1. Welcome to ladyswings contest
  Dismiss Notice

Sudha Ravi's - "Alaipayum Nenjangal"

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by Sudha Ravi, Sep 7, 2016.

Thread Status:
Not open for further replies.
 1. Sudha Ravi

  Sudha Ravi Bronze Wings Moderator New wings LW WRITER

  Messages:
  7,541
  Likes Received:
  5,864
  Trophy Points:
  113
  ஹாய் பிரெண்ட்ஸ்,

  எல்லோரும் எப்படி இருக்கீங்க?? உங்களை எல்லாம் ரொம்பவே மிஸ் பண்ணினேன். அதுதான் காண ஓடோடி வந்துவிட்டேன். இவ்வளவு பெரிய உடம்பை தூக்கிக் கொண்டு ஓடோடி வந்த என்னை ஏமாற்றாமல் எல்லோரும் கமெண்ட் என்னும் மழையில் நனைய வைப்பீர்கள் என்று நம்புகிறேன். அதுசரி பேசினது எல்லாம் போதும் கதையை பத்தி சொல்லுன்னு சொல்றது புரியுது....

  இந்தமுறை நாயகன் யார், நாயகி யார் என்றெல்லாம் கேட்க மாட்டேன். இக்கதையின் நாயகன் நிகில் சாம்பசிவம். மிகவும் அமைதியானவன். அனைவருக்கும் நல்லவன் நாயகியைத் தவிர. நாயகி ஸ்ருதி படபட பட்டாசு. பட்டாம்பூச்சியாக பறந்து கொண்டிருப்பவள். நிகிலுடனான அவளது வாழ்க்கை??? அவர்களின் வாழ்க்கையை தெரிந்து கொள்ள காத்திருங்கள்....

  கதைக்கான கருத்துக்களை இந்த திரியில் தெரிவியுங்கள்..........

  Sudha Ravi's - அலை பாயும் நெஞ்சங்கள் - Comments
   
  vijivetri, nitha, suguvidhu and 24 others like this.
   
 2. Sudha Ravi

  Sudha Ravi Bronze Wings Moderator New wings LW WRITER

  Messages:
  7,541
  Likes Received:
  5,864
  Trophy Points:
  113
  டீசெர் போட்டு இருக்கேன் மக்களே ---நிகில், ஸ்ருதியின் வாழ்க்கை எப்படி கோலாகலமா இருக்குன்னு பாருங்க....

  துபாயின் டிஸ்கவரி கார்டன்.

  ஜென் அபார்ட்மெண்டின் எட்டாவது மாடியில் அமைந்திருந்த தங்களது பிளாட்டின் பால்கனியில் அமர்ந்திருந்தாள் ஸ்ருதி.

  தொலைவிலிருந்த கட்டிடங்களில் தெரிந்த பொட்டுப்பொட்டான வெளிச்சம், அந்த ஊருக்கே சீரியல் விளக்குப் போட்டது போன்ற ஒர் அழகைத் தந்தன.

  அவள் கண்கள் - அவ்விரவின் ஒளியில் நகரத்தின் அமைப்பைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தது.
  சிறிதும் பெரிதுமாய் கட்டிடங்கள் பல எழும்பி நின்றன. பால்கனியில் இருந்து பார்க்கையில் தெரிந்த அரை வட்டமான காட்சி - மனதை கொள்ளை கொண்டது! இரவு பதினொரு மணிக்கும் கூட பரபரத்துக் கொண்டிருந்த அந்நகரத்தைப் பார்த்து,அவள் ஆரம்பத்தில் மலைத்து போய் இருக்கிறாள். துபாய்வாசியான கடந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, அந்த வாழ்க்கை அவளுக்கு பழகிப் போனது.


  துபாய் என்றதும், எண்ணற்ற கனவுகளுடன்தான் அங்கு வந்திறங்கினாள். இந்நகரம் அவளுக்குப் பலப்பல புதுமைகளைக் காட்டியது. ஆனால், ஒருபோதும் தாம் இந்தப் பால்கனியிலேயே சிறைபடுவோம் என்று அவள் நினைத்தும் பார்க்கவில்லை.

  ‘இந்தப் பால்கனியும் இல்லாமல் போயிருந்தால் - நான்கு சுவர்களுக்குள்ளாகவே வெறும் ஏசியின் ஓசையை மட்டும் கேட்டுக்கொண்டு பைத்தியம் பிடித்து அலைந்திருப்பேன்!’ என்று எண்ணிக் கொண்டாள்.

  “கிளிக்” என்று கதவு திறக்கும் சப்தம் கேட்டது.

  ‘வந்துவிட்டான்’ என்று அறிந்து கொண்டவள், மறந்தும் அங்கே செல்ல நினைக்கவில்லை.
  அவன் அங்குமிங்கும் நடப்பதும் , தனது அறைக்கதவைத் திறப்பதும், பாத்திரங்களை உருட்டுகின்ற சப்தம் கேட்டுக்கொண்டு தான் இருந்தது. அவன் எதையோ தேடுவது போல் தோன்றியது.


  ‘போய், என்னவென்று கேட்டுவிடுவோமா’ என்று எண்ணினாள்.

  அன்றொரு நாள் அப்படிக் கேட்டதற்கு, முகத்தில் அடித்தார் போல் வந்த பதில் நினைவிற்கு வந்தது.

  இரு படுக்கை அறைகளைக் கொண்ட அந்த பிளாட்டில் ஆளுக்கொரு தீவாக வசிக்கும் தங்களை நினைத்து அந்த இக்கட்டானச் சூழ்நிலையிலும் சிரிப்பு வந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள்கூட நேருக்கு நேர் சந்தித்து விட்டால் ஒரு புன்சிரிப்போ, ஒரு ஹாய், ஹலோவோ சொல்லிக் கொள்ளும்போது, கணவன் மனைவியான தாங்கள் இருவரும் வாழ்ந்து வரும் விசித்திரமான வாழ்க்கையை நினைத்து பெருமூச்சு எழுந்தது.

  எதிரே மனைவி வந்து விட்டால் அவளை அறிமுகமற்ற ஒருவரை பார்க்கும் விதத்தில் நடத்தும் கணவனின் நடத்தையை என்னவென்று சொல்வது?

  பெருமூச்சுடன் அமர்ந்திருந்தவளை குளிர்காற்று உடலைத் தீண்ட, மனமே இல்லாமல் எழுந்து அறைக்குச் சென்றாள். ஹாலில் டிவி ஓடும் சப்தம் கேட்டது. ஏதோ அரசியல் விவாத நிகழ்ச்சி... சந்தைக்கடை போல் காரசாரமாக சேற்றை அள்ளி ஒருவர் மேல் ஒருவர் வீசிக் கொண்டிருந்தனர்.
   
  Aravin22, vijivetri, nitha and 64 others like this.
   
 3. Sudha Ravi

  Sudha Ravi Bronze Wings Moderator New wings LW WRITER

  Messages:
  7,541
  Likes Received:
  5,864
  Trophy Points:
  113
  ஹாய் பிரெண்ட்ஸ்,

  எல்லோரும் எப்படி இருக்கீங்க? டீசெருக்கான வரவேற்பை பார்த்து மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருக்கிறேன். உங்களை எல்லாம் காக்க வைப்பதில் விருப்பமில்லை என்றாலும் எனக்கு வேறு வழியில்லை. இங்கே பக்ரித் விடுமுறை ஐந்து நாட்கள் விட்டிருக்காங்க. வீட்டில் எல்லோரும் இருப்பதால் என்னால் இப்போ முதல் எபியை போஸ்ட் பண்ண முடியலப்பா......இன்னும் ஒரே ஒரு நாள் வெயிட் பண்ணுங்க. திங்கள் அன்று முதல் எபி போஸ்ட் பண்ணிடுறேன்.....உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்....................
   
   
 4. Sudha Ravi

  Sudha Ravi Bronze Wings Moderator New wings LW WRITER

  Messages:
  7,541
  Likes Received:
  5,864
  Trophy Points:
  113
  ஹாய் பிரெண்ட்ஸ்,

  முதல் அத்தியாயத்தோட வந்துட்டேன்.....இப்போ கொஞ்சம் பிஸியாக இருப்பதால் வாரத்திற்கு இரு அப்டேட் கொடுக்கிறேன். திங்கள் மற்றும் வியாழக்கிழமை போஸ்ட் பண்றேன்....படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்....

  அலை - 1

  [​IMG]

  எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
  எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது


  அன்னை காவேரியம்மாள் கருணை இல்லம் கரூர். மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான இல்லம். காலை வழிபாட்டிற்காக அனைவரும் பிரேயர் ஹாலில் குழுமிருந்தனர்.

  சேவை மனப்பான்மையோடு அங்கு வேலை செய்பவர்களும், ஆதரவின்றி அடைக்கலம் தேடி வந்தவர்களும், குழந்தைகளை பார்த்துக் கொள்ள அங்கேயே தங்கியிருந்தனர்.


  இறைவணக்கம் முடிந்தவுடன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மெல்ல அங்கிருந்து நகர்ந்தனர். ஸ்ருதியும் குழந்தைகளை உணவறைக்கு அழைத்துச் சென்றாள்.

  அப்போது இல்லத்தின் தலைவர் சிதம்பரம் அழைப்பதாக ஒருவர் சொல்லி சென்றார். குழந்தைகளை அவரவர் இடங்களில் அமர வைத்து, ஆயாம்மாவிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லி சிதம்பரம் அறை நோக்கிச் சென்றாள்.

  அவளை பார்த்ததும் அமரச் சொன்னவர், தபாலில் வந்த கவரை எடுத்து அவளிடம் தந்தார். அதுவரை ஆசிரம விஷயமாக பேச அழைத்திருப்பார் என்றெண்ணி சென்றவளுக்கு, அந்தக் கவரைப் பார்த்ததும் புரிந்து போனது.

  கையிலிருந்ததை பிரித்து பார்க்க மனமில்லாமல் ஒருவித தவிப்புடனே அமர்ந்திருந்தாள்.அவளது உணர்வினை புரிந்து கொண்டவர் ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து அவள் முன்னே வைத்தார்.

  அதை எடுத்து மடமடவென்று குடித்து முடித்தாள்.அவளுடைய தவிப்பையும்,படபடப்பையும் பார்த்துக் கொண்டிருந்த சிதம்பரம் “பதட்டபடாதே ஸ்ருதி! எதுவும் இன்னும் முடிஞ்சு போயிடல.நீ மனசு வச்சா எல்லாமே சுபமா முடியும்” என்றார்.

  அவரின் வார்த்தையில் அவ்வளவு நேரமிருந்த படபடப்பு குறைந்து அவரை நிமிர்ந்து பார்த்தவள் “இது நான் மட்டும் எடுக்க வேண்டிய முடிவு இல்லைங்க ஐயா. ரெண்டு பேர் சம்மந்தபட்டது.”

  “மனசுவிட்டுப் பேசினா எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.”

  “இதுதான் என் விருப்பம்னு தெரிவிச்சவர்கிட்ட, அதை கொடுக்கிறதுதான் முறை. விருப்பமில்லாமல் இழுபறியா வாழ்க்கையை கொண்டு போறதைவிட அவங்கஅவங்க வழியில் போறது புத்திசாலினம்.”

  “உனக்கு இன்னும் காலங்கள் இருக்கும்மா. வாழ்நாள் முழுக்க இப்படியே இருந்திட முடியாது.”

  “அடம் பிடிக்கிற குழந்தையை ஏமாத்தி வேறொரு பொம்மையை கொடுத்து சமாதானப்படுதுற மாதிரி இல்லையே. இது வாழ்க்கை! அவர் குழந்தையும் இல்ல நான் பொம்மையும் இல்ல. எத்தனை நாட்களுக்குத் தான் உணர்வில்லாத ஜடம் மாதிரியே நடிக்கிறது.”

  அவளின் சலிப்பான பதிலைக் கேட்டவர், என்ன சொல்வதென்று தெரியாமல் “உனக்கு நாளைக்கு நைட் சென்னைக்கு டிக்கெட் போட்டுடவா? துணைக்கு கவிதாவை அழைச்சிட்டு போறியாம்மா?”

  “வேண்டாங்கையா...நான் போன் பண்ணி சொல்லிட்டா என் பிரெண்ட் திவ்யா வந்துடுவா, அவ வீட்டிலேயே தங்கி முடிச்சிட்டு வந்துடுறேன்.”

  அவள் பேசும்போது முகத்தில் எந்த சலனம் இல்லையென்றாலும் விழிகளில் அவளையும் மீறிய சோர்வு தெரிந்தது. அவளிடம் வயதுக்கு மீறிய பக்குவம் எப்போதுமே இருக்கும் என்பதை இங்கு வந்த நாளிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பவர் தானே. இனியும் அவளை அப்படியே விடக்கூடாது. தான் முடிவு செய்திருப்பதை போல் அவளுடைய வாழ்க்கை பாதையை மாற்றி அமைக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.

  அவள் அங்கிருந்து போகும் முன் “எதற்கும் நல்லா யோசிச்சுக்கோ ஸ்ருதிம்மா! இழந்த பின்னாடி யோசிக்கிறதை விட, அதை தடுக்கிறதுக்கு முயற்சி பண்ணலாம்”என்றார்.

  கதவருகில் சென்றவள் மெல்லத் திரும்பி பார்த்து “முயற்சி செஞ்சு தோர்த்து போன பிறகுதான் இங்கே வந்தேன்” என்று கண்கள் கலங்க கூறினாள்.

  அவளின் கலக்கம் அவரையும் தொற்றிக் கொள்ள லேசாக தொண்டையை செருமி தன்னை நிதானித்துக் கொண்டு “ஸ்ருதி! உனக்கு நான் நல்லதுதான் பண்ணுவேன்னு என்மேல நம்பிக்கை இருக்காம்மா?” என்றார்.

  குழப்பத்துடன் பார்த்தவள் “என்னங்கையா இப்படி கேட்குறீங்க?”

  அவளை பார்த்தவர் “நீ இனிமே இங்கே இருக்க வேண்டாம். உன்னுடைய மனசுக்கு ஆறுதல் வேணும்னுதான் இடம் கொடுத்தேன். இப்போ எல்லாம் ஒரு நிலைக்கு வந்துடுச்சு. இனி, நீ உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கணும். அதுக்கு இங்கே இருந்தா சரி வராது.”

  அவர் சொன்னதைக் கேட்டு பதறியவள் கையெடுத்துக் கும்பிட்டு “என்னை இங்கே இருந்து போக சொல்லாதீங்கய்யா. நான் இங்கேயே இருந்திடுறேன்” என்றாள் தவிப்புடன்.

  “இல்ல ஸ்ருதி! நான் சொல்றதை புரிஞ்சுக்கோ. உனக்கு சென்னையில வேலை ஏற்பாடு பண்ணி இருக்கேன். எனக்கு தெரிஞ்ச சிஸ்டர் இருக்காங்க. அவங்க நீ தங்குறதுக்கு இடம் பார்த்து கொடுப்பாங்க. உனக்கு என்ன உதவி வேணும்னாலும் அவங்ககிட்ட கேட்கலாம்.”

  “வேற வழியே இல்லையா ஐயா? நான் இங்கே இருந்து போகத்தான் வேணுமா” என்று பரிதாபமாக கேட்டாள்.

  “ நல்லது நடக்கணும்னா சில கஷ்டங்களை தாங்கிதான் ஆகணும். இன்னைக்கு பெரிய விஷயமாத் தெரியிறது நாளைக்கே ஒண்ணுமில்லாம போகலாம். அதனால நான் சொன்னபடி நீ உன்னுடைய பொருட்களை எல்லாம் எடுத்து வச்சிக்கோ.நான் தாமரை சிஸ்டருக்கு போன் பண்ணி சொல்லிடுறேன்.நீ கோர்ட் வேலையை முடிச்சுகிட்டு அவங்களை போய் பாரு” என்றவர் தாமரையின் போன் நம்பர், அட்ரஸ் அடங்கிய கவரை அவளிடத்தில் கொடுத்தார்.

  அவரிடத்தில் சொல்லிக் கொண்டு தன்னறைக்கு வந்தவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. அடுத்து என்ன, என்று மனதிற்குள் கேள்விகள் வண்டாய் குடைந்தது.

  அடுத்தநாள் இரவு சென்னை செல்லும் பேருந்தில் அமர்ந்திருந்தவளின் மனம் அமைதியின்றி தவித்தது. வெளியில் நிதானமாகக் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அவன் மேல் முகிழ்ந்திருந்த நேசம் பிரிவை எண்ணி வாடியது.

  ‘ஏன் என்னை பிடிக்காமல் போனது? என் முகம் பார்க்கக் கூட விரும்பாமல் ஆறு மாதகாலம் ஒரே வீட்டில் எப்படி இருக்க முடிந்தது? அப்படி என்ன தப்பு செஞ்சேன்? உன்னை பார்க்காமல், நினையாமல் ஒருநாள், ஒருநிமிடம் கூட இருந்ததில்லை. நீ நெருப்பாக வார்த்தைகளை என் மீது கொட்டினாலும் உன்னை என்னால வெறுக்க முடியல. ஆனால், நீயோ விவாகரத்தையே விரும்பினாய். நீ விரும்பிய ஒரே காரணத்திற்காக அதையும் கொடுக்க வந்து கொண்டிருக்கிறேன்’ என்று நினைத்துக் கொண்டு சீட்டை பின்னோக்கி சாய்த்து படுத்துக் கொண்டாள்.

  காலை சரியாக ஐந்தரைமணிக்கு சைதாப்பேட்டையை நெருங்கிய பேருந்திலிருந்து இறங்கினாள் ஸ்ருதி. அங்கே அவளுக்காக தன்னுடைய காரிலேயே தந்தையுடன் காத்திருந்தாள் திவ்யா.

  “வாம்மா! எப்படி இருக்கே? பிரயாணம் எல்லாம் சௌகரியமா இருந்ததா?” என்று விசாரித்தார் திவ்யாவின் தந்தை.

  “நல்லா இருக்கேன் அங்கிள். நீங்க, ஆன்டி எல்லாம் எப்படி இருக்கீங்க? சாரி உங்களை தொந்திரவு பண்ண வேண்டியதா போச்சு.”

  “அதனால என்னம்மா! என் பொண்ணுக்கு செய்ய மாட்டேன்னா!” என்றவர் காரில் டிரைவர் சீட்டில் அமர தோழிகள் இருவரும் பின்னே அமர்ந்து கொண்டனர்.

  “அப்புறம் சொல்லு ஸ்ருதி! என்ன திடீர் பயணம்?” என்றாள் திவ்யா.

  அவள் கேட்டதும் முகம் மாறி உடனே பதில் சொல்லத் தயங்கியவள் “ இன்னைக்கு எங்க கேஸ்க்கு தீர்ப்பு” என்றாள்.

  அதுவரை தோழியை பார்த்ததில் மகிழ்ந்திருந்தவள், அவளின் வார்த்தையில் அதிர்ந்து “என்ன சொல்ற? அதுக்குள்ளே ஒரு வருஷமாச்சா?”

  “ம்ம்...”

  “அருண் அண்ணாக்குத் தெரியுமா?”

  “ம்ம்ம்..ஆனா, இன்னைக்குத்தான் தீர்ப்புன்னு தெரியாது. ஆறுமாசம் முன்னாடி ஒருநாள் கரூருக்கே வந்து சத்தம் போட்டாங்க. அவங்களோட வந்துட சொல்லி.”

  “நான் சுத்தமா இதை எதிர்பார்க்கவேயில்லை ஸ்ருதி. எப்படிடி?.”

  ஸ்ருதியின் முக மாற்றத்தையும் தடுமாற்றத்தையும் கண்டவர் “திவி! என்ன பேசுறே! கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா! என்று அதட்டினார் திவ்யாவின் தந்தை.

  “விடுங்க அங்கிள்! என்கிட்ட உரிமையோட பேச அவ மட்டும்தான் இருக்கா, அவளை தடுக்காதீங்க”என்றாள்.

  ஆனால், அதன்பின்னர் அங்கே யாருக்கும் பேச மனமில்லாமல் அமர்ந்திருந்தனர். அந்த மௌனத்தை உடைக்க காரிலிருந்த சீடீயை போட்டு விட்டார் திவ்யாவின் தந்தை.

  கடவுள் தந்த அழகிய வாழ்வு
  உலகம் முழுதும் அவனது வீடு
  கண்கள் மூடியே வாழ்த்து பாடு

  அவளது மனநிலைக்கேற்ப பாடலும் ஒலிக்க வீடு சென்றடையும் வரை கண்களை மூடி தனக்குள் நிம்மதியைத் தேடினாள்.

  திவ்யாவின் அன்னையிடத்தில் ஓரிரு வார்த்தைகள் பேசியபின் இருவரும் அறைக்குள் அடைந்தனர்.

  உள்ளே சென்றதும் ஸ்ருதியின் கைகளைப் பிடித்துக் கொண்ட திவ்யா “என்னால தாங்க முடியல ஸ்ருதி.உன்னை ஒருத்தருக்குப் பிடிக்காம போகுமா? அவசரமா நடந்த கல்யாணம் அவசரமாவே முடிஞ்சு போகனுமா? ஏன்?” என்று கலங்கினாள்.

  “எல்லோருக்கும் எல்லோரையும் பிடிக்கனும்னு அவசியமில்லையே திவி.உனக்கு என்னை பிடிக்க ஒரு காரணமிருக்கு. அதே மாதிரி என்னைப் பிடிக்காம போகிறதுக்கு அவர் கிட்ட ஏதோ ஒரு காரணமிருக்கும்.”

  “என்ன காரணமாம்? சொல்ல சொல்லேன்” என்றாள் கடுப்பாக.

  அவளின் எரிச்சலைப் பார்த்து மெல்ல சிரித்து “ திவி! பஸ்ல வந்ததுல ரொம்ப களைப்பாயிருக்கு கொஞ்சநேரம் தூங்கலாமா?”

  “சாரி ஸ்ருதி! நான் பேசிட்டே இருந்திட்டேன் பாரு! சரி உனக்கு எத்தனை மணிக்கு கோர்டுக்குப் போகணும்? நானும் உன்னோட வரேன்.”

  “பத்து மணிக்கு அங்கே இருக்கணும். நீ வர வேண்டாம் திவி. ஆன்ட்டிக்குப் பிடிக்காது. எனக்கு கால் டாக்ஸி மட்டும் பிடிச்சுக் கொடுத்துடு.”

  “அதெல்லாம் அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க.”

  “இல்ல திவி! சொன்னா புரிஞ்சுக்கோ! நான் தனியா போயிட்டு வரேன்.”


  கதையின் தொடர்ச்சி கீழே.....
   
  Last edited: Sep 12, 2016
   
 5. Sudha Ravi

  Sudha Ravi Bronze Wings Moderator New wings LW WRITER

  Messages:
  7,541
  Likes Received:
  5,864
  Trophy Points:
  113
  ஒன்பதரை மணிக்கு கோர்ட் வளாகத்துக்குள் நுழைந்தாள். ஆங்காங்கே கூட்டம்கூட்டமாக நின்று கொண்டு தங்கள் வழக்கறிஞரை பார்த்து பேசிக்கொண்டு இருந்தனர் மக்கள்.

  அவள் வந்ததை கவனித்துவிட்டு அவளைப் பார்க்க வந்தார் வக்கீல் சரவணன்.

  “வாங்க மேடம்! லேட்டா வந்துடுவீங்களோன்னு பயந்துகிட்டு இருந்தேன். நம்ம டைம் பத்து மணிதான். அப்படி அந்த மர நிழலில் வெயிட் பண்ணுங்க. நான் அவங்களை பார்த்திட்டு வந்திடுறேன்.”

  “சரி சார். நான் வெயிட் பண்றேன். நீங்க பாருங்க”என்றாள்.

  ஒரு பதினனைந்து நிமிடங்கள் கடந்த நிலையில், யாரோ அவள் தோளை தொடுவது போல் தோன்ற திரும்பியவளின் விழிகள் விரிந்தது.

  கண்களில் கண்ணீர் குளம் கட்ட “அத்தை நீங்களா?”

  அவள் கன்னம் தொட்டு வருடி “எப்படிடா இருக்கே? நீ சொல்லலேன்னா எனக்கு தெரியாம போய்டுமா?”

  “நல்லாயிருக்கேன் அத்தை...நீங்க...உங்களுக்கு எப்படித் தெரியும்?”

  “இந்த மதி பயதான் சொன்னான்.அதுவும் ராத்திரி பத்து மணிக்கு.”

  “எப்படி இருக்கீங்க அத்தை? நீங்க மட்டும் தனியாவா வந்தீங்க?”

  “பெரியவன் கொண்டு வந்து இறக்கி விட்டுட்டு போனான். அகல்யாவும், ஆர்த்தியும் உன்னை பார்க்கனும்னாங்க.சின்னதுங்க ரெண்டும் இன்னும் எழுந்திரிக்கல. அதுங்க ரெண்டையும் எழுப்பி சாப்பாட்டைக் கொடுத்து மாமா கிட்ட விட்டுட்டு வருவாங்க.அதுசரி ஒரு வருஷம் என் கண்ணில் படாம இருந்திட்டு எப்படி இருக்கீங்கன்னு கேட்கிற?அவன் பண்ணின தப்புக்கு என்னை ஒதுக்கிட்டியே.”

  “அது..இல்லத்தை”

  அந்தநேரம் அங்கே வந்த சரவணன் “கிளம்பலாமா மேடம்” என்றான்.

  “வந்துட்டான்! விளங்காதவன்! நல்லா தின்னுட்டு மினுமினுதான் இருக்கான்.”

  அவர் சொன்னதை கேட்டு அதிர்ந்தவன் “மேடம்! என்னய்யா சொன்னீங்க?”

  “அட, உங்களை இல்ல தம்பி. நான் பெத்ததை சொன்னேன்.”

  காயத்ரியின் அரட்டல், மிரட்டலில் திருதிருவென்று முழித்துக் கொண்டு நின்றான் சரவணன்.

  “ஏன் ஸ்ருதி, உனக்கு வேற வக்கீலே கிடைக்கலையா? நல்லா இருக்கவனையே உம் புருஷன் லூசாக்கிடுவான்.இவன் முழிக்கிற முழியே சரியில்லையே.”

  அவர் பேசப்பேச சிரிப்பை அடக்கிக் கொண்டு “இவர் பெரிய வக்கீல்தான் அத்தை” என்றாள்.


  “என்னத்தை பெரிய வக்கீலு? இந்நேரம் எம் பையன் சிண்டை பிடிச்சு இழுத்து வந்து சேர்த்து வச்சு இருக்க வேண்டாமா? அங்கே பாரு! தென்னை மரத்துல பாதி வளர்ந்து நிக்கிறான்.அந்த அளவுக்கு மூளையும் வளர்ந்திருந்தா பரவாயில்லை.”

  அவர் காட்டிய திசையில் காரின் மேல் சாய்ந்து நின்று தன் வக்கீல் மதிவாணனுடன் பேசிக்கொண்டிருந்தான் நிகில்.

  ஒரு வருடத்திற்கு பிறகு அவனை பார்த்ததும், நெஞ்சில் உறங்கிக் கொண்டிருந்த நேசம் தலைத்தூக்க, இன்றைய நிலையும் ஞாபகம் வர அவனுருவத்தை கண்களில் நிறைத்து நெஞ்சில் பொக்கிஷமாக பூட்டிக் கொண்டாள்.

  அவனோ இவள்புறம் திரும்பாது கோர்ட் வளாகத்துக்குள் செல்ல ஆரம்பித்தான்.

  “அவர் உங்ககூட வரலையா அத்தை?”

  “என் கூடவா? நீவேற...துரை வீட்டுக்கே வரல. ஹோட்டலில் தங்கி இருக்கார்.”


  “என்ன அத்தை சொல்றீங்க? வீட்டுக்கு வரலையா?”

  “ஆமாம்! பெரிய ரோஷக்காரர் இல்ல! நீயில்லாம வீட்டு பக்கம் காலெடுத்து வைக்காதேன்னு சொன்னேன். அதுக்குத்தான் ஹோட்டலில் தங்கி இருக்கான்.”

  அதை கேட்டு அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு “என்னால தானே அத்தை! உங்க பையனும் நீங்களும் பிரிஞ்சு இருக்கீங்க. அவரை கூப்பிட்டு நீங்களே பேசுங்க அத்தை, ரொம்ப சந்தோஷப்படுவார்.”

  “நான் சொன்னா சொன்னதுதான்!உன்னோட அவன் வீட்டுக்கு வந்தாத்தான் பேசுவேன்.இல்லேன்னா இப்படியே போகட்டும்!”

  “அத்தை...”

  “மேடம்! டைம் ஆச்சு நாம போகலாமா?” என்றவனை கொலைவெறியுடன் பார்த்தார் காயத்ரி.


  “ம்ம்..போகலாம்! வாங்க அத்தை” என்று அவரின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு நடந்தாள்.

  அறை வாயிலில் நின்று கொண்டிருந்த நிகிலிடம் “நல்லா யோசனை பண்ணிக்கிட்டே இல்ல நிக்கி? அப்புறம் மாத்தமாட்டியே!’ என்றுக் கேட்டுக் கொண்டான் மதி.

  “இப்போதான் சரியான முடிவெடுத்திருக்கேன்.இனி, இதில் மாற்றமில்லை மதி. நீ ப்ரோசீட் பண்ணு” என்றான்.

  அவர்களிருவரும் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்த காயத்ரி மகனின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியில் கடுப்பாகிப் போனார்.

  “இவனைப் போயி மகனா பெத்தேனே! பாரு! என்னவொரு சந்தோஷம் பொண்டாட்டியை பிரிய போறதுல. இந்த மதிபய அம்மா! அம்மான்னு கூப்பிட்டுட்கிட்டு எத்தனை தடவை என் கையால சாப்பிட்டு இருக்கான். எல்லாமா சேர்ந்து கூட்டுகளவானித்தனம் பண்றானுங்க.இனிமே, எவனாவது வீட்டுப் பக்கம் வரட்டும் தொடப்பக்கட்டையாலேயே நாலு போடுறேன்”என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

  அவர் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டு அங்கே நடப்பவைகளை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ருதி.

  மதி ஜட்ஜ் இருந்த அறைக்குள் சென்று சிறிது நேரம் கழித்து வந்தவன் நிகிலை உள்ளே அழைத்து சென்றான். ஐந்து நிமிடம் கழித்து இருவரும் வெளியே வரும்போது நிகிலின் முகத்தில் மகிழ்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது.

  “மச்சி! அம்மா பார்க்கிற பார்வையே சரியில்லை.ஏதாவது சொதப்பினே, என்னை ஓடவிட்டு சாத்துவாங்க சொல்லிட்டேன். என்னை காப்பாத்த வேண்டியது உன் கையிலதான் இருக்கு”என்றான் மதி.

  இவர்கள் வழக்கடித்துக் கொண்டிருக்க, சரவணன் ஜட்ஜை பார்க்க சென்றான். அப்போது நிகிலின் அண்ணன் ஆகாஷும், அவன் மனைவி அகல்யா, நீரஜின் மனைவி ஆர்த்தி மூவரும் வந்து சேர்ந்தனர்.

  இருவரும் ஸ்ருதியிடம் நலம் விசாரிக்க, ஆகாஷ் சென்று நிகிலிடம் பேசி வந்தான். அப்போது ஜட்ஜ் அறையிலிருந்து வந்த சரவணன் “ மேடம்! ஜட்ஜ் ஐயாவுக்கு இப்போ முக்கியமான ஒரு வேலை வந்திருக்காம், அதனால தீர்ப்பை ஒருரெண்டு நாள் கழிச்சு வச்சுக்கலாம்னு சொல்லிட்டாங்க”என்றான்.

  அவனது வார்த்தையில் அங்கிருந்தவர்களின் மனநிலை எப்படி சொல்வது. தீர்ப்பு ரெண்டுநாள் தள்ளிப்போனதே நல்ல சகுனமாக எண்ணி ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தனர்.
  காயத்ரிக்கு மட்டும் சிறிது சந்தேகமாக இருந்தது. ‘நமக்கு முன்பே நிக்கிக்கு விஷயம் தெரிஞ்சுருக்கு, அப்போ அவன் முகத்துல தெரிகிற சந்தோஷம் டவுட்டா இருக்கே என்று சந்தகக் கண்ணோடு அவனைப் பார்த்தார்.இவன் ஏதோ தில்லுமுல்லு பண்ற மாதிரி தெரியுதே’என்று நினைத்தார்.

  அவனும் அப்போது அவரையேதான் பார்த்துக் கொண்டிருந்தான். ‘ஆஹா, அம்மாவுக்கு சந்தேகம் வந்துடுச்சு போலருக்கே. நல்லா குழம்புமா! குழம்பு! கல்யாணத்தப்ப என்னை எப்படி சுத்தலில் விட்டே. இப்போ என் டைம் உன்னை சுத்தலில் விடுறேன் பாரு” என்று சொல்லிக் கொண்டவன் மனது தனது திருமண நிகழ்வுகளை எண்ணிப் பார்க்கத் தொடங்கியது.

  கதைக்கான கருத்துக்களை இந்த திரியில் தெரிவியுங்கள்.....................


  http://ladyswings.com/community/threads/sudha-ravis-அலை-பாயும்-நெஞ்சங்கள்-comments.3924/

  அலைபாயும்.........
   
  Last edited: Sep 12, 2016
   
 6. Sudha Ravi

  Sudha Ravi Bronze Wings Moderator New wings LW WRITER

  Messages:
  7,541
  Likes Received:
  5,864
  Trophy Points:
  113
  அலை- 2
  [​IMG]

  ஒன்றரை வருடங்கள் முன்பொரு நாள். துபாயில் தனது அபார்ட்மெண்டின் ஸ்விம்மிங் பூலில் இரவு எட்டரை மணிக்கு சுகமாய் நீந்திக் கொண்டிருந்தவனை தொலைப்பேசி தொல்லைபேசியாய் கலைத்தது.

  போனை எடுக்காமலே அன்னையிடமிருந்துதான் என்பதை புரிந்து கொண்டவன், ஈரம் சொட்டசொட்ட வெளியில் வந்து அரை மணி நேரம் கழித்து அழைப்பதாகக் கூறி வைத்தான்.

  மனமோ இந்த அழைப்பு எதற்காக என்பதை புரிந்து கொண்டது போல் சலிப்பைக் காட்டியது. திருமணமில்லாமல் வாழவே முடியாதா? ஏன் இப்படி படுத்துகிறார்கள் என்று புலம்பிக் கொண்டே வீட்டிற்கு வந்து குளித்து தயாராகி போனுடன் அமர்ந்தான்.

  “சொல்லுங்கம்மா, எப்படி இருக்கீங்க? எல்லோரும் நல்லா இருக்காங்களா?”

  “எல்லாரும் நல்லா இருக்கோம். எப்பவும் லேட்டாத்தான் வீட்டுக்கு வருவியா நிக்கி.”

  “ஆமாம்மா. நீங்க என்ன இந்த நேரத்துக்கு தூங்காம இருக்கீங்க?”

  “ என்ன பண்ண சொல்ற! எல்லாம் உன்னை பத்தி கவலைதான். தூக்கம் வந்து தொலைக்க மாட்டேங்குது.”

  “...”

  “பேசமாட்டியே! சரி உடனே உன் மெயிலை செக் பண்ணு. பொண்ணு போட்டோ அனுப்பி இருக்கேன்.”

  “அம்மா! சொன்னா கேட்க மாட்டீங்களா? நான் எதையும் பார்க்க மாட்டேன். எனக்கு கல்யாணம் வேண்டாம்.”

  “ஏண்டா நீயென்ன சாமியாரா போகப் போறீயா? இதோ பாரு! உனக்கு அம்மா மேல உண்மையா பாசம் இருந்தா ஒழுங்கா பொண்ணு போட்டோவை பார்த்து சம்மதத்தை சொல்லு.”

  “சரி எனக்கு உங்க மேல உண்மையான பாசமில்லேன்னு வச்சுகோங்க.”

  அவனிடம் பேசிக்கொண்டிருந்தவர் அவனது பதிலில் அயர்ந்து போய் ரீசிவரை மூடிக் கொண்டு “எப்பா, என்னால முடியல. தலையால தண்ணிக் குடிக்க வைக்கிறான்.இவனை நான் செத்துடுவேன்னு சொல்லி மிரட்டி கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு பார்த்தா,இவனே கொண்டு தள்ளுவான் போலருக்கு போய் சாவுன்னு” என்று கணவரிடம் புலம்பினார்.

  “எதுக்கும் அப்படி சொல்லிப் பாரேன் காயு”என்றார் சாம்பசிவம்.

  அவரை ஒருமாதிரியாகப் பார்த்து “ஓஹோ..அந்த சாக்குல என்னை பரலோகத்துக்கு அனுப்ப ட்ரை பண்றீங்களா?”என்று நக்கலாக கேட்டார்.

  அதற்குள் நிகில் “ஹலோ...அம்மா! அம்மா! லைன்லதான் இருக்கீங்களா?”

  “இருக்கேன்..இருக்கேன்! எங்கே போகப்போறேன். எனக்குத்தான் முடிவை கொண்டு வர மாட்டேங்குறானே அந்த ஆண்டவன்.”

  “அம்மா! இப்படியெல்லாம் பேசாதீங்க. நான் உங்களுக்கு விசாவுக்கு ஏற்பாடு பண்றேன். ஒரு மூணு மாசம் இங்கே வந்து என்னோட இருங்க.”

  அவனை எப்படி சமாதானப்படுத்தி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைப்பது என்கிற யோசனையில் எழுந்து நடந்தவர் அங்கிருந்த டீபாயில் இடித்துக் கொள்ள வலியில் “ஸ்..ஸ்..ஆ..ஆ..” என்று அலறினார்.

  அவர் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்த ஆகாஷும், நீரஜும் பாய்ந்து வந்து “என்னம்மா ஆச்சு?” என்று பதற்றத்துடன் வினவினர்.

  இடித்துக் கொண்டதில் கையிலிருந்த போன் கீழே விழுந்து ஸ்பீக்கர் ஆன் ஆகி இருந்தது. காயத்ரியின் அலறலும் அதை தொடர்ந்து ஆகாஷ், நீரஜின் விசாரிப்பும் போன் வழியே நிகிலை எட்ட, அவன் படபடப்புடன் “அம்மா! அம்மா! என்ன ஆச்சும்மா?” என்று பதறத் தொடங்கினான்.

  அவன் பதறுவதை பார்த்த காயத்ரி ஆகாஷிடம் போனை ஆப் செய்ய சொன்னார் சைகையில்.
  “எதுக்கும்மா போனை ஆப் செய்ய சொன்னீங்க?” என்று கேட்டான் ஆகாஷ்.


  “உன் தம்பி தவிச்சதைப் பார்த்தேயில்ல.இதை வச்சு அவனை பிடிச்சு மடக்கிடலாம் அதுக்குத்தான்.”

  “எது டீபாயில் இடிச்சு கிட்டதை வச்சா?” என்று கேலியாக கேட்டான் நீரஜ்.

  “நீ அப்பப்போ சாம்பசிவம் வாரிசுதான்னு நிருபிக்கிறடா”.

  அப்போது நிகில் மீண்டும் அழைக்க “டேய் யாரும் போனை எடுக்காதீங்க.நான் சொல்றதை கவனமா கேட்டுக்கோங்க. நான் பேசிட்டு இருக்கும்போதே மயக்கம் போட்டு விழுந்துட்டேன். நீங்க என்னை டாக்டர்கிட்ட தூக்கிட்டு போனீங்க. டாக்டர் மைல்ட் அட்டாக்ன்னு சொல்லி ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணிட்டார். ஒருமணிநேரம் கழிச்சு போனை அட்டென்ட் பண்ணுங்க. பதட்டத்தோட பேசணும் சரியா” என்றார்.

  “அவன் பாவம்மா. இப்போவே என்னவோ ஏதோன்னு பயந்து போயிருப்பான்.”

  “இதோ பாருங்க! அவன் மேல இரக்கப்படீங்கன்னா அவனுக்கு கல்யாணமே நடக்காது. நமக்கு இப்போ நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு. இதை வச்சு அவனை ஒத்துக்க வச்சிடலாம்.ஆனா, ஒன்னு எல்லோரும் ஒழுங்கா நடிக்கணும்.”

  அதன்பின்னர் காயத்ரி சொல்லியபடி நிகிலின் அழைப்பை நிராகரித்தனர். ஒரூமணி நேரம் சென்ற பின்னர் மீண்டும்மீண்டும் அவன் அழைத்துக் கொண்டேயிருக்க “ சரி, போனை எடுத்து நான் சொன்ன மாதிரி சொல்லுடா நீரஜ்” என்றார்.

  “ஹலோ! ஹலோ! யார் லைன்ல இருக்கீங்க? அம்மாவுக்கு என்ன ஆச்சு? ஏன் யாருமே போனை எடுக்கல?”

  “நிக்கி! நீரஜ் பேசுறேன்டா.நான் சொல்றதை பதட்டப்படாம கேளு. அம்மா உன்கிட்ட பேசிட்டு இருக்கும்போதே மயங்கி கீழே விழுந்துட்டாங்க.”

  “என்னது! மயங்கிட்டாங்களா?என்னடா நல்லாத்தானே இருந்தாங்க.திடீர்ன்னு என்ன உடம்புக்கு?”

  “தண்ணியை தெளிச்சு பார்த்தும் எழுந்திரிக்கவேயில்லடா. பயந்துபோய் டாக்டர்கிட்ட தூக்கிட்டு போனோம். அவர் செக் பண்ணிட்டு மைல்ட் அட்டாக்னு சொல்லி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இன்னைக்கு நைட் அப்சர்வேஷன்ல இருக்கனும்னு சொல்லிட்டாருடா” என்றான் கரகரப்புடன் கூடிய குரலில்.

  “நீரு! நீரு! கவலைப்படாதேடா அம்மாவுக்கு ஒண்ணுமில்ல.நாளைக்கு காலையில எழுந்துடுவாங்க.எனக்கு தகவல் சொல்லிக்கிட்டே இருடா.நான் இப்போவே டிக்கெட் கிடைக்குதான்னு பார்க்கிறேன்.”

  “சரிடா..நான் சொல்றேன்” என்று போனை வைத்தான்.

  அவனைப் பார்த்த காயத்ரி “டேய் நீரூ! எப்படிடா இந்த மாதிரி ஒரு நடிகனை உள்ளுக்குள்ள இத்தனை நாள் மறைச்சு வச்சிருந்த? என்னமா நடிக்கிற!” என்றார்.

  “ஆமாம் அத்தை. கமல் எல்லாம் தோத்தார்” என்றாள் நீரஜின் மனைவி ஆர்த்தி.

  “ சரி, சரி..அடுத்து என்ன பண்றதுன்னு யோசனை பண்ணுங்க”என்றார் சாம்பசிவம்.

  “உடனே ஏதாவது ஒரு பெரிய ஹோட்டல்ல ரூமை போடுங்க.நம்ம பக்கத்துவீட்டு ஆளுங்களுக்கு தெரியிற மாதிரி என்னை தூக்கிட்டு போய் கார்ல ஏத்துங்க.இன்னைக்கு நைட் நாம எல்லாம் அந்த ஹோட்டல்லையே இருப்போம்.”

  “ஹோட்டல்ல ரூம் போடணுமா? எதுக்கு அத்தை?” என்றாள் அகல்யா.

  “உன்னை தூக்கிட்டு போகனுமா? என்னம்மா விளையாடுறியா?”என்றான் ஆகாஷ்.

  “ஆமாண்டா! எனக்கு ஆசைபாரு. நாம நிகில்கிட்ட என்ன சொல்லி இருக்கோம். டாக்டர்கிட்ட தூக்கிகிட்டு போனோம். ஒருநாள் ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ண சொன்னார்னு சொல்லி இருக்கோம்.ஓருவேளை அவன் கிளம்பி வந்துட்டான்னு வை, நாம சொன்னதை உண்மைன்னு நிரூபிக்க வேண்டாமா?”

  “அத்தை சூப்பர் கிரிமினல் மூளை உங்களுக்கு” என்றாள் ஆர்த்தி.

  “நீ என்னை புகழுறியா இல்ல கேலி பண்றியா?”

  “ச்சே..ச்சே..மருமக உண்மையைத்தான் சொல்லுது” என்றார் சாம்பசிவம்.

  “சரிம்மா.நான் ரூம் புக் பண்றேன்.நீங்க எல்லாம் ரெடி ஆகுங்க.”

  “ம்ம்..நல்ல பெரிய ஹோட்டலா பார்த்து ரூம் போடுடா.நான் இதுவரைக்கும் பைவ்ஸ்டார் ஹோட்டல்ல தங்குனதே இல்ல.”


  கதையின் தொடர்ச்சி கீழே...........
   
  Last edited: Sep 14, 2016
   
 7. Sudha Ravi

  Sudha Ravi Bronze Wings Moderator New wings LW WRITER

  Messages:
  7,541
  Likes Received:
  5,864
  Trophy Points:
  113
  “அம்மா! பைவ்ஸ்டார் ஹோட்டலா வேணும். அதுக்கு எவ்வளவு ஆகும் தெரியுமா?”

  “ஏண்டா ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருந்தா எவ்வளவு செலவு பண்ணி இருக்கணும். அதை இதுக்கு பண்ணுங்கடா. நாங்களும் ஒருநாள் என்ஜாய் பண்றோம்.”

  “இதுமட்டும் உம்புள்ளைக்கு தெரியனும் அப்போ இருக்கு.”

  “நீங்க வாயைத் திறக்காம இருந்தாலே போதும்.”

  அடுத்த அரைமணி நேரத்தில் ராடிசன் ப்ளுவில் ரூம் போட்டு அனைவரும் அங்கே சென்றனர். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் நிகிலை அழைத்து நிலைமை அப்படியேத்தான் இருக்கிறது என்றும் , கொஞ்சம் முன்னேற்றம் என்றும் கூறிக் கொண்டே இருந்தனர்.

  காலையில் எழுந்த காயத்ரி அங்குள்ள உணவு வகைகளை ஒரு பிடிபிடித்துக் கொண்டிருந்தார்.


  பதினொரு மணியளவில் பெரிய ஐஸ்கிரீம் ஒன்றை ஆர்டர் செய்து அதை ஆனந்தமாக சுவைத்துக் கொண்டிருந்தார்.

  “அம்மா! இப்படியே உன்னை நிகில் பார்க்கணும்.சூப்பர் சீனா இருக்கும்” என்றான் ஆகாஷ்.

  “ஏண்டா உனக்கு இந்த கொலைவெறி? நானே இப்போதான் பைவ்ஸ்டார் ஹோட்டலை என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்கேன். இப்போ வந்து பீதியைக் கிளப்பிகிட்டு.”

  அப்போது அங்கு அவசரமாக வந்த நீரஜ் “அம்மா! நிகில் வந்து இறங்கிட்டேன்னு போன் பண்ணினானம்மா” என்றான் பதட்டத்துடன்.

  கையிலிருந்த ஐஸ்கிரீம் மேலெல்லாம் கொட்ட“என்னது! வந்துட்டானா?இவ்வளவு சீக்கிரமா எப்படிடா வந்தான்?இப்போ என்னடா பண்றது?” என்றார் அதிர்ச்சியில்.

  “ஆமாம் இப்போ வந்து கேளுங்க! அவன் நேரா ஹாஸ்பிட்டலுக்கே வரேன்றான்.இங்கே வர சொல்லவா?”என்றான் நக்கலாக.

  “ஆகாஷ் உன் பிரெண்ட் ஒருத்தி ஹாஸ்பிடல் வச்சு இருக்காளே. அவளுக்கு உடனே போனை போடு.அவகிட்ட சொல்லிட்டு என்னை அங்கே கொண்டு சேரு.”

  “ஐயோ! அது மெட்டர்னிட்டி ஹாஸ்பிட்டல்மா.”

  “ஏண்டா அதுல என்னை சேர்க்க மாட்டாங்களா?”

  தலையிலடித்துக் கொண்ட சாம்பசிவம் “இப்போவாவது நான் சொல்றதை கேளுங்கடா. ஆகாஷ்! நீ அகல்யாவை கூட்டிகிட்டு உடனே வீட்டுக்கு கிளம்பு. நீரஜ் நீ நிகிலை நேரா வீட்டுக்கு போகச் சொல்லு. டாக்டர் அம்மாவை டிஸ்சார்ஜ் பண்ண சொல்லிட்டார்னு சொல்லு. நாங்க கிளம்பி வீட்டுக்கு வந்துகிட்டே இருக்கோம்ன்னு சொல்லு.”

  “சரிப்பா.ஆனா, ஹாஸ்பிட்டலில் இருந்து வர அம்மாவுக்கு ட்ரிப்ஸ் எல்லாம் ஏத்தி இருப்பாங்க இல்ல. அப்போ அம்மா கையில ஒண்ணுமே இல்லாம போனா சரி வராதே.”

  “ஆமாம்! அதை மறந்தே போயிட்டேன் பாரு. ஆகாஷ்! நீ உன் பிரெண்டுக்கு போனை போட்டு எப்படி போடுறதுன்னு கேட்டு அதை வாங்கி கொடுத்திட்டு போ.நாங்க போட்டு அழைச்சிட்டு வரோம்” என்றார் மகனைக் கண்டு கண்ணடித்தபடி.

  ஐயோ! ஊசியா? எனக்கு வேண்டாம். டேய்! என்னை விட்டுடுங்கடா! நான் பாவம் இல்ல.”

  “ம்ம்..அதை நடிக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே யோசிச்சு இருக்கணும்.இப்போ அனுபவி” என்றார் சாம்பசிவம்.

  அதன்பின்னர் பேசியபடி அனைத்தும் நடந்திருக்க நிகில் வீடு போய் சேர்ந்து ஒன்றைரை மணி நேரம் கழித்து காயத்ரியை அழைத்துச் சென்றனர்.

  அன்னையை மூன்று வருடங்கள் கழித்து இப்படியொரு நிலையில் பார்ப்போம் என்று எதிர்பார்க்காத நிகிலுக்கு, அவருடைய உடல் மெலிவும், சோர்ந்த நிலையும் குற்ற உணர்ச்சியை தூண்டியது.

  அவர் அருகில் சென்றமர்ந்தவன் “என்னம்மா இது! உடம்பை பார்த்துக்க மாட்டீங்களா?”

  அவனை பார்த்து சோர்வாக சிரித்தவர் “நான் படுக்கலேன்னா நீ வந்து இருப்பியா.மூணு வருஷமா வராமா தானே இருந்த” என்றார்.

  அப்போது உள்ளே வந்த ஆர்த்தி ஒரு டம்ளர் கஞ்சியை எடுத்து வந்து கொடுத்தாள்.

  “என்னதும்மா இது?”

  “கஞ்சி அத்தை. டாக்டர் ஒருரெண்டு, மூணு நாளைக்கு ஜீரணம் ஆகுற மாதிரி கஞ்சி மட்டும் கொடுங்கன்னு சொன்னார் அத்தை” என்றாள்.

  “ம்ம்”என்று முனங்கியவர் “ஆர்த்தி! என் கழுத்துல ஏதோ ஊருற மாதிரி இருக்கு என்னன்னு பாரேன்” என்றார்.

  அவள் கிட்டே வந்து பார்க்கும்போது “உங்க மாமா சொன்னாரா கஞ்சி கொடுக்க சொல்லி. இந்த எகத்தாளம் எல்லாம் அவருக்குத் தான் தெரியும். இதெல்லாம் முடியட்டும் அவருக்கு ஒரு மாசத்துக்கு கஞ்சிதான்.”

  “இல்ல அத்தை..அது..வந்து..”

  “சரி,சரி ரொம்ப இழுக்காதே! இவன் போன பிறகு சாப்பிட ஏதாவது கொண்டு வா. பசி உயிர் போகுது.”

  “சரிம்மா நீங்க ரெஸ்ட் எடுங்க.நான் ஹாலில் இருக்கேன்” என்று எழுந்தவனை தடுத்து “நிக்கி கண்ணா, நீ வந்ததுதான் வந்துட்டே.அப்படியே நான் சொன்ன பொண்ணைப் பாரு.பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்.”

  “என்னம்மா இது! எந்த நேரத்துல என்ன பேசிட்டு இருக்கீங்க? முதலில் உங்க உடம்பு குணமாகட்டும்.மத்ததெல்லாம் அப்புறம் பார்க்கலாம்.”

  “இல்லடா! உனக்கு கல்யாணம் பண்ணாம எனக்கு உடம்பு சரியாகவே ஆகாது.இப்படியே போனா நீ அடுத்து எனக்கு காரியம் பண்ணத்தான் வரணும்.”

  அவரது வார்த்தையில் அதிர்ந்து போனவன் “என்னம்மா..என்னம்மா..இப்படி..சரி உங்களுக்கென்ன நான் கல்யாணம் பண்ணிக்கணும் அவ்வளவு தானே. சரி பண்ணிக்கிறேன்.”

  அவனது சம்மதத்தில் அதிர்ச்சியாகி நெஞ்சை பிடித்துக் கொண்டு தலையணையில் சாய்ந்துவிட, அதைப் பார்த்த ஆர்த்தி “அத்தை! அத்தை! என்ன பண்ணுது?” என்று அவரருகில் சென்று பார்க்க “என் பெர்பார்மன்ஸ் அவ்வளவு நல்லாவா இருக்கு.உடனே சம்மதம் சொல்லிட்டான்”என்றார் அவள் காதில்.

  “சூப்பர் போங்க! என் வாழ்நாளில் இப்படி ஒரு பெர்பாமான்சை பார்த்ததேயில்லை.”

  “நல்லவேளை அதிகநாள் என்னை பட்டினி போடாம காப்பாத்திட்டான்.”

  “என்ன ஆச்சு அண்ணி அம்மாவுக்கு.ஏதோ சொல்றாங்களே?”

  “ஒண்ணுமில்ல நிக்கி. அவங்களுக்கு ரொம்ப சந்தோஷமாம்.உடனே எல்லா ஏற்பாடையும் செய்யணும்னு சொல்றாங்க.நீங்க திரும்பி போறதுக்குள்ள கல்யாணத்தை முடிக்கணும்னு சொல்றாங்க.”

  நிகில் ஒத்துக் கொண்டதில் வியந்து போன சாம்பசிவம் “உங்க அம்மாவ என்னவோன்னு நினைச்சேன்டா ஆகாஷ் சாதிச்சிட்டாளே!” என்றார்.

  அதன்பின் நேரத்தை கடத்தாமல் மடமடவென்று திருமண வேலைகளை பார்க்க ஆரம்பித்தனர். தாமதமாக்கினால் நிகில் மறுத்துவிடுவானோ என்கிற பயத்தில் அனைவரையும் விரட்டி கல்யாண வேலைகளை செய்ய வைத்தார் அன்னை காயத்ரி.

  கதைக்கான கருத்துக்களை இந்த திரியில் பதியுங்கள்.......

  http://ladyswings.com/community/threads/sudha-ravis-அலை-பாயும்-நெஞ்சங்கள்-comments.3924/
   
  Last edited: Sep 14, 2016
   
 8. Sudha Ravi

  Sudha Ravi Bronze Wings Moderator New wings LW WRITER

  Messages:
  7,541
  Likes Received:
  5,864
  Trophy Points:
  113
  அலை - 3
  [​IMG]
  இருவாரங்களில் அழகான விடியலுடன் ஆராவரமில்லாத எளிமையான திருமணமாக கோவிலில் நடந்தது நிகில், ஸ்ருதியின் திருமணம்..அவன் மனமோ எந்தவித ஆர்வமோ,சந்தோஷமோ இல்லாமல் வெறுமையாக இருந்தது. இந்த திருமணம் தேவைதானா என்றே தோன்றியது.

  நிகில் குடும்பத்தினரும் நிம்மதியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். எந்தநேரம் அவன் முரண்டு பிடிப்பானோ திருமணம் வேண்டாம் என்று போய் விடுவானோ, என்றெண்ணி பயந்து கொண்டிருந்தது போக மிக அமைதியாக எந்தவித சங்கடங்களுமின்றி முடிந்தது திருப்தியை தந்தது.

  காயத்ரி தன் நடிப்பைத் தொடர்ந்து கொண்டிருந்தார். நிகிலுக்கோ அம்மாவின் முகத்தில் தெரிந்த நிம்மதியில் சந்தோஷம் அடைந்தாலும், வாழ்க்கையை எப்படி வாழப்போகிறோம் என்று கலக்கம் அவன் மனதை அரித்துக் கொண்டிருந்தது.


  ஸ்ருதியின் பாட்டியோ மாலையும் கழுத்துமாக நின்றிருந்த பேத்தியின் மேல் கண் வைத்திருந்தவர்,பொறுப்பை முடித்த திருப்தியுடன் நின்றிருந்தார். அருகில் நின்ற பேரனைப் பார்த்து மெலிதாக ஒரு புன்னகையை சிந்தியவர் “இப்போதான் நிம்மதியா இருக்குப்பா.இவளை கட்டிக் கொடுத்து அவளுக்கு ஒருவழியை காண்பிச்சாச்சு . தேவையில்லாத பாரத்தை இத்தனை நாள் தூக்கிச் சுமந்தோம். இப்போ அடுத்தவன் தலையில் இறக்கி வச்சாச்சு.இனியாவது புத்தியுள்ள புள்ளயா அவளை தள்ளி வைக்கிற வழியை பாரு. அப்போதான் உனக்கு நல்ல குடும்பத்து பொண்ணு கிடைக்கும்.”

  அவரை சற்று கோபத்துடன் திரும்பி பார்த்த அருண் “என்ன பாட்டி இது!எந்த நேரத்தில் என்ன பேசுறது கணக்கில்லாம போச்சு !”என்று அதட்டினான்.

  சாமி சன்னதியில் இருந்து வெளியே வந்து பெரியவர்கள் பிரகாரத்தில் அமர்ந்து விட, நிகிலையும் ஸ்ருதியையும் பிரகாரத்தை சுற்றி வரும்படி கூறினார்கள்.இருவரும் சேர்ந்து நடக்கும் போது லேசாக அவள் உடல் அவன் மீது உரச சட்டென்று தீப்பட்டார் போல் விலகி நடந்தான். அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை ஸ்ருதி. தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டே சென்றாள்.

  அவர்களின் பின்னால் வந்து கொண்டிருந்த நிகிலுடைய அண்ணன்கள் ஆகாஷ் , நீரஜ் இருவரும் தம்பி செய்த செயலை கண்டு திட்டிக் கொண்டே வந்தார்கள். “என்னடா இவன், இப்படி இருந்தான்னா அந்த பொண்ணு வாழ்க்கையும் இல்ல கெடும்.எத்தனை நாளைக்குதான் நடந்ததையே நினைச்சு சந்தோஷங்களை இழக்கப் போறானோ தெரியல”என்றான் ஆகாஷ்.

  “நேத்து அவ்வளவு நேரம் உட்கார வச்சு பேசினேன் ஆகாஷ். ஆனா, இவன் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேன்றானே.பொண்ணு பார்க்க கூட வர முடியாதுன்னு தான் பிடிவாதம் பண்ணினானே”என்று புலம்பினான் நீரஜ்.

  கையில் குழந்தையுடன் நீரஜின் அருகில் வந்த மனைவி ஆர்த்தி “எல்லாம் சரியா போகும் விடுங்க. ஸ்ருதி சரியான வாலுன்னு கேள்விபட்டேன். தலைவர் தன்னால மாறிடுவார்”என்றாள் சிரித்துக் கொண்டே.

  அவளிடம் அண்ணன் மகனை வாங்கி கொண்டவன் “அப்படியா? பார்த்தா ரொம்ப அமைதியான பொண்ணா தெரியுதே!”

  “.காலேஜ்ல இவ பண்ணின அட்டகாசத்தை கதை கதையா சொல்வாங்க என் பிரெண்ட்”என்றாள் ஆர்த்தி.

  அவர்கள் இருவரும் பேசியதை கேட்டுக்கொண்டே வந்த ஆகாஷ் “அவ சின்ன பொண்ணுமா.இவன் இந்த மாதிரி உதாசீனப்படுத்தினா மனசு சுணங்கி போயிடாது”.

  “அப்படி எல்லாம் விட்டுட மாட்டோம். நாம எல்லாம் எதுக்கு இருக்கோம்”என்று சொல்லியபடியே அவர்களுடன் வந்து இணைந்து கொண்டாள் அகல்யா ஆகாஷின் மனைவி.


  அதானே ! சாதாரண கூட்டணியா? எமகாதக கூட்டமாச்சே! ஆளை கவுக்காம விடமாட்டீங்களே!”என்றான் நீரஜ்.

  அவர்கள் அரட்டை அடித்துக் கொண்டே வர,பேச வேண்டியவர்களோ ஆளுக்கொரு சிந்தனையில் பிரகாரத்தை சுற்றி வந்து பெரியவர்கள் இருக்குமிடத்திற்கு வந்து சேர்ந்தனர். பெண்ணும் மாப்பிள்ளையும் வந்ததும் அனைவரும் நிகிலின் வீட்டிற்கு செல்லத் தயாராகினர்.

  சாம்பசிவம் தன் பெரிய மகனை கூப்பிட்டு “ஆகாஷ் நீ ஒரு கார்ல அம்மாவையும், அகல்யாவையும் அழைச்சிட்டு வீட்டுக்கு முன்னாடி போயிடு. அவங்க போய் ஆரத்தி எடுக்க ரெடி பண்ணுவாங்க. நாங்க எல்லாம் வேன்ல வரோம்.நீரஜ் பொண்ணு மாப்பிள்ளையை அழைச்சுகிட்டு வரட்டும்”என்றார்.  அவர் சொன்னபடி அம்மாவையும், மனைவியையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான் ஆகாஷ் . ஆனால் அவன் மகன் அபிமன்யுவோ அவர்களோடு செல்லாமல் சித்தப்பாவுடன்தான் வருவேன் என்று சொல்ல,அவனை விட்டுவிட்டு கிளம்பி சென்றார்கள்.

  அவர்கள் சென்றதும் பெரியவர்கள் கூடி நின்று பேசிக் கொண்டிருக்க, நிகிலோ ஸ்ருதியின் பக்கத்தில் நில்லாமல் நீரஜிடம் சென்று பேசத் தொடங்கினான். அவன் அப்படி அவளை தனியே விட்டு சென்றதும், ஸ்ருதியின் அண்ணன் அருண் அவளருகில் வந்து அவளிடம் பேச்சுக் கொடுத்தான். "என்னடா?காலையில் இருந்து பலமான யோசனையோடவே இருக்கே?”

  அருனின் புறம் திரும்பியவள் உதட்டில் குறுஞ்சிரிப்புடன் அவனருகே வந்து மெல்லிய குரலில் “அண்ணா மாப்பிள்ளை சரியான கடுவன் பூனையா?”என்றாள்.

  அவளின் கேள்வியில் சற்று அதிர்ந்து சுற்றிலும் உள்ளவர்கள் காதில் அவள் கேட்டது விழுந்திருக்கப் போகிறது என்ற பயத்துடனே பார்த்தவன் “என்னடா இது! இப்படியா சொல்லுவே! யார் காதிலேயாவது விழுந்தா என்ன நினைப்பாங்க.இப்படி எல்லாம் பேசக் கூடாது.பொறுப்பா இருக்கனும்மா”.

  அவன் சொன்னதை கேட்டவள் “ஐயோ அண்ணா! இந்த ரெண்டு நாளா இந்த மாதிரி அட்வைஸ் கேட்டுகேட்டு காது ஜவ்வு கிழிஞ்சு போச்சு.நீங்களும் ஆரம்பிக்காதீங்க.”

  “சரிடா ஆனா, இந்த மாதிரி எங்ககிட்ட பேசுறது ஓகே. மத்தவங்க முன்னாடி பேசாதே. நிகில் வேற ரொம்ப எமோஷனல் டைப்பாத்தான் தெரியுறான்.”

  அருண் சொன்னதை கேட்டு மெலிதாக சிரித்தவள் “இதைத்தான் நான் கேபி( கடுவன் பூனை) சொன்னேன். நீங்க அதை கொஞ்சம் மரியாதையா சொல்றீங்க.”

  அவர்கள் இருவரும் பேசி சிரித்துக் கொண்டிருக்க, நீரஜிடம் பேசிக் கொண்டிருந்த நிகில் யதார்த்தமாக அவள் இருந்த பக்கம் திரும்ப, அவன் கண்களில் அவளின் சிரித்த முகம் பட ஒருநிமிடம் தன்னையும் மீறி அயர்ந்து நின்றான். சின்னஞ்சிறிய முகத்தில் கூர்வாள் போன்று விழிகளும், கூர்மையான நாசியும், செம்மாதுளை இதழ்களும் பார்ப்பவரை அப்படியே கட்டிப்போட வைக்கும் அழகுடன் நின்றிருந்தவளை கண்டு தன் விரக்தி, வெறுப்பு அனைத்தையும் மறந்து நின்றான். பேசிக்கொண்டிருந்தவன் திடீரென்று அமைதியானதை பார்த்து அவன் விழிகள் நிலைத்து நின்ற இடத்தை கண்டு தனக்குள் புன்னகைத்துக் கொண்டு, தம்பியின் வாழ்வு இனி மலர்ந்துவிடும் என்ற எண்ணத்துடன் அங்கிருந்து நகர்ந்தான் நீரஜ்.


  கதையின் தொடர்ச்சி கீழே....
   
  Last edited: Sep 19, 2016
   
 9. Sudha Ravi

  Sudha Ravi Bronze Wings Moderator New wings LW WRITER

  Messages:
  7,541
  Likes Received:
  5,864
  Trophy Points:
  113
  நேரமானதால் எல்லோரும் வீட்டிற்கு செல்லத் தயாராக, அங்கு நின்றிருந்த வேனில் ஏற ஆரம்பித்தனர். நீரஜ் தன்னுடைய ஹுண்டாய் அக்சென்ட்டை கொண்டு வந்து நிறுத்தி நிகில், ஸ்ருதி இருவரையும் ஏறுமாறு கூறினான். அப்போது தாத்தாவுடன் வேனில் ஏறிக்கொண்டிருந்த அபி சித்தப்பாவுடன் போக வேண்டும் என்று அவர் கையில் இருந்து துள்ளி குதித்து ஓடி வந்து நிகிலின் கால்களை கட்டிக்கொண்டான்.

  காரினில் ஏறி தங்கள் இருவருக்கும் நடுவில் அபியை அமர வைத்தான். ஆனால், அபியோ கையை காலை உதறி “நான் தித்தி அப்புதம் உக்கா”என்று அழ ஆரம்பித்தான்.

  அவனை தூக்கி மடியில் உட்கார வைத்து சமாதானப்படுத்த முயற்சித்தான். அவனிடமிருந்து முண்டியடித்து கொண்டு ஸ்ருதியின் மடியில் தாவி அவளின் மறுபுறம் சென்றமர்ந்து கொண்டான். இதில் ஸ்ருதியை அழைத்து “தித்தி! அபிக்கு பேஸ் வேணும் தள்ளி” என்று அவளை பிடித்து அவன் பக்கம் தள்ளினான்.

  அவளின் நெருக்கத்தில் அதுவரை இருந்த இலகு தன்மை மாறி மீண்டும் கடுகடு என்று முகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்து கொண்டான். இதை எல்லாம் கண்ணாடி வழியாக பார்த்த நீரஜ் சிரித்து வைக்க, அதை பார்த்து கடுப்புடன் “அவனை மாதிரியே புள்ளையை வளர்த்து வச்சு இருக்கான் . இப்போ நீ எதுக்கு சிரிக்கிற” என்று எரிந்து விழுந்தான்.

  அவனது கோபமோ பேச்சோ எதுவுமே அவளை பாதிக்காதது போல் தன்னருகில் அமர்ந்திருந்த குழந்தையுடன் பேச ஆரம்பித்தாள். அபியின் கைகளை தன் கைகளுக்குள் எடுத்து வைத்துக் கொண்டு “குட்டிப் பையா, உங்க பேர் என்ன?” என்று கேட்டாள்.

  “என் பேரு அபிமன்னு”.

  அவன் சொன்ன அழகை ரசித்து “ஹாஹா..நீங்க அபிமன்னு வா செல்லம்” என்று கேட்டு அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள் .

  அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தவன் “தித்தி பேரு என்ன?

  “ஸ்ருதி”

  “சுதி”


  அவன் சொன்ன விதத்தில் சிரிப்பு வர தலையை ஆட்டி மறுத்து “ சுதி இல்ல ஸ்ருதி..எங்கே சொல்லு பார்ப்போம்”.

  சிறிது யோசித்து “ம்ம்..சுத்தி”என்று சொல்லி அவள் முகம் பார்த்தான்.

  “சுத்தி இல்லடா குட்டி ஸ்ருதி சொல்லு.”

  இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த நீரஜ் “விடுமா அவன் நினைச்சதை தான் கூப்பிடுவான். உனக்கு பரவாயில்லை, என்னை நிஜ சித்தப்பாம்பான் , அப்பாவை தாம்பு தாத்தா, அம்மாவை காதி பாட்டின்னு கூப்பிடுவான். இதெல்லாம் கூட பரவாயில்லை நிக்கியை ...ந..”என்று ஆரம்பிக்கும் போதே “டேய்! இப்போ இது ரொம்ப முக்கியமா ஒழுங்கா ரோட்டை பார்த்து ஒட்டு”என்று ஆத்திரமாக மிரட்டினான் நிகில்.

  நீரஜ் சொல்ல வந்ததை புரிந்து கொண்ட ஸ்ருதி, வந்த சிரிப்பை அடக்க வழி அறியாது தலையைக் குனிந்து கொண்டு சிரித்துக் கொண்டாள்.


  அபி சிறிது நேரத்தில் ஸ்ருதியின் மேலே சாய்ந்தவாறு உறங்க ஆரம்பித்தான். அதைப் பார்த்தவள் மெல்ல அவன் உறக்கம் கலையாதவாறு தூக்கி தன் மடியில் போட்டுக் கொண்டாள். பின் அவன் தலையை கோதியவாறே அமர்ந்திருந்தாள். அவள் புறம் திரும்பவில்லை என்றாலும் ஓரக்கண்ணாலேயே அவளின் செய்கைகளை பார்த்தவனுக்கு தன்னை மீறி அவளிடம் மனம் போவதை தடுக்க முடியவில்லை.

  வீடு வந்ததும் அவன் இறங்கி வந்து அவள் மடியில் இருந்து குழந்தையை தூக்கி நீரஜிடம் கொடுத்தான். இருவரையும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்று ஸ்ருதியை விளக்கேற்ற சொன்னார் நிகிலின் அன்னை. சாமி கும்பிட்டு முடித்ததும் அவன் ஹாலில் சென்று அமர்ந்துவிட, ஸ்ருதியையும் அழைத்து வந்து நிகிலின் அருகே அமர்த்திவிட்டு எல்லோரும் அமர்ந்து ஓய்வாக கதை பேச ஆரம்பித்தனர்.

  வழக்கமான திருமணமாக இல்லாததால் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே குழுமி இருக்க, அனைவரும் ஒருவரோடு ஒருவர் அளவளாவ ஆரம்பித்தனர். அவளின் அருகே அமர்ந்திருந்ததால் ஒருவித அவஸ்தையுடனே இருந்தான் நிகில் . அவனைத் தவிர குடும்பத்தினர் எல்லோரும் அவளிடம் மிக இயல்பாக பழகினர்.

  மதிய உணவிற்கு பின் ஸ்ருதியை ஓய்வெடுக்க சொல்ல, அவளும் இருந்த களைப்பில் படுத்ததும் உறங்கி விட்டாள். நிகில் திருமணத்திற்கு சம்மதம் கொடுத்ததே பெரிய விஷயம். ஆதலால் வரவேற்பு கூட ஏற்பாடு செய்யாமல் இருந்தார்கள்.


  மாலை நேர அனைவரும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்க ,ஸ்ருதியை பற்றி தன் தோழியின் மூலம் அறிந்த ஆர்த்தி அவளிடம் “நீ நல்லா பாடுவேன்னு கேள்விபட்டேன். காலேஜ் விழாக்களில் எல்லாம் பாடி ப்ரைஸ் வாங்கி இருக்கேன்னு சொன்னாங்க. ஒரு பாட்டு பாடேன் ஸ்ருதி”என்றாள்.

  அவள் கேட்டதும் அதுவரை கலகலவென்று பேசிக் கொண்டிருந்தவர்கள் ஆர்வமாய் ஸ்ருதியின் முகத்தை பார்த்தனர். காயத்ரியும் “ பாடுமா , நாங்களும் உன் பாட்டை கேட்க ஆசையா இருக்கோம்”என்றார்.

  மரகதம் பாட்டி “அருமையா பாடுவா சம்மந்தி. எனக்கு மனசு சங்கடமா இருக்கும் போது அவளைப் பாட சொல்லி தான் கேட்பேன்”என்றார்.

  எல்லோரும் தன்னைப் பாட சொன்னதும் அவள் கண்கள் தன்னை அறியாமலே நிகிலைப் பார்த்தது. உரிமையுடன் அவளை கேட்க வேண்டியவனோ அவளை திரும்பியும் பாராது கையில் இருந்த செல்லில் தலையை கவிழ்த்திருந்தான். தனக்குள் எழுந்த ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு மெல்ல பாட ஆரம்பித்தாள்.  கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
  என் கண்களை பறித்துக் கொண்டு ஏன் இன்னும் பேசவில்லை
  ஆளான ஒரு சேதி அறியாமலே
  அலை பாயும் சிறுபேதை நானோ
  உன் பேரும் என் பேரும் தெரியாமலே
  உள்ளங்கள் இடம் மாறுமேனோ
  வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ


  செல்லின் மேல் கவனம் வைத்திருப்பது போல் அமர்ந்திருந்தாலும் பாடல் வரிகள் காதில் விழுந்ததுமே அவனது உடலில் ஒரு நடுக்கம் ஓடியது. அவளது குரல் அவனுடைய உணர்வுகளை அப்படியே கட்டிப்போட்டது. அவளோ யாரையும் நிமிர்ந்து பார்க்காமலே பாடி முடித்தாள்.

  சட்டென்று உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து வெளியே சென்று விட்டான்.எதிலிருந்தோ தப்பித்துக் கொள்ளும் வேகம் அவனிடம் தெரிந்தது. எல்லோரும் ஸ்ருதியை பாராட்டிக் கொண்டிருக்க, ஆகாஷ் தம்பியை தேடி சென்றான்.  கதையின் தொடர்ச்சி கீழே.....
   
  Last edited: Sep 19, 2016
   
 10. Sudha Ravi

  Sudha Ravi Bronze Wings Moderator New wings LW WRITER

  Messages:
  7,541
  Likes Received:
  5,864
  Trophy Points:
  113
  தோட்டத்தின் இருளில் வானத்தை வெறித்தபடி நின்றிருந்தவன் முதுகில் ஆதரவாக கை போட்டு தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்டான். “நிக்கி! பழசை எல்லாம் மறக்கணும். இப்போ உன்னை நம்பி ஒரு பொண்ணு வந்துட்டா. இன்னும் இப்படி இருந்தா நல்லதுக்கில்லை. நீ பழைய நிக்கியா மாறனும். நாங்க எல்லோரும் அதைத்தான் எதிர்பார்த்துகிட்டு இருக்கோம்.”

  அவன் சொன்னதை கேட்டு திரும்பி முகத்தை பார்த்தவன் “வாழ்க்கை மேல நம்பிக்கையே போச்சு ஆகாஷ். எதுவுமே நிலைக்காதுன்னு ஒரு பயம் இருந்துகிட்டே இருக்கு”.

  அவன் தோளில் லேசாகத் தட்டி “தேவையில்லாததை எல்லாம் நினைக்காதே. ஸ்ருதி அருமையான பொண்ணு. இனி, உன் வாழ்க்கை நல்லா இருக்கும். ஆனால், நீயும் நடந்து கொள்வதை பொறுத்துத்தான் இருக்கு.”

  சலிப்பான ஒரு பார்வையை ஆகாஷுக்கு கொடுத்து “வேண்டாம் ஆகாஷ்! நான் இனி எந்த ஆசையோ, பாசமோ வைக்கத் தயாரில்லை.”

  சற்று கோபத்துடன் அவனைப் பார்த்த ஆகாஷ் “ என்ன இது நிக்கி? நீ எழுந்து வந்ததே எனக்கு பிடிக்கல. இப்போ இப்படி பேசினா என்ன அர்த்தம். அந்த பொண்ணு பாடி முடிச்சதும் உன்னுடைய பாராட்டுக்காக எவ்வளவு ஆர்வமா பார்த்துச்சு தெரியுமா? எனக்கென்னவோ இந்த முறை நீயே உன்னுடைய வாழ்க்கையை தவறான பாதையில் கொண்டு போகப் போறேன்னு தோணுது. இது நல்லதுக்கில்லை சொல்லிட்டேன். இனி, எல்லாமே உன் கையில்தான் இருக்கு. அப்புறம் உன்னிஷ்டம்” என்று சப்தம் போட்டுவிட்டு அங்கிருந்து சென்றான்.  ஆகாஷின் முதுகையே வெறித்துக் கொண்டு நின்றவன், மெதுவாக அங்கிருந்த கல்லில் அமர்ந்து விட்டான். ‘ எப்படி இருந்த வாழ்க்கை? எத்தனை கனவு? எத்தனை ஆசைகள்? எல்லாமே ஒரு நாளில், ஒரே நிமிஷத்தில் மண்ணாய் போனதே. ஒன்றா, ரெண்டா,மூன்று வருடங்கள் யார் முகத்தையும் பார்க்காது சிறை வாழ்க்கை போல் வாழ்ந்த எனக்கல்லவா தெரியும் அந்த வலி. கத்தி இல்லாமல் ரத்தம் இல்லாமல் ஒருவனின் உணர்வுகளை கொல்ல முடியும் என்பதை உணர்ந்து கொண்ட நாளின் நினைவுகள் அவன் மனதை அறுக்க, முகம் மேலும் கசங்கி போனது. அன்று பட்ட வலியின் தாக்கம் இன்றும் எழ ,கண்மூடி அந்த வேதனையை முழுங்க முயன்றான்.

  நிகிலை இரவு உணவுக்கு அழைக்க வந்த நீரஜ் அவனது கசங்கிய முகத்தை பார்த்து யோசனையுடன் அவனருகில் சென்றான். “என்ன பண்ற நிக்கி? நீ எப்போ ராக்கெட் சயின்ஸ் படிச்சே? இப்படி வானத்தை உத்து உத்துப் பார்த்துகிட்டு இருக்கே?” என்றான்.

  தன் கூரிய விழிகளால் அவனை பார்த்தவன் “ரொம்ப கஷ்டப்படாதே நீரு. இப்போ எதுக்கு வந்தே சொல்லு?”  “சரி சரி, நேரமாச்சு வா. எல்லோரும் உனக்காக சாப்பிட காத்துகிட்டு இருக்காங்க.”

  இருவரும் தோட்டத்திலிருந்து உள்ளே செல்ல, அங்கே அதுவரை இருந்த கலகலப்பு மாறி ஒருவித அமைதி தவழ்ந்தது. ஒருவரோடு ஒருவர் பேசுவது கூட மெதுவாக அடுத்தவர் காதில் விழாத வண்ணம் பேசிக் கொண்டனர். முதலில் நடப்பது என்னவென்று புரியாமல் பார்த்தவனுக்கு, அடுத்து வருவது என்னவென்று தெரிந்ததும் முகத்தில் கடுமை கூடியது. முறைப்புடன் திரும்பி ஆகாஷையும் , நீரஜையும் பார்க்க, அவர்களிருவரும் அவசரமாக ஏதோ வேலை இருப்பது போல் அங்கிருந்து சென்றனர்.  உணவை முடித்துக் கொண்டு தன்னறைக்கு வந்தவனுக்கு அங்கு எப்பவும் போல் இருந்த அறை மன அமைதியை கொடுத்தது. ஆனாலும்,கீழே அண்ணிகளின் மெல்லிய சிரிப்பொலியும் , ஸ்ருதியை அவர்கள் கேலி செய்து கொண்டிருப்பது காதில் விழுந்ததும் அதுவரை அடங்கி இருந்த கோபத்திற்கு தூபம் போட்டது. மனதிலிருந்த புழுக்கத்தில் அறையை குறுக்கும் நெடுக்குமாக அளந்து கொண்டிருந்தான். அந்தநேரம் மாடிப்படியில் கொலுசொலியும், வளையோசையும் கேட்க , அவனது மனது காயங்களை விசிறிவிட ஆரம்பித்தது.

  கோர்ட் வளாகத்தில் கேட்ட மனிதர்களின் கலவையான குரல்களும், சுற்றுப்புறத்தில் எழுந்த ஓசையும் அவனது நினைவை மீட்டது.கண்கள் தன்னை அறியாமல் ஸ்ருதியைத் தேட, அங்கே அவனது குடும்ப உறுப்பினர்கள் அவளிடம் அன்புடன் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு இதழ்கள் புன்னகையைப் பூசிக் கொண்டது.

  “உலகத்துலேயே உன் குடும்பம்தாண்டா வித்தியாசமான குடும்பம். மருமகளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு, பெத்த புள்ளையைக் கூட கண்டுக்காம இருக்காங்க” என்றான் மதி.

  “தப்பு என் மேலதானே..அதுதான் அவளுக்கு சப்போர்ட் பண்றாங்க.”

  “அதுசரி! உன்னை நம்பி நான் கேசை ஒத்துக்கிட்டேன் பாரு! என்னை சொல்லணும்.”

  “விடுடா..விடுடா..உனக்கு எப்போவாவது தானே கேசே கிடைக்குது. அதனால தான் போனாபோகுதுன்னு கொடுத்தேன்.”

  அவன் பக்கம் திரும்பிய மதி “உன்னை இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்குடா. நடந்ததுலே இருந்து நீ வெளிவர போறதே இல்லைன்னு நினைச்சேன்டா. ஆமாம், எப்படி இந்த திடீர் மாற்றம்?”

  அவனது கேள்விக்கு விடையளிக்காமல், புன்னகையை மட்டும் தந்தவன் “அம்மாவுக்கு இப்போ எதுவும் தெரிய வேண்டாம் மதி. முதலில் நான் அவளை கரெக்ட் பண்ணனும்.”

  “ஹாஹா..டேய்..டேய்..அவங்க உன் வைப்டா. என்னவோ லவ் பண்ற பெண்ணை சொல்ற மாதிரி கரெக்ட் பண்ணனும்னு சொல்ற.”

  “ உண்மைதான் மதி. இனிதான், லவ் பண்ணப் போறேன். ஜட்ஜ்கிட்ட பேசிட்டே இல்ல. ஒன்னும் ப்ராப்லம் வராதில்லை.”

  “அவங்களுக்கு நீ மனசை மாத்திக்கிட்டது சந்தோஷம்தான். தினம்தினம் பல விவாகரத்து வழக்குகளை பார்க்கிறவங்களுக்கு ஒருத்தராவது மனம் மாறி சேர்ந்து வாழ்ந்தால் நல்லதுன்னு நினைக்கிறாங்க. அதுக்காக அவங்க தீர்ப்பை தள்ளி போடவும் தயாரா இருக்காங்க.”

  “தேங்க்ஸ்டா மச்சி! என்னோட முதல் குழந்தைக்கு உன் பேரை வைக்கிறேன்.”

  “அடபாவி! ஓகே..ஓகே..நான் அப்படியே கழண்டுக்கிறேன்.நீ போய் பொண்டாட்டிக்கு ரூட் போடும் வேலையை செவ்வனே தொடரு மகனே.”  தன்னை சுற்றி இருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாலும் ஸ்ருதியின் பார்வை அவனையே சுற்றி வந்து கொண்டிருந்தது. மதியிடம் அவன் பேசி சிரித்துக் கொண்டிருந்ததை பார்த்தவளுக்கு, தன்னுடன் இருந்த நாட்களில் ஒரு நாளாவது இப்படி சிரிச்சு இருப்பானா? எந்த நேரமும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரியே சுத்திட்டு இருப்பானே என்றெண்ணினாள்.  அவளுடைய நினைவுகள் தாங்கள் துபாயில் இருந்த நாட்களை நோக்கி ஓடியது.  கதைக்கான கருத்துக்களை கீழே உள்ள திரியில் பதியுங்கள்....

  http://ladyswings.com/community/threads/sudha-ravis-அலை-பாயும்-நெஞ்சங்கள்-comments.3924/
   
  Last edited: Sep 19, 2016
   
Thread Status:
Not open for further replies.

Share This Page