_ap_ufes{"success":true,"siteUrl":"ladyswings.com","urls":{"Home":"http://ladyswings.com","Category":"","Archive":"http://ladyswings.com/2017/03/","Post":"http://ladyswings.com/novels-download/tamil-novel-and-book-writer-index/","Page":"http://ladyswings.com/contest-submission/","Attachment":"http://ladyswings.com/?attachment_id=5393","Nav_menu_item":"http://ladyswings.com/uncategorized/ad-test-2/","Wp_automatic":"http://ladyswings.com/wp_automatic/2394/"}}_ap_ufee
Breaking News
Home / Novels / Ennil Uraiyum Uyir Nee / yennil uraiyum uyir nee -30

yennil uraiyum uyir nee -30

உயிர் : 30

 

“ஹலோ ஆரா தம்பி… நான் உங்க பேமிலி லாயர் வேலாயுதம் பேசறேன்… என்னை நியாபகம் இருக்குங்களா?” வேலாயுதம் ஆரனின் குடும்ப வக்கீல்… அன்று அவனுக்காக நீதிமன்றத்தில் வாதாடியவரும் அவரே… அவனின் தண்டனையை குறைக்க அவர் எடுத்த பெரும் முயற்சிகளை அவன் நன்கு அறிவான். இப்போது அவர் எதற்காக தன்னை தொடர்பு கொள்கிறார்? என்பதை அவனால் அனுமானிக்க முடியவில்லை.

 

“உங்களை நியாபகம் இல்லாமல் போகுமா அங்கிள்? எப்படியிருக்கீங்க? நல்லாயிருக்கீங்களா?” அவனின் அடுத்தடுத்த கேள்விக்கு அவர் பதில் சொல்லாமல்,

 

“தம்பி… அம்மா இறந்துட்டாங்க…” அவர் சொல்வது உண்மை தானா? இல்லை தன் பிரம்மை ஏதுமா? ஐந்து நாட்களுக்கு முன் நல்ல திடகாத்திரமாய் பார்த்த தன் தாய் இறந்துவிட்டார் என்பதை அவனால் நம்ப முடியவில்லை.

 

“அங்கிள்… என்ன சொன்னீங்க?” உறுதிப்படுத்தி கொள்வதற்காக அவன் பதட்டத்துடன் கேட்க…

 

“அம்மா இறந்துட்டாங்க தம்பி…” அவர் மீண்டும் சொல்ல… அவனின் உடம்பில் ஒரு அதிர்வு அலை அவனையும் அறியாமல் ஓடியது. ஒரு நிமிடம் அலைப்பேசியை கையில் பிடித்தபடி அப்படியே உறைந்து போனான். தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்று சும்மாவா சொன்னார்கள்? என்ன தான் பெத்த தாய் மேல் வெறுப்பிருந்தாலும் அவரின் மரணம் அவனை உலுக்க தான் செய்தது.

 

“எப்படி அங்கிள்?” அவன் குரல் அவனுக்கே கேட்கவில்லை. அதை அவர் அவன் வருத்தப்படுவதாய் நினைத்து கொண்டார்.

 

“எனக்கும் ஒண்ணும் தெரியாது ஆரா… இன்னைக்கு காலையில் உங்க அம்மா கொடுக்க சொன்னதா கம்பெனி மேனஜர் ஒரு லெட்டர் கொண்டு வந்து கொடுத்தார். அதை படித்து பார்த்து தான் எனக்கே விசயம் தெரியும். அவரின் லெட்டரை படிக்கிறேன் கேள்…” என்றவர் வனஜாவின் கடிதத்தை படிக்க தொடங்கினார்.

 

கடிதத்தின் சாராம்சம் இது தான்… வாழ பிடிக்காததால் தான் கங்கையில் மூழ்கி உயிரை மாய்த்து கொள்ள போவதாகவும்… இனிமேல் தங்களது சொத்துக்களை மகன் ஆரன் வந்து நிர்வகிப்பான் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதம் வக்கீல் கையில் கிடைக்கும் நேரம் அவரது உயிர் உடலை விட்டு பிரிந்திருக்கும் என்பதையும் குறிப்பிட்டிருந்தார். அவர் படித்து முடித்ததும் இனம் புரியாத பாரம் ஒன்று தன் மனதை அழுத்துவதை உணர்ந்தான் ஆரன்.

 

“கடைசி வரை உன் அம்மாவை பார்க்க வராமல் இருந்து விட்டாயே ஆரா… அப்படி என்னப்பா உன் அம்மாவின் மேல் கோபம்? இப்போது பார்… மனம் வெறுத்து போய் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க… மகனாய் நீ செய்யும் எந்த காரியத்தையும் உன்னாலும் செய்ய முடியவில்லை…”

 

அதை கேட்டு அவன் மனதுக்குள் ஒரு நிம்மதி பரவ தான் செய்தது. ஒரு தாய்க்கு செய்ய கூடிய கடமையை, சடங்குகளை அவனால் நிச்சயம் செய்ய முடியாது. நல்லவேளை அந்த மாதிரியான ஒரு சங்கடமான நிலையை அவர் தன் மகனுக்கு வைத்து விட்டு போகவில்லை.

 

“என்ன ஆரா பதிலை காணோம்? நான் ஒரு மடையன் உனக்கும் இது வருத்தமாக தானே இருக்கும் அது தெரியாமல் ஏதேதோ பேசி கொண்டிருக்கிறேன்…”

 

“இல்லை நீங்கள் கேட்டதில் தப்பில்லை… ஜெயிலுக்கு போய்விட்டு வந்த என்னால் அவங்களோட கௌரவம் பாதிக்க வேணாமென்று தான் நான் தள்ளியிருந்தேன். வேறு எந்த காரணமும் இல்லை அங்கிள்” தாயை ‘அம்மா’ என்று அழைக்க முடியாமல் ‘அவங்க’ என்று குறிப்பிட்டவனால் அவரை அடுத்தவரிடம் விட்டு கொடுத்து பேச முடியவில்லை. சமுதாயத்தில் பெரிய அந்தஸ்தில் இருந்த அவர் இறந்த பின் தரம் தாழ்ந்து போவதை அவன் விரும்பவில்லை.

 

“சரி ஆரா… நீ எப்போது உன் பொறுப்புகளை கையிலெடுக்க போகிறாய்? உனக்காக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்” அவர் சொல்லவும் தான் அவனுக்கு அவன் அன்னை கொடுத்து சென்ற சிறு பெட்டி நியாபகம் வந்தது. அன்றே அதை மயூரியின் வசம் ஒப்புடைத்தவன் அதை மறந்தும் போனான்.

 

“இப்போது நான் கொல்கத்தாவில் இருக்கேன்… இன்னும் பத்துநாளில் நான் சென்னைக்கு வருவேன்… அதுவரை நீங்க பொறுத்து கொள்ள முடியுமா?” இன்னும் பத்துநாளில் அவன் மயூரியையும், குழந்தையையும் அழைத்து வருவதற்காக சென்னை புறப்படுவதாக இருந்தான்.

 

“ஒண்ணும் பிரச்சினையில்ல ஆரா… மெதுவாய் வா… ஆனால் வந்ததும் அம்மாவுக்கு செய்ய வேண்டிய சடங்குகள் செய்ய வேணும்… நல்லா வாழ்ந்த மனுசி…” அவரின் குரல் உண்மையான வருத்தத்துடன் ஒலித்தது.

 

“சரி அங்கிள்… நான் ஃபோனை வச்சிடுறேன்…” அதை பற்றி மேலும் பேச விரும்பாமல் அவன் அலைப்பேசியை அணைத்தான்.

 

அன்னையின் மரணம் அவனுக்குமே சற்று அதிர்ச்சி தான் என்பதால் அதற்கு மேல் அவனால் வேலை செய்ய முடியுமென்று தோன்றவில்லை. அரைநாள் விடுப்பு எடுத்து விட்டு வீட்டிற்கு வந்து படுக்கையில் விழுந்தவன் மனதில் அவனது சிறுவயது நியாபகங்கள் வலம் வர மனதுக்குள் தாங்க முடியாத வலியொன்று ஏற்பட… அவனையும் அறியாமல் அவனின் கைகள் அலைபேசியை எடுத்து மயூரியின் எண்ணை அழுத்தியது.

 

***********************************

 

“ஆரு… நான் ஒண்ணு சொன்னா கோபிக்க மாட்டீங்களே…?” சொன்ன மயூரியை புரியாமல் பார்த்தான் ஆரன். கொஞ்ச நேரம் முன்பு தான் சென்னை வந்து சேர்ந்திருந்தான். வந்தவுடனேயே வக்கீல் அவனை அழைத்த விசயத்தை அவளிடம் சொல்லிவிட்டான். அதை கேட்டு தான் மயூரி அவனிடம் அவ்வாறு கேட்டது.

 

“சொல்லு பேபி… உன்னிடம் நான் கோபப்படுவேனா…?” கையிலிருந்த மகனுக்கு விளையாட்டு காட்டி கொண்டே அவன் சொல்ல…

 

“நான் உங்களுடன் வரவா?” அவள் கேட்கவும் அவளை கூர்மையுடன் பார்த்தான்.

 

“என்னை தப்பா எடுத்துக்காதீங்க…” அவசரமாய் அவள் சொல்ல… கையிலிருந்த குழந்தையை படுக்கையில் படுக்க வைத்தவன் அவளருகில் நெருங்கி அமர்ந்தான்.

 

“நான் எதுக்கு பேபி உன்னை தப்பா எடுத்துக்க போறேன்… ம்… சொல்லு” கேட்டு கொண்டே அவளை தன் மீது சாய்த்து கொண்டான்.

 

“நான் வர்றேன் சொன்னது உங்க சொத்துக்களை பார்க்கிறதுக்கு இல்ல…” அவள் முடிக்கும் முன்னே…

 

“லூசு மாதிரி பேசாதே பேபி… உன்னை ஒரு போதும் நான் அப்படி நினைச்சது இல்லை” அவளை அவன் கடிந்து கொண்டான்.

 

“நான் வர்றேன் சொன்னது… உங்க அம்மாவுக்காக தான். நீங்க அவங்களுக்கு காரியம் செய்ய விருப்பமில்லைன்னு சொல்றீங்க… அது உங்க விருப்பம். உங்களுக்கும் அவங்களுக்கும் இடையில் என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது. அதை தெரிஞ்சிக்கவும் எனக்கு விருப்பம் இல்லை” அவள் சொல்லும் போதே அவன் உடல் விறைத்தது.

 

“ஆனா ஆரு… ஒரு பேரனா நம்ம மகன் அவங்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செஞ்சா என்ன? அவங்க என்ன தான் தப்பு செய்திருந்தாலும் இறந்த பின்னும் அவங்க மேல நாம கோபத்தை காட்டணுமா?” என்றவள் அவன் முகம் உணர்ச்சியில்லாமல் இருப்பதை கவனித்து அவனின் தாடையில் கை வைத்து தன் புறம் திருப்பியவள்,

 

“என் மனசுக்கு தோணியதை சொன்னேன்… ஆனால் இறுதி முடிவு உங்களோடது தான் ஆரு… உங்களுக்கு பிடிக்காததை நான் என்னைக்குமே செய்ய மாட்டேன்” தன் கண்களை நேர் பார்வையாய் பார்த்து கூறியவளை தன்னுடன் அணைத்து கொண்டான். அவள் தன் குடும்ப பின்னணியை பற்றி தெரிந்து கொள்ள அப்போதும் ஆர்வம் காட்டாததை அவன் மனம் குறித்து கொண்டது. அது அவனுக்கு பெருத்த ஆறுதலை தந்தது.

 

“என்னைக்கு தவறா சொல்லியிருக்கே… இன்னைக்கு தவறா சொல்வதற்கு? நீ சொல்றபடி செஞ்சிடலாம்…” அன்னையின் மரணத்தில் கொஞ்சம் நெகிழ்ந்திருந்த அவனின் மனம் அவளின் பேச்சில் முற்றிலும் நெகிழ்ந்து போனது.

 

அடுத்து வந்த காரியங்கள் மளமளவென நடைபெற்றது. தான் பிறந்த ஊருக்கு மனைவி, குழந்தையுடன் ஆரன் புறப்பட… ராகவனும், சுமதியும் குழந்தைக்காக என்று அவர்களுடன் இணைந்து கொண்டனர். அங்கு வந்து ஆரனின் குடும்ப செல்வாக்கை கண்டு ராகவன் பிரமித்து போனார். அவரின் காதில், ‘யாருமில்லாத அநாதை பயல்… ஒன்றுமில்லாத வெறும் பயல்…” அன்று ஆரனை கேவலமாய் தான் இகழ்ந்து பேசியது ஒலிக்க… மனம் குன்றி போனார்.

 

“என்னை மன்னித்துவிடுங்க மாப்பிள்ளை…” அவனின் கையை பிடித்து கொண்டு அவர் மன்னிப்பு வேண்ட…

 

“அதையெல்லாம் இன்னமும் நீங்க மறக்கலையா? நான் எப்பவோ அதை மறந்துட்டேன்…” என்றவன் அவரை அன்போடு அணைத்து கொண்டான்.

 

வெகுநாட்கள் இல்லை இல்லை வெகு ஆண்டுகள் கழித்து சொந்த வீட்டில் காலடி வைத்த ஆரனின் மனம் பலவித உணர்ச்சிகளில் சிக்கி தவித்தது. தந்தையின் கையை பிடித்து கொண்டு நடைப்பயின்ற நாட்கள், தோட்டத்தில் அவருடன் விளையாடிய நாட்கள் என எல்லாம் அவன் கண் முன் விரிந்தது. அதே போல் அவன் அன்னை செய்த துரோகமும் சேர்ந்து அவன் கண் முன் விரிய… அவன் முகம் பாறையாய் இறுகியது. அவனின் முக மாற்றம் கண்டு மயூரி அவன் கையை ஆறுதலாய் பிடித்து கொள்ள… சட்டென்று அவன் தன் உணர்விலிருந்து மீண்டு அவளை பார்த்து புன்னகைத்தான்.

 

மறுநாள் தன் மகனை வைத்து தாய்க்கு வேண்டிய காரியங்களை அவன் செய்த போதும்… அதை அவன் முன்னின்று நடத்தவில்லை. மயூரியை வைத்தே எல்லாவற்றையும் பொறுப்பாய் செய்து முடித்தான். ஏனோ அவனின் மனம் அந்த சடங்குகளில் லயிக்கவில்லை. அவன் அன்னை ஏற்படுத்திய ரணம் அவன் உயிர் இருக்கும் வரை ஆறாது… மறையாது… என்பதை அவன் மனம் உணர்ந்து தான் இருந்தது.

 

குடும்ப வக்கீலிடம் கலந்து ஆலோசித்தவன் பிடிவாதமாய் அவனின் சொத்துக்களை ஏற்று கொள்ள மறுத்துவிட்டான். அவனுக்கு தெரியும்… இதே ஊரில் அவன் வாழ்ந்தால் அவன் மூச்சு முட்டியே செத்து போவான் என்று… ஆனாலும் தந்தை கட்டி காத்த தொழிலை ஏற்க முடியாத நிலையில் இருக்கும் தன் நிலையை அறவே வெறுத்தான். இப்போது அவனுக்கு வேண்டியது தன் மனைவி, குழந்தையுடன் நிம்மதியான வாழ்வு… அது இங்கே இருந்தால் கிடைக்குமா? என்று அவனுக்கு தெரியவில்லை.

 

வக்கீலுக்குமே அவனின் முடிவு கேட்டு அதிர்ச்சி தான். அவனிடம் பேசி பேசி அவன் மனதை மாற்ற முன்றார். ஆனால் பலன் என்னவோ பூஜ்யமாய் போனது. அதன் பின் அவன் விருப்பம் என்று அவர் விட்டுவிட்டார். அவரிடம் பேசி அத்தனை சொத்துக்களையும் விற்க ஏற்பாடு செய்தான். அதன் மூலம் வரும் வருமானத்தை அப்படியே நல்லசிவம் நடத்தும் அமைப்புக்கு அளிக்க சொன்னான். அதை சட்டரீதியாக நிறைவேற்றும் அதிகாரத்தை வேலாயுதத்துக்கு அவன் எழுதி கொடுத்த போது தான் அவன் மனதில் பாரம் இறங்கிய உணர்வு தோன்றியது. ஆரன் தன் சொத்துகளை விற்று அதை சேவை செய்வதற்காக நல்லசிவத்திடம் கொடுத்ததை அறிந்த ராகவன் மனதில் ஆரன் பலபடி உயர்ந்து போனான்.

 

அவனின் முடிவை அறிந்த மயூரியோ மேற்கொண்டு அவனிடம் எதுவும் கேட்டு அவன் மனதை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அவன் எது செய்தாலும் அது சரியாக தான் இருக்கும் என்று அவள் உறுதியாய் நம்பினாள். அவன் மீதான அவளின் அந்த நம்பிக்கையே அவனை அவள் பால் மேலும் மேலும் ஈர்த்தது.

 

******************************************

 

“ஆரு… வேலைக்கு போகலியா?” வீட்டின் அழைப்புமணி ஓசை கேட்டு கதவை திறந்த மயூரி… அங்கே ஆரன் நின்றிருப்பதை கண்டு ஆச்சிரியப்பட்டாள். பின்னே தன் அன்னையை வழியனுப்பி வைப்பதற்காக சென்றவன் நேரே வேலைக்கு சென்று விடுவான் என்று அவள் எண்ணியிருக்க… அவன் என்னடா என்றால் வீட்டிற்கு வந்து நிற்கிறான்.

 

ஆரனும், மயூரியும் கொல்கத்தா வந்து பத்து தினங்கள் ஆகிவிட்டது. பேரன் கைக்குழந்தை என்பதால் மகளை கொண்டு விட வந்த சுமதி, அவளுடன் இந்த பத்து நாளும் கூட இருந்து வீட்டை ஒழுங்குப்படுத்தி எல்லா செளகரியங்களையும் செய்து கொடுத்தவர்… மைதிலியம்மா அருகில் இருக்கும் தைரியத்தில் மகளை விட்டு விட்டு இன்று தான் ஊருக்கு கிளம்பி சென்றார்.

 

“ஸ்ரீ தூங்கிட்டானா…?” அவள் கேட்டதற்கு பதில் சொல்லாமல் மகனை பற்றி அவன் விசாரித்தான். தன் தந்தையின் நினைவாய் மகனுக்கு கண்ணன் என்று பெயரிட்ட ஆரன்… அந்த பேர் சொல்லி அழைக்க முடியாத காரணத்தால் ‘ஸ்ரீ’ என்ற பெயரை கண்ணனுடன் சேர்த்து ‘ஸ்ரீகண்ணன்’ என்று மகனுக்கு பெயர் வைத்துவிட்டான்.

 

“இவ்வளவு நேரம் முழிச்சு இருந்திட்டு இப்போ தான் தூங்குறான்”

 

“அப்போ இன்னும் ரெண்டு மணி நேரத்திற்கு எந்திரிக்க மாட்டான்…” என்றவன் அறை கதவை ஒருக்களித்து சாய்த்து வைத்து விட்டு ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தவன்,

 

“பேபி… இங்கே வா…” அவளை அழைக்க…

 

“ஆரு… காலையில் இது என்ன?” அவள் சிணுங்கினாலும் அவன் அருகில் வந்து அமர தவறவில்லை. அவனோ அமைதியாய் அவளின் கையை பிடித்து கொண்டு எப்படி ஆரம்பிப்பது? என்று யோசித்து கொண்டிருந்தான்.

 

“என்ன ஆரு… ஏதாச்சும் பேசணுமா?” கணவனின் மனநிலையை சரியாக கணித்தவளாய் அவள் கேட்டாள்.

 

“நீ மட்டும் என் வாழ்கையில் வரவில்லை என்றால்… நான் என்னவாகி இருப்பேனோ பேபி?” கண்கள் கலங்க, குரல் தழுதழுக்க அவன் அவளை அணைத்து கொண்டான். தன் மனம் புரிந்து நடக்கும் மனைவியை நினைத்து அவன் மனம் உருகியது.

 

“நான் இல்லைன்னா என்ன… வேறொருத்தி வந்திருப்பா… சிம்பிள் மேட்டர் இது கூட தெரியலையா?” அவனின் பேச்சு அவளின் மனதுக்கு விருப்பமாய் இருந்தாலும் அவனின் மனநிலையை மாற்றும் பொருட்டு அவள் கேலியாய் பேச…

 

“எனக்கு வேறொருத்தி எல்லாம் வேணாம்… இந்த ஒருத்தியே போதும்…” அவளின் முன்னுச்சியில் இதழ் பதித்து அவன் சொன்ன போது அவள் இதயம் அவள் வசமில்லை… தாயை தேடும் கன்று குட்டியாய் அவனிடத்தில் தாவி ஓடியது.

 

“ஆரு…” அவள் சுகமாய் அவன் நெஞ்சில் புதைந்து கொண்டாள். அவனும் அவளின் அருகாமையை கண்மூடி ரசித்தான். பின்பு என்ன நினைத்தானோ,

 

“பேபி நான் உன் கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசணும்?” அதை சொல்லும் போதே அவன் குரல் நடுங்கியது. தன் குடும்பத்தை குறிப்பாக தன் தாயை பற்றி தான் சொன்னதும்… அதற்கு தன்னவளிடத்தில் என்ன மாதிரியான எதிரொலி இருக்கும்? என்று அவன் மனம் பரிதவிப்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.

 

அவனின் குரலில் தெரிந்த பேதத்தில் அவனிடமிருந்து விலகியவள், “என்ன விசயம் ஆரு…?” புருவம் சுருக்கி அவனை கேள்வியாய் பார்த்தாள்.

 

“என் குடும்பத்தை பத்தி… என்னை பத்தி… குறிப்பா சொல்லணும்ன்னா என் அம்மாவை பத்தி… நான் ஏன் ஜெயிலுக்கு போனேன்? என்பதை பத்தி…” அவன் பேசி கொண்டிருக்கும் போதே அவனின் வாயை தன் கை கொண்டு மூடியவள்… அவனின் முகத்தில் தெரிந்த வேதனையை கண்டு வேதனையடைந்தவளாய்,

 

“வேணாம் ஆரு… உங்களை வருத்தும் எந்த விசயமும் நீங்க சொல்ல வேணாம்… இது தெரிஞ்சு நான் என்ன செய்ய போறேன்… எனக்கு நீங்க மட்டும் போதும். நீங்க கஷ்டப்படுறது எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு…” தனது துன்பம் அவளையும் பாதிக்கிறது என்பதை உணர்ந்தவன் அவளின் கையை இறுக பற்றி கொண்டான். அதிலிருந்த அழுத்தத்தில் அவனின் காதலின் அளவு அவளுக்கு புரிந்தது.

 

“சொல்ல வேணாம்ன்னு சொல்றது உன்னோட பெருந்தன்மையா இருக்கலாம் பேபி… ஆனால் என்னை உயிராய் காதலிக்கும்… கள்ளமற்ற நேசத்தை என் மேல் காட்டும் உன் அன்புக்கு முன்னால் நம்மிடையே எந்த ஒளிவு மறைவும் இருக்க வேணாம் என்று நான் விரும்பறேன் பேபி…” என்றவன் தன் கடந்த காலத்தை சொல்ல துவங்கினான்.

 

அவன் சொல்ல சொல்ல… அவளுக்கு அவனின் தாய் மேல் கட்டுகடங்காமல் கோபம் வந்தது. அது தன்னவனுக்கு அவர் இழைத்த கொடுமையை கண்டு… அது அவன் மனதில் ஆறாத ரணமாய் இன்னமும் இருந்து அவனை வருத்துவது கண்டு வந்தது. ஆனால் ஒரு பெண்ணாய் வனஜாவின் உணர்வுகளை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அதற்காக அவர் தேர்ந்தெடுத்த முறையை அவள் சரியென்று நினைக்கவில்லை. கணவனுடன் மனம் விட்டு பேசி தீர்க்க வேண்டிய சிறு பிரச்சினையை இவ்வளவு பூதாகரமான விசயமாய் மாற்றிய அவரின் அறியாமையை கண்டு அவள் உள்ளம் அவருக்காய் வருந்தியது.

 

அதேசமயம் அவளுக்கு இன்னொன்றும் நியாபகத்தில் வந்தது. இவ்வளவு நாள் ஆரனின் முன்னுக்கு பின் நடவடிக்கைக்கான காரணத்தை இப்போது அவளால் உணர முடிந்தது. அவனின் அன்னை ஏற்படுத்திய காயத்தின் விளைவால் அவனால் எந்த பெண்ணையும் நம்ப முடியவில்லை என்பதையும் உணர்ந்தாள். ஆனாலும் அவன் தன் மேல் நம்பிக்கை வைத்து தன்னை காதலித்து, மணம் முடித்தது அவளுக்கு பெருத்த ஆச்சிரியத்தை அளித்தது. அதன் பின் அவளிடம் அவன் கடுமையாய் நடந்து கொண்ட சம்பவங்களை நினைத்து பார்த்தவளுக்கு எல்லாமே புரிந்து போனது.

 

அவன் அன்னையை நியாபகப்படுத்திய அன்று… ரிஷியிடம் அவள் பேசிய அன்று… என்று அந்த குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே அவனின் மனநிலை மோசமாக இருந்ததை அவள் புரிந்து கொண்டாள். தாய் மீது அவன் கொண்ட கோபம் பல ஆண்டுகளாய் அடக்கப்பட்டு அவனின் மனதில் புதைந்தது இருந்தது எல்லாம் பீறிட்டு வெளியில் வந்து அவளை குத்தி கிழித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டாள். ஆனாலும் அவன் மேல் அவளுக்கு கோபம் வரவில்லை. மாறாக அவன் மேல் பரிதாபமே வந்தது.

About lavender

Check Also

download-1

yennil uraiyum uyir nee -27

உயிர் : 27   “ஆரா… எக்சாம் எல்லாம் எப்படி பண்ணியிருக்க?” பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருக்கும் ஆரனிடம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *