_ap_ufes{"success":true,"siteUrl":"ladyswings.com","urls":{"Home":"http://ladyswings.com","Category":"","Archive":"http://ladyswings.com/2017/03/","Post":"http://ladyswings.com/novels-download/tamil-novel-and-book-writer-index/","Page":"http://ladyswings.com/contest-submission/","Attachment":"http://ladyswings.com/?attachment_id=5393","Nav_menu_item":"http://ladyswings.com/uncategorized/ad-test-2/","Wp_automatic":"http://ladyswings.com/wp_automatic/2394/"}}_ap_ufee
Breaking News
Home / Novels / Ennil Uraiyum Uyir Nee / yennil uraiyum uyir nee -26

yennil uraiyum uyir nee -26

உயிர் : 26

 

“மேடம்… இந்த பைல்களை காரிலேயே விட்டு விட்டு வந்துட்டீங்களே…” வெகுபவ்யமாய் தன்னிடம் நீட்டிய ராமனை கண்டு வனஜாவுக்கு சிரிப்பு பீறிட்டு கொண்டு வந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த கணவனுக்காக அதை முயன்று அடக்கி கொண்டு…

 

“சரி… அதை அங்கே வச்சிட்டு போங்க…” அமர்த்தலாய் பதில் சொன்னவள் அவனை கண்டு கொள்ளாமல் கண்ணனிடம் பேசி கொண்டிருந்தாள்.

 

அதை கண்டு ராமனுக்கு ஆத்திரமாக வந்தது. இங்கே அவளை எதுவும் செய்ய முடியாத காரணத்தினால் ஒன்றும் பேசாமல் விருட்டென்று வெளியில் சென்றான். அவன் வேகமாய் செல்வதில் இருந்து தன் மேல் கோபமாய் இருக்கிறான் என்பது அவளுக்கு புரிந்து போனது. அவனை சமாளிக்கும் வித்தை என்னவென்பது இந்த இரண்டு ஆண்டு பழக்கத்தில் அவளுக்கா தெரியாது? அவளின் இதழ் மந்தகாச புன்னகையில் விரிந்தது.

 

ஆம்… ராமனுடனான அவளது உறவு இந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக… யாருக்கும் தெரியாமல் அந்தரங்கமாய் நடந்தேறி கொண்டு தான் இருக்கிறது. அவள் ராமனை தன்னுடனேயே வைத்து கொள்வதற்காக கணவனிடம் சொல்லி தனக்கு உதவியாளர் மற்றும் காரோட்டியாக அவனை நியமித்து கொண்டாள். ராமனை பத்தி கண்ணனுக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால் சாந்திக்கு அவனை நன்கு தெரியும். அவனின் தகப்பனின் முயற்சியால் தான் கண்ணனுக்கும், வனஜாவுக்கும் திருமணம் நடந்தது என்பதால் அவரும் நன்றிக் கடனுக்காக மகனிடம் ராமனுக்காக சிபாரிசு செய்யவே… தாயின் சொல்லை கண்ணனால் தட்ட முடியாது போனது. ஆரனுக்கு இப்போது நான்கு வயது. தாயின் ஒதுக்கம் தெரிந்தோ என்னமோ அவன் அவள் பக்கம் எட்டி பார்ப்பது இல்லை… எந்நேரமும் தந்தையுடனே ஒட்டி கொண்டு அலைந்தான்.

 

“சரிங்க… நான் கிளம்பறேன்…” கண்ணனிடம் விடை பெற்றவள் காரை நோக்கி நடந்தாள். அவள் காரில் ஏறியமர்ந்ததும் ராமன் காரை கிளப்பிய வேகத்தில் அவனின் கோபத்தின் அளவு அவளுக்கு புரிந்தது. வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்றதும் ராமனின் தோளில் சாய்ந்தவள்,

 

“என் ராம்க்கு என் மேல் என்ன கோபம்?” கெஞ்சலாய் அவள் கேட்க… அவனோ பதில் பேசாமல் உம்மென்று வந்தான்.

 

“உங்களோட கோபத்தை நான் குறைத்து காட்டவா?” என்றவள் அவன் முகத்தின் அருகில் வர… அவனோ சட்டென்று காரை ஓரமாய் நிறுத்தியவன்… ஆத்திரத்துடன் அவளின் முடியை பற்றி இழுத்து,

 

“ஏண்டி… அவன் இருந்தா என்னை கண்டுக்க மாட்டியா? அப்போ உனக்கு நான் முக்கியமில்லை… அவன் தான் உனக்கு முக்கியம் இல்ல” அவன் கோபமாய் கர்ஜிக்க… அவன் தன் முடியை பிடித்து இழுத்தது கூட அவளுக்கு சுக வேதனையாய் இருந்தது போல… தன் கூந்தலை இறுக பிடித்திருந்த அவன் கை மேல் முத்தமிட்டவள்…

 

“என்ன செய்ய ராம்…? அவர் என் கழுத்தில் தாலி கட்டிய கணவராய் போயிட்டாரே… அவருக்காக இல்லையென்றாலும் ஊருக்காக நான் இப்படி நடிக்க வேண்டியது இருக்கு… அதுக்காக உங்க மேல் காதலில்லை என்றாகி விடுமா?” அவள் கண்களில் காதலை தேக்கி கொண்டு கேட்க…

 

“அப்படியென்றால் அவன் கட்டிய தாலியை தூக்கி தூர எறிந்து விடு. இனி நான் கட்டும் தாலி மட்டும் தான் உன் கழுத்தில் இருக்க வேணும். நாளைக்கே நமக்கு கல்யாணம் நடக்கணும்…”

 

“ராம்…” அதிர்ச்சியாய் அவள் அவனை பார்க்க…

 

“எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி…? உண்மையாய் பதில் சொல்… நீ என்னை காதலிகிறாயா? இல்லை அவனை காதலிக்கிறாயா?”

 

“உங்களை தான் ராம்…” அவனின் கேள்வியில் அவள் சிறிதும் யோசிக்கவில்லை சட்டென்று பதில் சொன்னாள். அதில் அவன் முகம் மலர்ந்தது.

 

“அப்புறம் எதுக்கு தயக்கம்? நாளைக்கே நாம கல்யாணம் பணிக்கலாம்”

 

“கொஞ்சம் பொறுமையாய் இருங்க… அதுக்கான சந்தர்ப்பம் கிடைக்கும் போது நானே உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறேன்…” அவள் அவனை சமாதனப்படுத்த…

 

“ம்… சரி சரி…” அவளுக்காய் அவன் சம்மதித்தாலும் அவளின் பதிலில் அவனுக்கு திருப்தி இல்லையென்பதை அவன் முகம் காட்டி கொடுத்தது.

 

“இதுக்கு போய் இவ்வளவு கோபமா?” என்றவள் அவனின் கோபத்தை குறைக்கும் வேலையில் இறங்க… அதில் அவன் கோபம் முற்றிலும் காணாமல் போனது.

 

ராமன் திருமணத்தை பற்றி பேசிய தினத்தில் இருந்து மூன்றாம் நாள் வனஜா அவனை தன் வீட்டிற்கு அழைத்தாள். கண்ணனும் வேலை விசயமாக வெளியூர் சென்றிருக்க… சாந்தி பக்கத்தூரில் இருக்கும் கோவிலுக்கு சென்றிருந்தார். வருவதற்கு எப்படியும் நாலைஞ்சு மணி நேரமாவது ஆகும்.

 

“ராம்… அந்த பைலை எடுத்துட்டு ஆபிஸ் ரூமுக்கு வாங்க…” என்றபடி அவள் முன்னால் நடக்க… அவனோ சிரித்தபடி அவளை பின் தொடர்ந்தான். வேலை செய்பவர்களுக்காக அவள் நடத்தும் இந்த நாடகத்தை அவனும் மனதுக்குள் ரசித்தான்.

 

“ராம்… இப்போது நீங்க என் கழுத்தில் தாலி கட்டலாம்…” மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்ட தங்கத் தாலியை அவள் அவன் கண் முன் ஆட்டினாள்.

 

“வனஜா… என் செல்லமே…” அவளை ஆசையோடு அணைத்து கொண்டான் அவன்.

 

“சீக்கிரம் ராம்… யாராவது வந்து விட போறாங்க…?” அவள் அவனை துரிதப்படுத்த… ராமன் சந்தோசமாய் அவள் கழுத்தருகே தாலியை கொண்டு வரும் போது தான் அவன் அதை கவனித்தான். கண்ணன் அவள் கழுத்தில் கட்டிய தாலி இன்னமும் அவள் கழுத்தில் இருந்தது.

 

“வனஜா இது உன் கழுத்தில் இருக்கும் போது நான் எப்படி உன் கழுத்தில் தாலி கட்டுவது?” அவன் குரல் கோபமாய் ஒலித்தது.

 

மற்ற விசயங்களை பார்த்து பார்த்து செய்தவள் இந்த விசயத்தில் கோட்டை விட்டிருந்தாள். “சாரி ராம்… நான் இதை யோசிக்கவே இல்லை. இந்த தாலியை கழட்டி விடவா…?” கொஞ்சம் கூட உறுத்தல் இல்லாமல் அவள் கேட்க… அப்போது தான் அவன் மனதில் அந்த விபரீத எண்ணம் எழுந்தது.

 

“அவன் கட்டிய தாலியை மஞ்சள் கயிற்றில் கோர்த்து கட்டி கொண்டு வா…” என்க… அவளோ அவனை புரியாமல் பார்க்க… “சொல்றதை முதலில் செய்…” அவன் கர்ஜிக்க… அவனை புரியாமல் பார்த்தவள் அறையை விட்டு வெளியேறினாள். அடுத்த ஐந்தாவது நிமிடம் அவள் அவன் சொன்னதை செய்தவளாய் அவன் கண் முன் வந்து நின்றாள்.

 

“இந்த தாலி தானே உன்னையும் என்னையும் பிரித்தது…” கோபமுடன் கூறியவன் அவள் கழுத்தில் கிடந்த அந்த மஞ்சள் கயிறை பிடித்து இழுத்து ஒரு நொடியில் அதை அறுத்து எறிந்து அருகில் இருந்த குப்பை தொட்டியில் சந்தோசமாய் போட்டான். எதேச்சையாய் தந்தையை தேடி அங்கு வந்த ஆரன் ராமனின் கோபமான வார்த்தையில் பயந்து போய் கதவின் பின் மறைந்து கொண்டான்.

 

“இப்போ நீ எனக்கு மட்டும் தான் மனைவி…” என்றபடி ராமன் அவள் கழுத்தில் தாலியை கட்ட… அவளோ மகிழ்ச்சியுடன் அதை தலை வணங்கி ஏற்று கொண்டாள்.

 

“இனி அவன் சுண்டு விரல் கூட உன் மேல் பட கூடாது. அப்படி பட்டா… அவனை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன்…” தாலி கட்டியதும் கணவன் என்ற உரிமையை அவன் காட்ட… அவளோ அவனது உரிமை பேச்சில் மனதை பறிகொடுத்தவளாய் அவன் சொல்லுக்கு சம்மதமாய் தலையாட்டினாள்.

 

இத்தனை நாள் அவளை நம்பி அவளுடன் வாழ்க்கை நடத்திய அந்த அப்பாவி மனிதனான கண்ணனை அந்த கணம் அவள் மறந்து தான் போனாள். அவனுக்கு துரோகம் செய்கிறோமே என்ற குற்றவுணர்வு சிறிதுமில்லை அவளிடம். அந்தளவுக்கு அவள் மனம் முழுவதும் ராமனே வியாபித்திருந்தான்.

 

இதையெல்லாம் மறைந்திருந்து பார்த்து கொண்டிருந்த ஆரன் ராமன் மேல் கோபம் கொண்டான். ராமன் செய்த காரியத்தின் வீரியத்தை உணரும் அளவுக்கு அவனுக்கு வயதில்லை என்றாலும்… அவன் தன் தாயை தொட்டு பேசி கொண்டிருப்பது அவனுக்கு கோபத்தை மூட்டியது. அது குழந்தைகளுக்கே உண்டான உரிமை உணர்வு அது. அவன் பார்த்ததை பெரியவர்கள் இருவரும் அறியவில்லை.

 

அன்றிரவு தன் தந்தை வந்ததும் ஆரன் அந்த நிகழ்வை அப்படியே போட்டு உடைத்து விட்டான். கண்ணன் எப்போதும் இரவு உணவு முடித்துவிட்டு ஆரனுடன் சிறிது நேரம் செலவழிப்பான். அந்த நேரத்தில் தான் அவன் மகனுக்கு கதைகள் சொல்வது, பள்ளியில் என்ன செய்தான்? அவனின் தேவைகள் என்ன? என்பது கேட்பது… என்று அவர்களுக்கு மட்டுமான நேரம் அது. இதில் வனஜா சிறிதும் தலையிடுவது இல்லை. கணவனோ, மகனோ எக்கேடோ கெட்டால் என்ன? என்ற மனரீதியில் தான் இப்போது எல்லாம் அவள் இருந்தாள்.

 

“ஆரா… இன்னைக்கு ஸ்கூலில் என்ன பண்ணின?” வழக்கம் போல் மகனை மடியில் இருத்தி கொண்டு கண்ணன் கேட்க… அவனோ உம்மென்று கையை கட்டி கொண்டு வேறு பக்கம் பார்த்து கொண்டிருந்தான்.

 

“என்னாச்சு என் குட்டி பையனுக்கு?” அவன் கன்னம் தொட்டு கொஞ்சி கேட்க…

 

“அப்பா… எனக்கு அந்த ராம் அங்கிளை பிடிக்கல” பட்டென்று அவன் சொன்னான். அவனின் பதிலில் கண்ணனின் புருவம் சுருங்கியது.

 

“ஏன் ஆரா…?” அவன் யோசனையுடன் மகனை பார்த்தான்.

 

“அவர் அம்மாவை தொட்டு தொட்டு பேசுறாரு… அது எனக்கு கொஞ்சமும் பிடிக்கல” அவன் சொன்னதை கேட்டு கண்ணனுக்கு குழப்பம் உண்டானது.

 

“அதை நான் பார்த்துக்கிறேன் ஆரா… சரி இன்னைக்கு நான் உனக்கு யானை கதை சொல்லவா?” அவனின் மனதை மாற்ற எண்ணி கண்ணன் பேச்சை மாற்ற… சிறுவன் அவனும் தந்தையின் பேச்சில் ராமனை மறந்தான்.

 

கதை சொல்லி மகனை தூங்க வைத்து விட்டு வந்த கண்ணன் தூங்கி கொண்டிருந்த மனைவியின் அருகில் படுத்து அவள் மேல் கை போட்டான். தூக்கத்தில் கனவில் ராமனுடன் சஞ்சரித்து கொண்ட வனஜாவோ அது களைந்த எரிச்சலில் கண்ணனின் கையை தள்ளிவிட்டாள்.

 

“ஏன் வனி…?” அவள் கழுத்தில் முகம் புதைத்து கொண்டு அவன் கேட்க… அவளுக்கோ கணவனின் தொடுகை நெருப்பு சுட்டார் போல் எரிந்தது.

 

“தலைவலிக்குது…” என்றவள் அவனை விட்டு விலகி படுக்க… அவனும் மனைவியை வற்புறத்த மனமில்லாமல் தள்ளி படுத்தான்.

 

அடுத்து வந்த நாட்களில் ராமனையும், வனஜாவையும் தொடர்ந்து கவனித்தான். மகன் சொன்னது போல் எந்தவிதமான பேச்சும் அவர்களிடையில் இல்லை. இருந்தாலும் மகன் எதற்கு பொய் சொல்ல போகிறான்? என்ற கேள்வியும் மனதை குடைந்தது. ஆனாலும் ஆதாரமில்லாமல் பேச கூடாது என்பதால் வாயை மூடி கொண்டான்.

 

ராமன், வனஜா சந்திப்புகள் அடுத்தடுத்து நடந்து கொண்டிருந்தது. அதற்கு எந்தவித தடையும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் அவள் கண்ணனை தன் அருகில் கூட விடவில்லை. அதிலேயே கண்ணனுக்கு அவள் மேல் பெருத்த சந்தேகம் வந்தது.

 

“உனக்கும் அந்த ராமனுக்கும் என்ன சம்பந்தம்டி…?” நேரிடையாய் அவளை பார்த்து கேட்க… அவனின் கேள்வியில் அவள் உள்ளுக்குள் அதிர்ந்தாலும் அதை வெளியில் காட்டி கொள்ளாமல்…

 

“நீங்க என்னை சந்தேகப்படுறீங்களா அத்தான்? இதோ நம் மகன் மீது சத்தியமா எனக்கும் அவருக்கும் எந்த உறவும் இல்லை. அவர் உறவு முறையில் முறைப் பையன்னாலும் எனக்கு அவர் உடன் பிறக்காத அண்ணன். அண்ணன், தம்பி கூடப்பிறக்காத எனக்கு அவர் ஒரு சகோதரன் போல. அப்படிப்பட்ட எங்க உறவை நீங்க கொச்சைப் படுத்திட்டீங்களே? இந்த உலகத்திலேயே உங்களை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா நீங்க எந்த புருசனும் பொஞ்சாதியை பார்த்து கேட்க கூடாத வார்த்தையை என்னை பார்த்து கேட்டுட்டீங்களே…!”

 

அவன் ஒற்றை வரியில் கேட்ட கேள்விக்கு பல வரியில் பதிலளித்து ஒப்பாரி வைத்தவள் அந்த நள்ளிரவு நேரத்திலும் தன் மாமியாரை கூப்பிட்டு பஞ்சாயத்து வைத்து விட்டாள். அவளின் கதறலில் சாந்தி மட்டுமல்ல கண்ணனுமே அரண்டு தான் போனான். வேறுவழியின்றி அவளை அவன் தான் சமாதானம் செய்ய வேண்டியிருந்தது. அந்த சமாதானம் எல்லாம் அவளிடம் எடுபடாமல் போய்விட்டது.

 

“நான் யாருமில்லாத அநாதை என்பதால் தானே நீங்க இப்படி பேசுறீங்க…? நான் இப்பவே என் பெரியப்பா, சித்தப்பா மக்களை கூப்பிடறேன்… அவங்க வந்து உங்களை என்னன்னு கேட்கட்டும்…” என்று கண்ணனை பார்த்து ஆங்காரமாய் கத்தியவள்… தான் சொன்னது போல் பிறந்து வீட்டு சொந்தங்களையும் கூப்பிட்டு பஞ்சாயத்து நடத்த… அதில் கண்ணன் தான் அசிங்கப்பட்டு போனான். அதன் பின் அவன் அவள் வழியில் எதற்கும் குறுக்கிடுவது இல்லை. இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த ஆரனின் மனதில் தாயின் ஆங்காரம் ஆழமாய் பதிந்து போனது.

 

“அப்போ இனி அவன் நம் பக்கம் தலை வச்சு படுக்க மாட்டான்னு சொல்லு…” வனஜா வாயிலாக வீட்டில் நடந்தவற்றை அறிந்த ராமன் வாய் விட்டு சிரித்தான்.

 

***********************************

 

“வனஜா… எனக்கு இப்பவே உன்னை பார்க்கணும் போலிருக்கு…” குரலில் காதலையும், தாபத்தையும் கலந்து கட்டி ராமன் தொலைப்பேசியில் பேச…

 

“ராம்… இன்னைக்கு காலையில் தானே சந்திச்சுக்கிட்டோம்… அதுக்குள் கூப்பிட்டா நான் எப்படி வருவது? கண்ணன், ஆரனை தாண்டி நான் வருவது என்பது ரொம்ப கஷ்டமாயிருக்கு ராம்… ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க…” அக்கம்பக்கம் பார்த்து கொண்டே பயத்துடன் அவள் பேசினாள். யாராவது பார்த்துவிட்டால் என்னவாவது?

 

“இப்போவெல்லாம் நீ என்னை ரொம்ப அவாய்ட் பண்ற…” அவனின் குரல் கோபமாய் ஒலித்தது.

 

“ஐயோ… அப்படியெல்லாம் நான் செய்வேனா?” அவனின் கோபம் கண்டு அவள் பதறினாள். “ஆரன் வளர்ந்துட்டான்… விவரம் தெரியும் வயசாச்சு… அவன் அப்பாவை ஏமாத்த முடிந்தளவுக்கு அவனை ஏமாத்த என்னால் முடியல ராம்…”

 

“அதெல்லாம் எனக்கு தெரியாது… நீ உடனே வர்ற…” ராமன் கோபத்துடன் தொலைப்பேசியை துண்டிக்க… அவள் அயர்வுடன் அதை தாங்கியில் வைத்தாள்.

 

“யாரும்மா ஃபோனில்…?” திடுமென்று ஒலித்த ஆரனின் குரலில் அவள் பயத்துடன் திரும்பி பார்த்தாள்.

 

நெடுநெடுவென்ற உயரத்துடன் ஒல்லியாய் இருந்தாலும் பார்ப்பதற்கு பதினேழு வயது என்று சொல்ல கூடிய அளவில் நன்கு வளர்ந்திருந்தான் பதினான்கு வயது ஆரன். ஆம்… காலம் கடகடவென பத்து வருடங்கள் ஓடியிருந்தது. சாந்தி இறைவனடி சென்று நான்கு ஆண்டுகளாகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் ராமனுக்கும், அவளுக்கும் இருந்த தொடர்பு ஆலமரம் போல் உறுதியாய் வளர்ந்திருந்தது. அதை யாருக்கும் தெரியாமல் மறைக்கும் சாமர்த்தியம் இருவருக்கும் இருந்ததால் ஊரில் கௌரவ பிரஜையாய் வலம் வந்து கொண்டிருந்தனர்.

 

“யாரோ ராங் ஃகால் ஆரா…?” அன்னையின் பேச்சில் சமாதானம் அடைந்தவன்…

 

“எனக்கு பசிக்குது சாப்பாடு போடுங்க…” என்றபடி உணவு மேஜையை நோக்கி நடக்க… வேறுவழியில்லாமல் அவனை பின் தொடர்ந்தாள் வனஜா. சாந்தி இறந்த பின் அவர் ஆரனுக்கு செய்து வந்த வேலைகள் சத்தமில்லாமல் வனஜாவின் தலை மேல் விழுந்தது. அதையும் அவள் கடனே என்று தான் செய்தாள். அதில் மகன் என்ற பாசம் துளி கூட இல்லை.

 

“போதுமாப்பா… அம்மாவுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு… நான் வரட்டுமா?” அவள் கேட்க… அவனும் மௌனமாய் தலையசைத்தான். அவன் சம்மதம் சொன்னதும் வேகமாய் வெளியில் வந்து காரை எடுத்தவள் ராமன் சொன்ன விடுதி நோக்கி பறந்தாள்.

 

“ராம்… என் மேல் கோபமா?” அவன் தங்கியிருந்த விடுதியறைக்கு வந்தவள் அங்கே முகத்தை தூக்கி வைத்து கொண்டிருந்த ராமனை கண்டதும்… அவனுக்காய் அவள் மனம் பாகாய் உருகியது.

 

“என் பேச்சுக்கு நீ மதிப்பே கொடுப்பது இல்லை வனஜா…”

 

“என்ன ராம் இப்படி சொல்றீங்க… நான் வாழ்வதே உங்களுக்காக தான்னு உங்களுக்கு தெரியாதா?” அவன் அருகில் வந்து அவனை ஆறுதலாய் அணைத்து கொள்ள… அதில் அவன் கொஞ்சம் முகம் தெளிந்தான்.

 

“இதற்கு எல்லாம் நான் ஒரு முடிவு கட்ட போறேன் வனஜா…” அவன் குரல் தீவிரத்துடன் ஒலித்தது.

 

“என்ன முடிவு?” அவள் யோசனையாய் கேட்க…

 

“ம்… உன் புருஷனை தீர்த்து கட்ட போறேன்…” அவன் சொன்னதை கேட்டு அவள் அதிராமல் வாய் விட்டு சிரிக்க… அவனோ கோபத்துடன் அவளை பார்த்தான்.

 

“நான் என்ன ஜோக்கா சொன்னேன்?”

 

“பின்னே நீங்க சொன்னது ஜோக் இல்லாமல் வேறு என்னவாம்? உங்களை நீங்களே கொல்ல போறேன்னு சொன்னால் எனக்கு சிரிப்பு வராதா?” அவளின் இந்த பேச்சு அவன் காதில் தேனாய் பாய்ந்தது. அவளுக்கு கணவன் என்றால் அது தான் மட்டும் தான் என்று அவன் உள்ளம் இறுமார்ந்து போனது.

 

“என் செல்லம்… என் கண்ணு…” என்றபடி அவளை முத்தத்தில் குளிப்பாட்டியவன்…

 

“இந்த ஜென்மத்தில் மட்டுமில்லாது எல்லா ஜென்மத்திலும் நான் தான் உன் கணவன்… அது தெரியாமல் நான் தான் ஏதேதோ உளறி விட்டேன்… என்னை மன்னித்து கொள்…”

 

“நமக்குள் மன்னிப்பு எல்லாம் எதுக்கு?” அவள் காதலாய் சொல்ல…

 

“சரி இப்போ நான் சீரியசாய் சொல்றேன்… அந்த கண்ணனை தீர்த்து கட்டினால் என்ன?” அவனின் கேள்வியில் இப்போது உண்மையில் அவள் அதிர்ந்து தான் போனாள்.

 

“என்ன சொல்றீங்க ராம்?” அவள் குரல் நடுக்கத்துடன் ஒலித்தது.

 

“அவன் ஒழிந்தான் என்றால் நாம் நிம்மதியாய் இருக்கலாம் இல்லையா?”

 

“அவர் தான் என் வழியில் குறுக்கே வருவதில்லையே… இப்போ இது எதுக்கு?”

 

“இல்லை வனஜா… இப்போ தான் நீ எனக்கு அதிகம் தேவைப்படற…” என்று சொன்னவனை அவள் முறைத்து பார்க்க… “நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. என் தாய், தந்தை இறந்த இந்த ஒரு வருடமாய் என்னை தனிமை துயர் ரொம்பவே தாக்குது. எத்தனை நாளைக்கு தான் நான் ஹோட்டலில் சாப்பிட்டு இப்படியே வெறுமையாய் வாழ்க்கையை ஓட்டுவது? எனக்கு காலம் முழுவதும் நீ பணிவிடை செய்ய… அதே போல் நான் உனக்கு காலம் முழுவதும் பணிவிட செய்யணும்ன்னு எனக்கும் ஆசையிருக்காதா சொல்?”

 

ராமனின் பெற்றோர் இருந்தவரை அவன் இந்த உறவை பற்றி அவர்களிடம் மூச்சு விடவில்லை. இந்த தகாத உறவை அவர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்பதால் அவன் கொஞ்சம் அடக்கி வாசித்தான். இப்போது அவர்கள் உயிரோடு இல்லாத காரணத்தால் அவனின் ஆசைகள் கட்டவிழ்ந்து பேயாட்டம் போட்டது.

 

“எனக்கும் அந்த ஆசை இருக்கு தான்…” அவனின் கூற்றை ஆமோதிப்பது போல் அவளும் பதில் கூறினாள்.

 

“அப்படியென்றால் நான் சொல்வதற்கு சரியென்று சொல்…” அவன் விடாப்பிடியாய் கேட்க… ராமனின் அருகாமைக்காக கணவனை கொல்வதற்கு அவள் சம்மதம் தெரிவித்தாள். அந்தளவுக்கு அவள் ராமன் மேல் உயிராய் இருந்தாள். இந்த மாதிரி விபரீத உறவிலும்… உயிர் காதல், நம்பிக்கை எல்லாம் இருந்தது தான் அதிசயம்.

 

“இன்னமும் உன் முகம் ஏன் தெளிவில்லாமல் இருக்கு? அவனை பத்தின கவலையா?” ராமனின் குரலில் குத்தல் நன்றாகவே ஒலித்தது.

 

“இல்லை… ஆரன் என்ன சொல்வானோ என்று பயமாயிருக்கு?”

 

“இதில் அவன் சொல்ல என்ன இருக்கு? அவனை ஹாஸ்டலில் தங்கி படிக்க வைக்க வேண்டியது தான்” அதற்கும் அவன் தீர்வு சொல்ல… அதில் அவள் கொஞ்சம் முகம் தெளிந்தாள்.

 

“இன்னமும் என்ன குழப்பம் வேண்டியிருக்கு?” அவளை அவன் ஆறுதலாய் அணைக்க… அவளும் அவன் நெஞ்சில் முகம் புதைத்து ஆறுதலை தேடினாள். அவன் என்ன தான் அவளை சமாதானம் செய்த போதிலும் ஆரனை நினைத்து அவனுக்குமே அச்சமாக தான் இருந்தது. தங்களது உறவுக்கு அவன் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிப்பான் என்று அவன் உறுதியாய் எண்ணினான்.

 

‘அப்பனை போடும் போது… மகனையும் சேர்த்து போட்டுவிட வேண்டியது தான்…எங்க காதலுக்கு எதிரியாய் யார் வந்தாலும் இதை தான் நான் செய்வேன்…’ மனதுக்குள் நினைத்தவன் அதை வனஜாவிடம் சொல்லவில்லை.

About lavender

Check Also

images-3

yennil uraiyum uyir nee -28

உயிர் : 28   “மயூ என்ன செய்தும்மா…?” அதிகாலையில் எழுந்தமர்ந்து  ஜன்னல் வழியே வெறித்து பார்த்து கொண்டிருந்த மயூரியின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *