_ap_ufes{"success":true,"siteUrl":"ladyswings.com","urls":{"Home":"http://ladyswings.com","Category":"","Archive":"http://ladyswings.com/2017/03/","Post":"http://ladyswings.com/novels-download/tamil-novel-and-book-writer-index/","Page":"http://ladyswings.com/contest-submission/","Attachment":"http://ladyswings.com/?attachment_id=5393","Nav_menu_item":"http://ladyswings.com/uncategorized/ad-test-2/","Wp_automatic":"http://ladyswings.com/wp_automatic/2394/"}}_ap_ufee
Breaking News
Home / Novels / Ithu Kathalendraal / Ithu Kaathalendraal -46

Ithu Kaathalendraal -46

PART  –  46.

பிரகாஷ் என்ன சொன்னான் அம்மா இவங்க கூடவே தங்கப் போறதாவா. இதை முடிவு செய்தது சுஷினா. என்னிடம் ஒரு வார்த்தை கேட்கவே இல்லை, செய்ய வேண்டாமா உனக்கு சம்மதமா என்று கேட்கக் கூட வேண்டாம்.

அட்லீஸ்ட் இப்படி ஒரு ஏற்பாடு செய்து இருக்கிறேன் என்று சொல்லக் கூடவா முடியவில்லை. அந்த அளவு வேண்டாதவள் ஆகிப் போனேனா நான். அம்மா அம்மா கூட ஒரு வார்த்தை சொல்லவில்லையே.

யாருமே என்னிடம் சொல்லவில்லையே, அதுசரி கட்டியவனும், பெற்ற அன்னையுமே சொல்லவில்லை பிறகுஅல்லவா மற்றவர்.

தன் வலியை தனக்குள் விழுங்கினாள். சுஷினின் காதல் மனைவியாக நடந்துகொள்ளவேண்டும் என்ற வார்த்தை காதில் ஒலிக்க,

முகத்தில் வலிந்து ஒரு புன்னகையை தவழ விட்டு , “அவர் சொன்னால் போதுமா என்னிடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டாமா ம்ம்ம்…….. ” கண்களை சிமிட்டி சிரித்தாள் மினி.

ஆனால் அவளது புன்னகை கண்களையோ, உள்ளத்தையோ எட்டவில்லை. அது அங்கிருந்த யாருக்கு புரிந்ததோ இல்லையோ, சுஷினுக்கும், மீனாட்சிக்கும் நன்றாகவே புரிந்தது.

அதுவும் மினியின் மனம் என்ன பாடுபடும் என்பதை சுஷின் நன்றாகவே அறிந்தான். மினியால் அங்கே இன்னும் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்று தோன்றியது.

வெடித்து அழவேண்டும் என்ற உணர்வை அடக்க பெரும்பாடு பட்டாள். அதைவிட முகம் மாறாமல் காப்பது இன்னும் பெருந் துன்பமாக இருந்தது.

இதயம் பாரமாக தொண்டைக் குழியில் ஏதோ அடைப்பதுபோல் ஒரு உணர்வு. வெளியில் புன்னகை மாறாமல் காத்துக் கொள்ளும் போராட்டம்.

எங்கே அனைவர் முன்பும் அழுது விடுவோமோ என்று தோன்ற அதை அடக்க விரல்களை அழுந்த மடக்கவும், அவளது நகம் உள்ளங் கையில் கீறி பதம் பார்த்தது.

அவளது நிலை உணர்ந்து அவளது கைகளோடு தன் கையை கோர்த்துக் கொண்டான். அவள் விலக்க முயலவில்லை மாறாக அவனது விரல் நொறுங்கும் அளவுக்கு அழுத்திப் பிடித்தாள் மினி.

தன் கைவிரல் நெரிபடுவதில் இருந்து அவளது போராட்டம் புரிய தானும் அவளது கையை இறுக்கினான்.

அந்தநேரம் அவனது கை அவளுக்கு தேவையாக இருந்தது. ஆனால் வெளியில் பிரகாஷுடன் வாயாடிக் கொண்டிருந்தாள்.

“ஹப்பா உன் கிட்டே நான் கேட்க்காததுதான் கோபமா “.

“ஆமா பின்ன இல்லையா அவங்க என் அம்மா “.

“யார் சொன்னது அவங்க என் அம்மா, என் அம்மாவை உடன் வைத்துக் கொள்ள தங்கையின் அனுமதி எனக்கு வேண்டுமா”.

“தங்கைன்னு சொல்லிட்டிங்க அதனால் உங்களை விடுறேன் பிழைத்துப் போங்க”.

“என் தங்கைக்கு எவ்வளவு பெரிய மனசு பார்த்தீங்களா எல்லோரும்”, கேலியாக சொல்லி சிரித்தான்.

நேரம் ஆகா ஆகா தன் கைவிரல் உடையும் அளவுக்கு செல்லவும் இதற்கும் மேல் தாங்காது என்பது தோன்ற அவர்களின் பேச்சின் நடுவில் புகுந்தான் சுஷின்.

“போதுமே அண்ணன் தங்கை போராட்டம். நேரம் ஆகிறது எல்லோரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம் . அம்மா , அப்பா வீட்டுக்கு வாரீங்களா”.

“இல்லை சுஷின் நீ போ நாங்கள் நைட் வாரோம்” , சுலோ.

“சரிம்மா நாங்க போயிட்டு வாரோம்”.

“நீங்க போங்க நான் வரவில்லை, நான் கொஞ்சநேரம் இங்கேயே இருக்கிறேன். நைட் அத்தை வரும்போது அவர்கள் கூட வருகிறேன்”.

“பேச்சுதானே விட்டா விடிய விடிய பேசுவ, இப்போ நீயே வாறியா இல்ல தூக்கிட்டு போகவா”.

மினி ,”ப்ளீஸ் நீங்க போறதா இருந்தா போங்க நான் அம்மா கூட இருந்துட்டு வாறேனே”.

மற்றவருக்கு கொஞ்சலாக தோன்றும் மறுப்பு அவனுடன் வரமுடியாது என்ற அவளது முடிவான மறுப்பு என்பது சுஷினிற்கு புரிந்தது.

“நீ இப்படி சொன்னால் கேட்க்க மாட்ட , உன்னை………….” , கைகளில் அள்ளிக் கொண்டான் மினியை.

அனைவர் முன்பும் இப்படி செய்வான் என்பதை எதிர் பார்க்காத மினி திமிறி இறங்க முயன்றும் அவனது இரும்புப் பிடிக்கு முன்னர் முடியாமல் போனது.

பிறகு சமாதானத்திற்கு வந்தாள், “சரி விடுங்க நானே வருகிறேன்”.

“ஒன்றும் வேண்டாம் பேசாமல் இரு” , அனைவரிடமும் சொல்லிவிட்டு அவளை காருக்கு தூக்கிவந்து உள்ளே ஏற்றினான்.

காரினுள் ஏறியதும் மினியின் முகம் அழுகையில் துடித்தது. மூக்கு நுனிகள் விடைக்க, நடுங்கும் உதடுகளை பற்களால் அழுந்த கடித்துக் கொண்டு தன் விம்மலை தொண்டையில் இருந்து வெளியில் வராமல் அடக்கினாள்.

காரை வேகமாக வீட்டிற்கு திருப்பினான். பதினைந்து நிமிடங்களில் வீட்டை அடைய கார் நிற்கும் முன்பே இறங்கி அறைக்குள் ஓடினாள் மினி.

அறையை மூடும் முன்பு சுஷின் அவளை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்து கதவை தாளிட்டான். இதுவரை அடக்கிவைத்திருந்த துக்கம் வெளியேற வெடித்து அழுதாள் மினி.

அவளது அழுகையை எதிர் பார்த்தான், ஆனால் அவளது பெருங்குரல் அவனை கலக்கமுறச் செய்தது.

அவளை தேற்றும் வழி அறியாமல் திகைத்து நின்றான். அவள் அழுவது தாளாமல் அருகில் சென்று தன்னுடன் அணைத்துக் கொண்டான்.

அவனிடம் இருந்து விலக போராடி முடியாமல் தோற்று அதற்கும் சேர்த்து அழுதாள் மினி. அவள் அழ அழ அவளை தன்னுடன் மேலும் மேலும் இறுக்கிக் கொண்டான்.

அவளது அழுகை குறையும் வரை காத்திருப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை அவனுக்கு. அவளது பெருங்குரல் சிறிது குறைந்து, விம்மலாக கேவலாக மாறும்வரை அவளை அணைத்து முதுகை வருடியபடி இருந்தான்.

அவளது அழுகை ஓரளவு கட்டுக்குள் வந்ததும் பேசத் துவங்கினான். ஆனால் அவனை முந்திக் கொண்டாள் மினி.

“சாரி என் அம்மாவுக்கு எவ்வளவு பெரிய நன்மையை செய்து இருக்கீங்க , நான் உங்களுக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை பாருங்கள்.

என் அம்மா தனியாக இருக்க வேண்டுமே என்று யோசித்து அவங்களுக்கு ஒரு வழி காட்டி இருக்கீங்க ரொம்ப நன்றி தேவ்.”.

அவளது பேச்சிலும் நன்றி சொல்லிலும் அடி பட்டவன் அவளது தேவ் என்ற அழைப்பில் ஆறுதல் அடைந்தான்.

அவள் தன்னை விரும்புகிறாள் என்பது இந்த அழைப்பில் புரிந்தது அவனுக்கு. அவளுடன் மனம் விட்டு பேச வேண்டும் ஆனால் அதற்கு இது நேரமல்ல என்பது புரிந்து பேசாமல் இருந்தான்.

ஆனாலும் தான் செய்தது தவறு என்று தோன்ற ,”என்னை மன்னித்துவிடு மினி , நான் சொல்லாதது பெரிய தப்புதான். ஏதோ நினைவில் மறந்துவிட்டேன்”.

“இந்த முடிவு நேற்றுதான் எடுத்தீர்களா”.

அவளது கேள்வியில் இருந்த உண்மை அவனை மௌனமாக்கியது. ஆனாலும் என்ன சொல்லி அவளுக்கு புரியவைக்க ,”சாரி மன்னித்துவிடு” , இதையே திரும்ப திரும்ப சொன்னான்.

அவனிடம் இருந்து விலகினாள் அவனது கண்களைப் பார்த்து சொன்னாள், “நீங்கள் அனைத்தையும் பகிர்ந்துகொள்ள நான் யார் , இந்த அறையில் இருக்கும் கட்டில் டேபிள் ளிடம் எல்லாம் சொல்லிவிட்டா செய்கிறீர்கள் அதைப் போல்தானே நானும் உங்களுக்கு”.

அவளது பேச்சில் அடிவாங்கினாலும் ” நீ சொல்லுவதுபோல் இல்லை மினி, நீ எனக்கு……………..”.

“தயவுசெய்து இதற்கும் மேல் எதுவும் பேச வேண்டாம் எனக்கு தூக்கம் வருகிறது”, சொல்லிவிட்டு கண்களை மூடி படுத்துக் கொண்டாள்.

சுஷினை பேச விட்டிருந்தால் அவர்களின் வாழ்வு இன்றே மலர்ந்திருக்குமோ………… .

மினியின் ஆதங்கத்தை புரிந்துகொள்ள முடிந்த அவனால் அவளின் பேச்சின் அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. முடிந்து இருந்தால் என்னை மனைவியாக நடத்தாமல் அறையில் இருக்கும் ஒரு பொருளாக நடத்துகிறாய் என்ற மினியின் குற்றச் சாட்டு புரிந்திருக்குமோ.

அவனுக்கு புரிந்திருந்தால் மினியை விட்டு விலகி சென்றிருக்க மாட்டானோ. சுஷின் மினி கட்டிலில் படுத்தும் தூங்க முடியாமல் போராடுவது புரிந்துதான் இருந்தது.

ஆனாலும் எதுவும் சொல்லாமல் அவள் அருகில் அமர்ந்து கொண்டான். அவளை மடிசாய்க்க எழுந்த ஆவலை அடக்கிக் கொண்டு இமைக்க மறந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

மினிக்கு அவன் அருகில் அமர்ந்திருப்பது புரிந்தும் கண்களை திறக்காமல் படுத்திருந்தாள். இன்னுமே அவளுக்கு மனம் ஆறவில்லை . தன்னை அவன் ஒதுக்கி விட்டதாகவே எண்ணினாள்.

தான் தன் ஆதங்கத்தை கொட்டிய பின்பும் அவன் மௌனம் காப்பது கொடுமையாக இருந்தது. தான்தான் அவனை பேசவிடவில்லை என்பது மறந்து போனது. சிந்தனையிலேயே தூங்கினாள் மினி.

__________________________________________________________________________________________

பிரகாஷின் வீட்டில் மீனாட்சியாலும் தூங்க முடியவில்லை. தான் பிரகாஷுடன் தங்கப் போவதை மினியிடம் சொல்லாததை எண்ணி வருந்தினார்.

இவ்வளவு பெரிய முடிவு எடுத்த சுஷின் கண்டிப்பாக மினியிடம் கேட்டுதான் முடிவு செய்திருப்பான் என்று தான் நினைத்தது எவ்வளவு பெரிய பிசகு.

என் மகள் அங்கே என்ன கஷ்டப் படுறாளோ தெரியலையே. தனியாக அழுது கரையப் போறா. அவளுக்கு ஆறுதல் சொல்லக் கூட யாரும் இல்லையே அங்கே.

திருமணத்துக்கு பிறகு என் மகள் மாறுவாள், அவளது விளையாட்டு குணம் போய் பொறுப்பு வரும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அவளது வருத்தத்தை கூட என்ன அழகாக மறைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே வாயாடினாளே.

துக்கத்திலும் ஒரு மகிழ்ச்சி என்றால் என் மகள் மனதளவில் கொஞ்சம் முதிர்ச்சி அடைந்து இருக்கிறாள் என்பதுதான்.

ஆனாலும் என்னிடம் கூட நடித்துவிட்டு போனாளே‘, மனம் ஆறவே இல்லை மீனாட்சிக்கு. எங்கே அறியிலேயே இருந்து யோசித்து திரும்பவும் அட்டாக் வந்துவிடுமோ என்று பயந்தே போனார் மீனாட்சி.

எனவே அறையில் இருந்து எழுந்து வெளியில் வந்து வீட்டை ஒதுக்க முடிவு செய்தார். அவர் வெளியில் வந்ததும் பார்வையில் பட்டது அங்கே இருந்த பெயண்டிங்க்ஸ் தான்.

முதலில் சாதாரணமாக பார்த்தவர் பின்பு அதில் லயித்துவிட்டார். அனைத்து படங்களிலும் ஏதோஒரு செய்தி ஒளிந்திருப்பதுபோல் அவருக்கு தோன்றியது.

இதை யார் இங்கே வாங்கி மாட்டியது என்பதை முதலில் அறியவேண்டும் என்று எண்ணினார். அவரது எண்ண ஓட்டத்தை தடை செய்தது ஷிஜியின் வருகை.

மீனாட்சி பெயிண்டிங்களையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவள் அவர் அருகில் வந்தாள். “அத்தை உங்களுக்கு இந்த படம் எல்லாம் பிடிச்சுருக்கா, எல்லாத்தையுமே உங்க பிள்ளைதான் பாத்து பாத்து வாங்கி மாட்டி இருக்கார்”.

“இதுல என்னதான் இருக்கோ, என்னையும் கூப்பிட்டு இந்த படத்தை எல்லாம் பார்க்கும் போது உனக்கு என்ன தோணுதுன்னு ஒரே கேள்விவேற.

படத்தை பாத்தா நல்லா இருக்குன்னு சொன்னேன் . அதை தவிர வேறு என்ன தோணுதுன்னு கேட்டார்”.

“அதுக்கு நீ என்னம்மா சொன்ன” , மீனாட்சி ஆவலாக கேட்டார்.

“எனக்கு ஒண்ணும் தோணலைன்னு சொல்லிட்டு போயிட்டேன். அவர் இங்கேயே நின்னு அசையாமல் பார்த்துட்டே இருந்தார். உங்களுக்கும் ஏதாவது தோணுதா என்ன” , சிரிப்பாக, கேலியாக வினவினாள்.

மீனாட்சியின் புருவம் யோசனையில் சுருங்கியது. இதைப் பார்த்ததும் ஷிஜிக்கு அதில் ஏதோ மர்மம் இருப்பது புரிந்தது.

ஆனால் அது என்னவென்றுதான் புரியவில்லை. மறுபடியும் பார்த்தாள். சின்னக் குழந்தைகள் பார்க்கில் விளையாடுவது.

பள்ளி செல்லும் பிள்ளைகள், மரத்தில் ஒளிந்து விளையாடுவது, தாய் சேயின் பின்னணியில் சூரிய உதயம் இப்படி பலவிதமான பெயிண்டிங்கள் இருந்தன.

ஆனாலும் வேறு எதுவும் தோன்றவில்லை அவளுக்கு. மீனாட்சிக்கும் அவளது முகபாவங்களில் இருந்தே அவளுக்கு எதுவும் புரியவில்லை என்பது புரிந்தது.

அவளுக்கு எப்படி புரியவைக்க என்பதுபோல் பார்த்தவர், “ஷிஜி இந்த படங்களில் எல்லாம் யார் இருக்காங்க “.

“யார் இருக்காங்கன்ன………… , அம்மா கூட குழந்தை, பார்க்கில் பசங்க விளையாடுறாங்க, மரம் மேலயும் பசங்க, பாட்டி தாத்தா கையை பிடிச்சு பசங்க நடக்குறது………… ” சொல்லிக் கொண்டே வந்தவளின் பேச்சு உள்ளே போனது.

“இப்போ புரிஞ்சதா ஷிஜி”.

“புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு. ஆனா புரிந்தது சரிதானா என்பதுதான் புரியவில்லை “.

” நான் புரியவைக்கவா” , ஆம் என்பதுபோல் தலையை ஆட்ட. “என்னை எப்போ பாட்டி ஆக்கப்போற ஷிஜி” , என்று கேட்டார்.

ஷிஜிக்கு அனைத்தும் புரிந்தது. திருமணம் ஆனா உடனேயே எதிர்கால திட்டம் பற்றி பிரகாஷ் கேட்டதும், அவள் B.Sc முடித்து MBA படிக்க வேண்டும் , நம் ஆபஸில் வேலைக்கு போகவேண்டும் என்று சொன்னதும்,

அதற்கு பிரகாஷ் நம் எதிர்காலம் பற்றி என்ன யோசித்து இருக்கிறாய் என்று கேட்டதற்கு, இவ்வளவு நேரம் அதைத்தானே சொல்லிக் கொண்டிருந்தேன் என்று சொல்லி சிரித்ததும்,

பிரகாஷ் மேற்கொண்டு எதுவும் பேசாமல் சிறிது நேரம் அமைதி காத்ததும். இப்பொழுது மனக் கண்முன் விரிந்தது.

அவளது குழப்பத்தைப் பார்த்து மீனாட்சி “என்ன ஷிஜி குழந்தையா என்று யோசிக்கின்றாயா, இதுவரை அதைப் பற்றி நீ யோசிக்கவே இல்லையா” .

இல்லை என்பதுபோல் தலையை ஆட்ட , “நீ பெத்துமட்டும் குடுடா நான் வளர்க்குறேன். உன் படிப்பும் கெடாது , யோசித்து நல்ல முடிவா எடுடா”.

சொல்லிவிட்டு சென்று விட்டார். ஷிஜிக்கும் யோசிக்கவேண்டி இருந்தது. அறைக்குச் சென்று கட்டிலில் விழுந்தாள்.

மீனாட்சியின் பேச்சை சுலோவும் கேட்டார். அவரது கண்களில் கண்ணீர் துளிர்த்தது. மீனாட்சி ஷிஜிக்கு இன்னொரு அம்மா என்பதை புரிந்து கொண்டார்.

மகள் கண்டிப்பாக குழப்பத்தில் இருப்பாள் என்பது புரிந்தது. அவளது அறைக்கு அவரும் விரைந்தார்.

ஷிஜியால் பிரகாஷின் ஆசையை புரிந்துகொள்ள முடிந்தது. ஆனாலும் தன் படிப்பு, அதை எப்படி பாதியில் நிறுத்த முடியும்.

அம்மாவிடம் நான் சொன்ன உறுதி என்ன ஆவது.படிப்பு மிகவும் முக்கியம் என்று அம்மா சொல்லி இருக்காங்களே. இப்போ நான் அம்மா ஆகணும் என்று சொன்னால்.

அம்மா என்ன நினைப்பார்கள். என் பிரகாஷின் ஆசையை எப்படி இவ்வளவு நாள் புரிந்து கொள்ளாமல் போனேன்.

About lavender

Check Also

images-1

Ithu Kaathalendraal -48

PART  –  48.   வீட்டிற்கு வந்த பின்பு சுஷினிர்க்கு இருப்பே கொள்ளவில்லை. மினி தன்னை விரும்புகிறாள் என்பது மீனாட்சியின் …

One comment

  1. update please……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *