Sponsored

Vanmathy 's " Neeyindri Nanillai En Kadhal Poiyumillai" Story Thread

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by Flamingo, Feb 9, 2017.

  1. Flamingo

    Flamingo Roots of LW Staff Member Administrator New wings

    Messages:
    28
    Likes Received:
    47
    Trophy Points:
    38
    Admin Post
    Neeyindri Nanillai En Kadhal Poiyumillai

    Dear Friends,

    Welcome our friend Vanmathy, a budding writer to our forum with her new story," Neeyindri Nanillai En Kadhal Poiyumillai". As like the title, the story will also be a poetic love story. Kindly encourage her through your valuable comments and suggestions. Please provide the comments in the below link:

    Vanmathy's " Neeyindri Nanillai En Kadhal Poiyumillai" - Comments Thread
     
     
  2. Riyahari

    Riyahari Bronze Wings New wings LW WRITER

    Messages:
    13
    Likes Received:
    27
    Trophy Points:
    133
    ஹாய் ப்ரிண்ட்ஸ்,

    எல்லாரும் எப்படி இருக்கீங்க...??? நான் ரொம்ப நலமா இருக்கேன்...

    இப்போ எதுக்கு இங்கே வந்து இருக்கேன் அப்படின்னு நீங்க கேக்குறதுக்கு எனக்கு புரியுது... விசயம் இல்லாமல் வருவாளா??? இந்த வான்மதி...

    அந்த முக்கியமான விஷயம் என்னன்னா...
    என்னுடைய முதல் கதையை முடித்தவுடன்... உங்க எல்லாரின் மனநிம்மதிக்காகவும்... நீண்ட ஆயுளுக்காகவும்...
    சத்தியமா அடுத்த கதை எழுத கூடாதுன்னு...

    ஒரு முடிவோடு தான் இதுவரைக்கும் நான் இருந்தேன்...


    ஆனா... நீங்க ஒவ்வொருத்தரும்... எனக்கு அளித்த ஆதரவும்... ஊக்கமும்...
    என் மீதான... உங்களின் எதிர்பார்ப்பும்...

    என்னை கொஞ்சம் சிந்திக்க வைத்துவிட்டது...


    நான் எல்லாம் சிந்திச்சா... சத்தியமா... உலகம் உருபடாதுன்னு...
    உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும்...


    சோ... என்னுடைய பல நாள்... ஆழ்ந்த யோசனையின் பலனாக...
    ஒரு மிக பெரிய... வீபரீத முடிவை... இப்பொழுது
    எடுத்து இருக்கிறேன்...


    அது என்ன முடிவுன்னா...
    நான் மறுபடியும் உங்க எல்லாரையும் கதை எழுதுறேன்ற பேர்ல... உங்க எல்லாரையும் இம்சை பண்ண முடிவு பண்ணிட்டேன்...
    என்பதை நான் சந்தோஷமாகவும்...
    உங்க எல்லார் நிலைமையையும் நினைத்து... மிக வருத்ததுடனும்... ஒரே சமயத்தில்...
    இந்த நேரத்தில் உங்க எல்லாரிடமும் தெரிவித்து கொள்கிறேன்...


    என்னுடைய அடுத்த கதை பத்தி சொல்லணும்னா...

    இதுவும் ஒரு காதல் கதை தான்...
    ஆனா...
    அப்படின்னு பில்ட் அப் கொடுக்குற அளவுக்கு என்னுடைய கதைல பெரிசா ஒன்னும் இல்ல...


    ஏன்னா... இன்னும் கதையே...
    என்னனுன்னு என்னுடைய ஏழாவது அறிவுக்கு புலப்படலை...


    எல்லா எழுத்தாளர்களும் கதை என்னன்னு முடிவு பண்ணிட்டு... அதுக்கு அப்புறம் அதுக்கு ஒரு அழகான பேர் வைப்பாங்க...

    ஆனா... நான் தான் ஒரு டுபாக்கூர் எழுத்தாளர் ஆச்சே...
    அதை இப்பொழுதும் நிருபீக்கும் வகையில்...
    கதையின் தலைப்பை கண்டுபிடித்த நான்...


    அதற்க்கு தோதான கதையை இன்னும் முழுசா யோசிக்காமலே... ஒரு ஆர்வ கோளாறுல... உங்க மேலையும்... ஆண்டவன் மேலையும் பாரத்தை போட்டுட்டு... யோசிச்சத எழுத இங்கே வந்துட்டேன்...

    நோ... நோ... நோ... அங்க்ரி...

    இந்த நேரதுலத்தான்... நீங்க எல்லாரும் என்ன நம்பணும்...

    கண்டிப்பா... நான் என் மூளைய நல்லா யூஸ் பண்ணி... இந்த கதையையும் முடிச்சுடுவேன்னு நினைக்குறேன்... (முடிக்கணும் வேற வழி... நீங்க எல்லாரும் சும்மா இருப்பீங்களா...)

    சோ நான் தொடங்கி இருக்கிற இந்த மக்கள் சேவை... எந்த வித இடையூர்களும் இல்லாமல்... வெற்றிகரமாக என் புனித பயணம் தோடர...


    உங்கள் ஆசிர்வாதத்தையும்... ஆதரவையும்...
    கஞ்சத்தனம் பாராமல்...
    எனக்கு வாரி... வாரி... வழங்கும்படி மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்...


    ஆஆஆஆ... ஒன்னு சொல்ல மறந்துட்டேன்னே...
    என்னுடைய கதையே இல்லாத... இந்த கதையின் பெயர்... என்னவென்றால்...


    ""நீயின்றி நானில்லை... என் காதல் பொய்யுமில்லை...""

    பெயர் எப்படி இருக்கு என்பதையும் மறக்காமல் சொல்லவும்...

    இப்படிக்கு...
    கதையை எங்கே பிடிப்பது என்று... மூளையை இரவு பகலாக கசக்கி பிழிந்து கொண்டு இருக்கும்
    உங்கள்
    வான்மதி


    பின்குறிப்பு:
    என்னுடைய இரண்டாவது கதையை... உங்கள் மீது
    இருக்கும் நம்பிக்கையில்( ரொம்ப கழுவி ஊத்த மாட்டீர்கள்) என்னுடைய உண்மையான பெயரில் எழுதலாம்ன்னு...
    நான் முடிவு பண்ணி இருக்கேன்...
    சோ யாரோ... என்று என் கதையை
    அம்போன்னு விட்டுட்டு போய்டாதீங்க மக்களே...
     
    Last edited: Mar 8, 2017
     

Share This Page