ஆண்டவனிடம் ஒரு வேண்டுதலை வைத்தார்.

  அவருக்கு தெரியவில்லை...
  அந்த ஆண்டவன் தன் மகளுக்கு பிடிக்காத வாழ்க்கையை
  அமைத்து கொடுக்க போகிறார் என்று....

  உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் பதிவு செய்யுங்கள்

  http://ladyswings.com/community/thre...omments-Thread


  அன்பு
  டன்,
  ரியாஹரி
   
  revathit87, Sruti, vijivetri and 10 others like this.
   
 8. Riyahari

  Riyahari Bronze Wings New wings LW WRITER

  Messages:
  1,258
  Likes Received:
  6,881
  Trophy Points:
  113
  ஹாய் ப்ரெண்ட்ஸ் ,

  ஒரு அளவுக்கு ஹீரோ,ஹீரோயின் backround intro கொடுத்து முடிச்சுட்டேன் ...
  இதுவரைக்கும் நான் ஏதாவது பிழை செய்து இருந்தா...என்ன மன்னிச்சுடுங்க
  ப்ரெண்ட்ஸ்...நீங்க சொன்ன கமெண்ட்ஸ்ஸ நான் follow பண்ணி தான் எழுதியிருக்கேனு
  நினைக்கிறேன்.அதையும் மீறி ஏதாவது தப்பு பண்ணி இருந்தா...
  தயங்காம கமெண்ட்ஸ் பண்ணுங்கமா...நீங்க எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேன்...
  நீங்க கொடுக்குற அடிய வச்சு தான்... நான் என் மூளைய கொஞ்சம் தூசி தட்டி யூஸ் பண்ணுவேன் ...
  சோ dont worry... be happy...  உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் பதிவு செய்யுங்கள்

  http://ladyswings.com/community/thre...omments-Thread


  அன்பு
  டன்,
  ரியாஹரி


   
  Sruti, vijivetri, kala12345 and 3 others like this.
   
 9. Riyahari

  Riyahari Bronze Wings New wings LW WRITER

  Messages:
  1,258
  Likes Received:
  6,881
  Trophy Points:
  113
  ஹாய் ப்ரண்ட்ஸ்,

  “உனது காதலில் விழுந்தேன் நான் ” கதையின் மூன்றாவது பதிப்பை பதிவு செய்துவிட்டேன். கதையை படித்துவிட்டு நிறைகள், குறைகள் என அனைத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

  என்னோட கதையை படிச்சுட்டு , நான் எப்படி எழுதுனா நன்றாக இருக்கும்னு எனக்கு சொல்லிக்கொடுத்த அனைவர்க்கும் என்னோட மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...

  என்னையும் மதிச்சு நீங்க எழுதுன கமெண்ட்ஸ் தான் என்ன அடுத்து எழுத வச்சு இருக்கு...

  உங்களோட நம்பிக்கைய நான் காப்பாத்துவேனான்னு தெரியல???? ஆனா கண்டிப்பா முயற்சி செய்றேன் ப்ரெண்ட்ஸ்...

  அறியாப்பிள்ளை பிள்ள தெரியாம ஏதாவது மறுபடியும் பிழை செய்துஇருந்தா என்னை மன்னித்து, அதை எனக்கு புரிய வைக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மக்களே...  காதல் - 3

  அந்த பிரமாண்ட ஏழு அடுக்குமாடி கட்டிடத்திற்குள் வழுக்கி கொண்டு வந்து நின்றது கௌதமின் வெளிநாட்டு கார்... முதலாளியின் காரை பார்த்தவுடன் ஓடிவந்து கதவை திறந்துவிட்டு... தனது வணக்கத்தை சொன்னான் காவலாளி... அவனை பார்த்து தலையசைத்தவன்...

  ஒரு நிமிடம் தனது கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தான்... அவனது உழைப்பை பறைசாற்றுவது போல்...
  அது பணக்கார தன்மையுடன் காம்பீரமாக நின்றது....
  அதை கண்டவன் ஒரு கர்வத்துடன் தனது அறைக்கு சென்று கொண்டு இருந்தான்...

  அந்த கர்வத்திற்கு காரணம்...
  கௌதமின் தாத்தா பத்மநாதன் ஒரு சிறிய ஹோட்டல் நடத்தி வந்தார்...
  அதை அவரின் மகன் முன்னேற்றி மூன்று பைவ் ஸ்டார் ஹோட்டலாக மாற்றி அமைத்தார்... அவரின் பேரன்... குடும்ப பிசினெஸ் மட்டும் இல்லாமல், தனக்கென்று தனியாக construction பிசினெஸ்யும், ஒரு IT கம்பெனியும் வெற்றிகரமாக நடத்தி வருகிறான்...ஆரம்பத்தில் சில சோதனைகளை எதிர் கொண்டான் தான்.ஆனால் அந்த சோதனைகளையே தனது சாதனைகளாக மாற்றி இன்று சென்னையில் ஒரு பெரிய பிசினெஸ் மேக்னெட்டாக மாறி உள்ளான்....

  கௌதம் தனது அறையில் ஒரு மீட்டிங்க்கு தயாராகி கொண்டு இருந்தான்... கதவு திறக்கும் ஓசையில் நிமிர்ந்து பார்த்தான்... அஷோக் கோபத்துடன் வருவதை கண்டும்... காணாததை போல் மறுபடியும் தன் வேலையில் மூழ்கினான்... ஏனென்றால் கௌதம்க்கு நன்றாகவே தெரியும்... நண்பன் எதற்காக வருகிறான்...யார் அனுப்பி வருகிறான் என்று... அதனால் தான் அமைதியாய் இருந்தான்...

  இன்னைக்கு fulla நின்னாக்கூட அவன் பேசமாட்டான்... என்று தெரிந்த அஷோக்...
  சற்று குரலை உயர்த்தி...
  காலைல... அம்மாகிட்ட என்னடா பிரச்னை பண்ணிட்டு வந்தே ??? என்று கேட்டுக்கொண்டு இருக்கும்பொழுதே கௌதம் தன்னை முறைப்பதை பார்த்து ஸ்ருதியை கொஞ்சம் இறக்கினான்...

  என்ன இவன்... நாம குடுக்கவேண்டிய லூக்க எல்லாம்... இவன் கொடுக்குறான்....
  இப்போ நாம இவன்கிட்ட அடுத்து ஏதாவது கேட்குறதா ??? வேண்டாமா ???
  கேட்டா இவன் திட்டுவான்... கேட்கலைன்னா... அந்த லேடி DON திட்டுவாங்க...
  இப்படி இவுங்க இரண்டு பேருகிட்டயும் மாட்டிகிட்டு முழிக்கிறேனே.... இப்ப என்ன பண்றது...சரி ஏதாவது செஞ்சு சமாளிடா அஷோக்கு... என்று தனக்குத்தானே தைரியத்தை வரவழைத்து கொண்டு...

  இப்போ எதுக்குடா இப்படி முறைக்குற???
  இதுக்கு எல்லாம் பயப்படுற ஆள்.. நான் இல்ல.... புரியுதா ???? என்று உள்ளே.. பயந்துகொண்டே வெளியில் தைரியமாக கத்தினான்...

  அப்படி என்னடா அம்மா... உன்கிட்ட பெருசா கேட்டுட்டாங்க ???
  எல்லா அம்மாக்களும் ஆசைப்படுறமாதிரி தன் பையனுக்கும் ஒரு கல்யாணத்த பண்ணிவச்சி... பேரன், பேத்திய கொஞ்சனும்னு ஆசைப்படுறாங்க...
  இது ஒரு தப்பாடா ???
  அதுக்கு அவங்ககிட்ட சண்டைக்கு போனியாமே???
  முக்கியமா சாப்பிடாம வந்துட்டியாமே??? என்று கோபமாக கத்தினான்...

  அவனை நிதானமாக பார்த்த கௌதம்...
  இப்போ உனக்கு நான் அம்மா கூட சண்டை போட்டது பிரச்சனையா ???
  இல்ல சாப்பிடாம வந்தது பிரச்சனையா ???... என்று கேட்டு நண்பனை அதிரவைத்தான்...

  அதிர்ந்த அஷோக் அய்யோஓஒ... இவன் எப்படி கண்டுபிடித்தான்...
  ஏன்னா இன்னைக்குத்தான் லக்ஷ்மியம்மா அவனுக்கு பிடித்த அல்வாவே செய்து கௌதம் கிட்ட கொடுத்து அனுப்புறதா சொன்னாங்க... ஆனா...அந்த கனவுல கௌதம்... ஒரு கிலோ உப்ப அள்ளி போட்டுட்டானேன்னு.... ரொம்ப கடுப்பாய்ட்டான் ... இதை இவன் கிட்ட சொல்லவா முடியும்??? என்று யோசித்து கொண்டு இருந்தான்...

  நண்பனின் மௌனமே உண்மையை கௌதமுக்கு புரிய வைத்துவிட்டது...
  அவன் எதற்காக கோபப்படுகிறான்??? என்று...
  அதை புரிந்துகொண்டு...
  நக்கலாக நண்பனை பார்த்து...
  என்னடா பேச்சைய காணோம்???... என்று கேட்டான்.

  உன்கிட்ட எல்லாம் பேச முடியுமா டா??? என மனதில் நினைத்து கொண்டு வெளியில்...
  இப்போ எதுக்குடா பேச்ச மாத்துற ???
  ஒழுங்கா அம்மா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா??
  என்று தன்னிடம் கேள்வி கேட்டவனிடம் மறுகேள்வி கேட்டான்...

  இப்போ உனக்கு என்ன டா தெரியணும்????
  என் கல்யாணத்த பத்திதானே???
  சரி சொல்லுறேன்...நல்ல கேட்டுக்கோ...
  இப்போ நான் சொல்லப்போறதே உன்கிட்ட கேட்க சொன்னவங்ககிட்டயும்... நல்லா தெளிவா... என் பதில சொல்லிடு...எனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்குற IDEA இல்ல... இப்போ மட்டும் இல்ல...
  இந்த ஜென்மத்துல பண்ணிக்குற IDEA சுத்தமா இல்ல....
  என்று சொல்லி சத்தமே... இல்லாமல் ஒரு அணுகுண்டை அஷோக் தலையில் போட்டான்....

  அதை கேட்ட அசோக்குக்கு நெஞ்சுவலி வராதுதான் அதிசயம்...

  டேய் என்ன டா.... சொல்றறறறறறற..... என்று அதிர்த்துவிட்டான்...
  டேய் என்ன பத்தி கொஞ்சம் யோசிச்சு பாருடா ???
  உனக்கு கல்யாணம் ஆகலனா... என்னாலயும் பண்ணிக்க முடியாதுடா.... என்று நண்பனிடம் தன் நிலைமையை விலகினான்...

  அவன் முகத்தை பார்த்த கௌதமுக்கு...
  அந்த நிலைமையிலும் நண்பனை பார்த்து சிரிப்பு தான் வந்தது...
  அந்த சிரிப்பு மாறாமலே அசோக்கை பார்த்து... 'நீ பண்ண சத்தியத்துக்காக... எல்லாம்.. என்னால கல்யாணம் பண்ண முடியாது'... என்று அடுத்த குண்டை அவன் நெஞ்சிலே போட்டான்...

  அதை கேட்ட அஷோக் என்னது... நான் சத்தியம் பண்ண னா ??? அட பாவி...
  ஒரு அப்பாவி புள்ளைகிட்ட அதையும் இதையும் சொல்லி....
  என்ன ஏமாத்தி அந்த லேடி DON தாண்டா .... சத்தியம் பண்ண வச்சுடுச்சு....
  அது மட்டும் இப்போ என் கையிலே கிடைச்சுது அதை அப்டியே கைமா பண்ணிடுவேன்... ஏன்டா!!!! குடும்பமே சேர்ந்து என் வாழ்க்கைய குழி தோண்டி புதைக்கணும்னு முடிவுகட்டிக்கிட்டு அலையறீங்களா... என்று தன் மனகுமுறலை கௌதமிடன் கேட்டான்...

  நீ லூசுத்தனமா ஏதாவது பண்ணா அதுக்கு நானா பொறுப்பு ???
  போட.... போய் மீட்டிங்கு ரெடி ஆகு.... அப்படியே நான் சொன்னத அந்த லேடி Don கிட்ட சொல்லிடு ...என கூறி தனது வேலையில் கவனம் செலுத்தினான்..

  என்னதுதுதுது....லூசாசாசா ??? சொல்லுவீங்கடா... சொல்லுவீங்க... இதுவும் சொல்லுவீங்க இதுக்கு மேலயும் சொல்லுவீங்க ??? நீ வேலைய பாரு ராசா...
  நான் போய் அந்த கிழவியை ஒரு பிடி பிடிக்குரேன்... என்ன நினச்சுகிட்டு இருக்கு...
  என்ன பத்தி ??? என்று புலம்பிக்கொண்டே தன் அறைக்கு சென்றான்....

  அவன் செல்வதை கண்ட கௌதமின் நினைவில் காலையில் வீட்டில் நடந்த சம்பவங்கள் விரிந்தன...

  உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் பதிவு செய்யுங்கள்

  http://ladyswings.com/community/thre...omments-Thread  அன்பு
  டன்,
  ரியாஹர
   
  Last edited: Jul 6, 2016
   
 10. Riyahari

  Riyahari Bronze Wings New wings LW WRITER

  Messages:
  1,258
  Likes Received:
  6,881
  Trophy Points:
  113
  காதல் - 3(2)

  கௌதமின் நினைவில்... காலையில் வீட்டில் நடந்த சம்பவங்கள் கண்முன் விரிந்தன...

  கௌதம் ஆஃபீஸ் கிளம்பி, படிகளில் இறங்கிவந்து கொண்டு இருந்தான்...
  அவனை கண்ட லக்ஷ்மியம்மா அவனிடம் சென்றார்...
  ஏனென்றால் அவருக்கு அவனிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டியிருந்தது...

  என்னப்பா ஆஃபீஸ் கிளம்பிட்டியா ???

  எஸ் மாம்... ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு, சோ சீக்கிரம் போகணும்.

  கொஞ்சம் சாப்பிட்டு போப்பா...

  இல்ல... மாம் வேண்டாம் time ஆயிடுச்சு ... நான் ஆஃபீஸ்ல ஏதாவது பாத்துக்கிறேன்...

  அப்போது அங்கு வந்த அகிலாண்டம் பாட்டி...

  ஏன்ப்பா பேராண்டி... அதான் அவ அவ்ளோ சொல்லுறா லே... சாப்பிட்டு பொய்யேண்டா....
  என்னமோ நீ சம்பாதித்துத்தான் நாங்க எல்லாம் அடுத்தவேளை சாப்டுறமாதிரி scene போடாதடா...

  பத்மநாதனின் ஆருயிர் மனைவிதான் அகிலாண்டம்... கௌதமை கொஞ்சமாவது அடக்கக்கூடியவரும் அவர் மட்டும் தான்...அந்த குடும்பத்தின் ஆணிவேர் என்றே சொல்லலாம்...அவரின் கணிப்பு என்றுமே தவறியது இல்லை என்று அந்த வீட்டின் உறுப்பினர்களுக்கு பலமுறை உணர்த்தியுள்ளார்... வயதின் மாற்றம் அவர் உடலில் தெரிந்தாலும்... மனதளவில் இளமையாக வாழ்ந்துகொண்டு இருப்பவர்...
  இப்போகூட டான்ஸ் கிளாஸ்சுக்கு போய்ட்டு... வந்து தான் பேரன்கிட்ட வம்பு இழுத்துகிட்டு இருக்கிறார்...
  இப்போ...உங்களுக்கே.... தெரிஞ்சு இருக்கும் இவுங்கதான் அஷோக்கின் கொலவெரிக்கு காரணமான நம்ம லேடி Don...


  அதை கேட்டு... கடுப்பான கௌதம்

  இங்க பாரு அம்மு...
  உன் டான்ஸ் கிளாஸ் முடிஞ்சா...
  அடுத்து எங்க போய் குதிக்கணுமோ... அங்க போய் குதி...
  அதை விட்டுட்டு என்ன அதிகாரம் பண்ணாதே... புரிஞ்சுதா... என்று கோபப்பட்டான்...

  இதுக்கெல்லாம் பயப்புடுற ஆள நம்ம don ???

  என்ன பார்த்து...
  எவ்ளோ திமிர் இருந்தா... என்கிட்டியே இப்படி பேசுவ ???
  என்று அவனை விட கோபபமாக பேசி...
  அவனின் பாட்டி அவர் என்று நிரூபித்தார்...

  இனிமே ஒரு நிமிஷம் நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன்..

  லக்ஷ்மி போய் என் பெட்டியெல்லாம் எடுத்து வை ... நான் இந்த வீட்ட விட்டு போறேன்...
  மரியாதை தெரியாத வீட்ல எனக்கு என்ன வேலை???

  அதை கேட்ட... கௌதம் கோபத்தையெல்லாம் மறந்து பலமாக சிரித்து கொண்டு இருந்தான்...

  ஏன்னா இது அவர் சொல்லும் நூற்றிஐம்பத்தி ஒன்றாவது வெளிநடப்பு... இதுவரைக்கும் வீட்டு வாசலை கூட தாண்டியது இல்லை...

  கௌதமுக்கு அவன் பாட்டி எப்பவும் கொஞ்சம் special தான்... சின்ன வயசுல இருந்து அவனை வழிநடத்துபவர்...ஒரு தாங்கமுடியாத ஏமாற்றத்தில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தவனுக்கு... அவனை தேற்றி அவனுக்கு ஒரு புது வாழ்க்கைக்கு வழிகாட்டியவர்... அன்று மட்டும் அவர் இல்லை என்றால்... அவன் என்ன ஆகி இருப்பான்னு யாராலயும் சொல்ல முடியாது...

  கௌதம் சிரிப்பதை பார்த்த அகிலாண்டம்...
  இவன் ஏன் இப்படி சிரிக்குறான்...
  ஒரு வேலை ஓவர் ஆக்ட்டிங் பண்ணிட்டோமோ... என்று குழம்பி போய் மருமகளை பார்த்தார்...

  ஆனால் மருமகளோ கண்களில் கண்ணீருடன் மகனை பார்த்து கொண்டு இருந்தார்...

  அவன் இந்தமாதிரி மனம்விட்டு சிரிப்பது மிகவும் அரிது...

  அதனால் தான் லக்ஷ்மியம்மா அவனை அவ்வாறு பார்த்து கொண்டு இருந்தார்...அதற்கு காரணமான மாமியாருக்கு கண்களால் நன்றி சொல்லவும் மறக்கவில்லை...

  பாட்டி யோசிப்பதை பார்த்த...கௌதம் அவரை பார்த்து ...
  தயவுசெய்து இந்தமாதிரி ரியாக்ஷன் எல்லாம் கொடுக்காதே அம்மு...
  உனக்கு அது செட் ஆகல... எனக்கு சிரிப்ப அடக்க முடியல என கூறி சிரித்தான்

  பாட்டி முறைப்பதை பார்த்து...
  அவர் தோளில் வலது கையை போட்டு...அவரின் முகத்தை அவனை நோக்கி நிமிர்த்தி...

  இப்போ உனக்கு என்ன வேணும்???
  நான் சாப்பிடணும் அவ்ளோதானே... சரி..வா... சாப்பிடலாம்... என்று அவரை கெஞ்சி...
  கொஞ்சிக்கொண்டு இருந்தான்...

  அந்த கொஞ்சலில் மயங்கிய பாட்டி...

  ஏதோ நீ இவ்வளவு கெஞ்சி கேட்குறதுனால... என் வெளிநடப்ப ஒத்திவைக்குறேன்...என குறி அவரும் அவனுடன் சாப்பிட சென்றார்...

  கௌதம் இட்லி சாப்பிடுவதை பார்த்த பாட்டி...
  லச்சு... எனக்கு பாலும்... சாண்விட்ச்சும் கொண்டு வா...
  ஏன்னா... நான் இப்போ டயட்ல இருக்கேன்...

  அதை கேட்ட கவுதம்... பாட்டியை பார்த்த பார்வையே சொன்னது...இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலே???

  அதை கண்டும் காணாததை போல்... மருமகள் கொண்டு வந்த டயட் foodஐ சாப்பிட தொடங்கினார்...

  இடையில் மருமகளிடம் அவனிடன் கேட்குமாறு கண் ஜாடை காட்டவும் மறக்கவில்லை...

  அவரும் மகனை பார்த்து...
  கௌதம்... என அழைத்தார்..

  என்ன மாம்...

  தரகர் உனக்கு... ஒரு பொண்ணு ஜாதகம் கொண்டு வந்து கொடுத்தார்...
  உங்க இரண்டு பேருக்கும் பொருத்தம் நல்லா இருக்கு....
  நீ சரினு சொன்னினா நாம போய் பொண்ண பார்த்துட்டு வந்துடலாம்... நீ என்னப்பா...
  என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவன் முகம் கோபத்தில் சிவப்பதை கண்டவர் சொல்லிக்கொண்டு இருந்ததை பாதியிலேயே நிறுத்தினார்....

  தாயை விடுத்து அவன் பாட்டியை பார்த்து கோபத்துடன் முறைத்து... கண்களால் இது உன் வேலையா???? என்று ஒரு புருவத்தை உயர்த்தி கேட்டான்...

  அவன் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட பாட்டி...

  களத்தில் அவரே குதித்தார்...

  இப்போ எதுக்குடா...இப்படி கோபப்படுற???

  கால...காலத்துல...அவ ஒரு மருமகளையும்... எனக்கு கொள்ளு பேரன்,பேத்தியை பார்க்க ஆசை இருக்காதா???

  நானே இப்போவோ... அப்போவோன்னு... இருக்கேன்...

  நாங்க ஆசை படுறதுல என்னடா தப்பு ??? என அவனை விட கோபமாக கத்தினார்...

  அதை கேட்ட கௌதம் அடக்கப்பட்ட கோபத்துடன் யாரு நீ ???

  இப்போவோ... அப்போவோன்னு... இருக்க
  இதை... நான் நம்பனும்???

  அப்படி இருக்குறவங்க தான் டான்ஸ் கிளாஸ் போவாங்களா???
  என்று நக்கலாக கேட்டான்.

  அதை கேட்ட பாட்டி..

  ஐயோ பயபுள்ள நம்ம வீக் பாய்ண்ட கரெக்டா புடிச்சுட்டானே... இப்போ என்ன பண்றது...
  ஆ... இதெல்லாம் உனக்கு சகஜம் அகி... அடுத்த அம்ப அவன நோக்கி விடு... என்று தனக்கு தானே கேள்வி கேட்டு... பதிலையும் அவரே சொல்லிக்கொண்டு...அடுத்த அம்பை பேரனை நோக்கி விட்டார்...

  டேய்... நானே என் மனகஷ்டம் தாங்காம தான்... அங்கேயும்... இங்கயும்... போயி கொஞ்சம் மனசாந்தி அடையுறேன்...
  அது உனக்கு பொறுக்கலயா??? என்று கேட்டு... அவனையே அதிர வைத்தார்...

  என்னது??? மனசாந்திக்கா???

  பாட்டி இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல???

  மனச்சாந்திக்கு போற இடமா அது எல்லாம்???

  இந்த மாதிரி பேசி என்ன கடுப்பேத்தாத சொல்லிட்டேன்...

  பேரனின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல்... முழித்த பாட்டி...

  இவன விட்டா... நம்ம தண்டவாளத்த எல்லாம் வண்டவாலத்துல ஏத்தாமல் விட மாட்டான் போல இருக்கே... சோ ரூட்ட மாத்து அகி... அது தான் உனக்கு நல்லது..
  என முடிவெடுத்து பேரனை நோக்கி...

  டேய் பேச்ச மாத்ததடா... இப்போ என்னடா கடைசியா சொல்ற???

  அந்த கேள்வியில் எரிச்சலடைந்த கௌதம்...
  இங்கே பாருங்க பாட்டி...
  எனக்கு இப்போ இல்ல... எப்பவும் கல்யாணம் பண்ற ideaவே இல்ல...
  அதனால... என்ன இப்படியே தனியா விட்டுடுங்க... please...

  நான் ஏன் இப்படி சொல்றேன்னு உங்களுக்கு நன்றாகவே தெரியும்...
  தெரிஞ்சும் நீங்களே...
  என்ன புரிஞ்சுக்க மாட்டேன்றிங்லேனு தான் எனக்கு வருத்தமா இருக்கு...
  என்று சொன்ன கௌதமின் வார்த்தைகளில் இருந்த வலியை உணர்ந்த அகிலாண்டம்... என்ன சொல்வது என்று தெரியாமல் நிலைகுலைந்து போனார்...

  சொன்னவன் அதற்குமேல் அங்கு இருக்க பிடிக்காமல்...யாரின் முகத்தையும் பார்க்காமல்... சாப்பாட்டு தட்டுலயே கைகழுவிவிட்டு...ஆபீஸ்க்கு கிளம்பிவிட்டான்....

  அவன் சொன்னதை கேட்டு லக்ஷ்மியம்மாள் அப்படியே தூணில் சாய்ந்தவாறு அழ ஆரம்பித்து விட்டார்...

  சிறிது நேரம் கழித்து சுயநினைவுக்கு வந்த அகிலாண்டம் பார்த்தது...

  இனிமேல் தன் வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை... என்று விரக்தியில் அழுது கொண்டு இருந்த மருமகளை தான்... அதை கண்டவர் மனமுடைந்து போனார்...

  மருமகளின் அருகில் சென்றவர்...
  லக்ஷ்மி இப்போ எதுக்கு இப்படி வாழ்க்கையே... வெறுத்து போன மாதிரி அழுதுகிட்டு இருக்க ??? என்று கேட்டார்...

  என் வாழ்க்கையே அவன் தானே அத்த... அவனே இப்படி சொன்னா நான் என்ன பண்ணுவேன்... என்று... அழுகையை தொடர்ந்தார்...

  அவன் சொன்னா நான் அப்டியே விட்டுடுவனா???

  அத்தை சொன்னதை கேட்ட மருமகளின் கண்களில் நம்பிக்கை ஒளி வந்தது...
  அவருக்கு தெரியும் தன் மாமியாரை பற்றி... அவர் ஒரு முடிவு எடுத்துவிட்டார்.... என்றால் அதை முடிக்காமல் விட மாட்டார் என்று...

  அந்த நம்பிக்கையை கண்களில் காட்டி அத்த...
  அப்போ கௌதம்... கல்யாணம் நடக்குமா ??? என்று தனது ஒரே ஆசையை கேட்டார்...

  நடக்கும்... கண்டிப்பா நடக்கும்... நடத்தி காட்டுவேன்... என்று சொன்னஅகிலாண்டம்..
  அதை...மருமகளுக்கு கூறினாரா ??? இல்லை தனுக்கு தானே உறுதி எடுத்து கொண்டாரா... என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும்....

  சரி நீ கவலைப்படாம போய் வேற வேலையை பாரு ...
  நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன்... என்று மருமகளிடம் சொல்லியவர் தனது அறைக்கு சென்றார்...

  அறைக்கு வந்தவர் ஓய்வு எடுக்காமல்... பேரனின் வாழ்க்கையை எப்படி மாற்றுவது என்று யோசித்தார்... அதன் பிறகு சில அதிரடி முடிவுகளை எடுத்து...
  அதை செயல் படுத்த எண்ணினார்... அதன் தொடக்கமாக அவர் செய்ததுதான்..
  அசோக்குக்கு தொலைபேசியில் அழைத்து பேரனின் மனதை...
  இன்னும் அறிந்து சொல்லுமாறு கூறினார்... அதன் பின் தான் அவரால் கொஞ்சம் அமைதியாக இருக்க முடிந்தது...

  "கௌதம் இனி உன் வாழ்க்கை என் கையில்"... அதை அந்த ஆண்டவனே நினைச்சாலும் மாத்தமுடியாது...

  இந்த அகிலாண்டத்து கிட்ட... மாட்டிகிட்டு என்ன ஆக போரியோ.... என தனுக்குத்தானே பேரனின் நிலைமையை எண்ணி சிரித்துக்கொண்டார்...

  அகிலாண்டம் games starts now...


  உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் பதிவு செய்யுங்கள்...

  http://ladyswings.com/community/thre...omments-Thread


  அன்புடன்,
  ரியாஹரி
   
  Sruti, Srjee, vijivetri and 11 others like this.
   
Loading...

Share This Page

loading...