_ap_ufes{"success":true,"siteUrl":"ladyswings.com","urls":{"Home":"http://ladyswings.com","Category":"","Archive":"http://ladyswings.com/2017/01/","Post":"http://ladyswings.com/novels-download/vasagargalin-top-list/","Page":"http://ladyswings.com/contest-submission/","Attachment":"http://ladyswings.com/?attachment_id=4276","Nav_menu_item":"http://ladyswings.com/uncategorized/ad-test-2/","Wp_automatic":"http://ladyswings.com/wp_automatic/2394/"}}_ap_ufee
Breaking News
Home / Novels / Ithu Kathalendraal / Ithu Kaathalendraal -48

Ithu Kaathalendraal -48

PART  –  48.

 

வீட்டிற்கு வந்த பின்பு சுஷினிர்க்கு இருப்பே கொள்ளவில்லை. மினி தன்னை விரும்புகிறாள் என்பது மீனாட்சியின் பேச்சில் இருந்து அவன் புரிந்துகொண்ட உண்மை.

ஆனாலும் அவனுக்கு மினி தன்னை விரும்புகிறாள் என்பதை அவள் வாயாலேயே கேட்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது.

எனவே அவளை நெருங்காமல் விலகியே இருந்து கவனித்தான். மினியின் காலேஜ் துவங்கி விட்டாலும் அவளது வாரக் கடைசி நாட்கள் அவனுக்கு துணை புரிந்தன.

அவனும் அலுவலகம் செல்லாமல் வாரக் கடைசி நாட்களை அவளுக்கு தெரியாமலே அவளுக்காக மாற்றி வைத்தான்.

மினிக்கு அவன் வீட்டில் இருப்பதே போதும் என்று எண்ணினாள். வார நாட்களில் அவள் கல்லூரிக்கும் அவன் அலுவலகம் செல்லவுமே சரியாக இருந்தது.

கல்லூரிக்கு செல்வதால் தன் கவலைகளை கொஞ்சம் மறந்து இருந்தாள் மினி. ஆனாலும் சாயங்காலம் வந்ததுமுதல் அவன் வீட்டிற்கு வரும்வரை அவன் நினைவாகவே இருக்கும்.

அவன் வந்துவிட்டாலோ அவன் முகத்தை பார்க்காவிட்டாலும் அந்த அறையில் அவனுடன், அவன் வாசனையை நுகர்ந்தபடி இருப்பதே அவளுக்கு பிடிக்கும்.

அன்று சனிக் கிழமை கல்லூரி விடுமுறை ஆகையால் தாமதமாக எழுந்தாள். அருகில் சுஷின் இருக்கிறானா என்று பார்த்தாள் இடம் வெறுமையாக இருந்தது.

கண்கள் எழுந்தவுடன் அவனைத் தேடியது. தினமும் அவன் முகத்தில் விழித்து பழகியதால் இன்று காணாமல் அலை பாய்ந்தது.

சுஷின் வீட்டிற்கு வந்த உடன் செய்த முதல் வேலை தரையில் படுக்கப் போன அவளை கட்டிலில் தன்னுடன் படுக்க சொன்னதுதான்.

தயங்கிய அவளை , “என்மேல் நம்பிக்கை இல்லையென்றால் படுக்கவேண்டாம்” என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

நேரம் கழித்து வந்து பார்த்தால் கட்டிலின் ஒரு ஓரத்தில் மினி முடங்கிப் படுத்திருப்பதைப் பார்த்தான். முதலில் மிகுந்த தயக்கமாக படுத்தவள் பின்பு, அவனுடன் சாப்பிடுவது பேசுவதுபோல் வழக்கமான ஒன்றாகிப் போனது அவளுக்கு.

மினி எதையோ தேடுவதுபோல் தோன்ற பாத்ரூம் கண்ணாடி வழியே பார்த்துக் கொண்டிருந்தான் சுஷின்.

அவளது பார்வை அறை முழுவதும் அலைந்து , பாத்ரூம் கண்ணாடியில் தெரிந்த சுஷினின் உருவத்தை பார்த்ததும் பார்வை நிலைத்தது.

சுஷினிர்க்கு தான் எவ்வாறு உணர்கிறோம் என்றே தெரியவில்லை. தானும் அவளைப் பார்த்தால் அவள் பார்வையை திருப்பிக் கொள்வாள் என்று தோன்ற, அவளது பார்வையை சந்திக்காமல் தவிர்க்க நிறையவே பாடுபட்டான்.

அவன் நிதானமாக ஷேவ் செய்து ஆப்டர் ஷேவ் லோஷன் போட்டுக் கொண்டான். அந்த வாசனை மினியை தீண்ட கண்களை மூடி அந்த வாசனையை நுகர்ந்தாள்.

என்றுமே சுஷினிடமிருந்து வரும் அந்த வாசனை அவளுக்கு பிடிக்கும். ஆனால் காலைவேளை பரபரப்பில் இருப்பதால் நிதானமாக அனுபவிக்க முடிவதில்லை.

இன்று வீட்டில் இருப்பதால் அந்த வாசனையை அனுபவித்து நுகர்ந்தாள். சுஷின் அவளது செய்கையின் காரணம் புரியாமல் முதலில் திகைத்தவன் பின்பு அவளது ஆழ்ந்த மூச்சில், மூளையில் ப்ளாஷ் அடித்தது அவனுக்கு.

அவள் கண்களை திறக்காமல் இருக்கவும் சுஷின் சத்தம் போடாமல் அவளை நெருங்கினான். வாசனை அதிகமாவது புரிந்ததும் கண்களைத் திறந்தாள்.

அவளது அருகில் வரும்வரை கிறக்கப் பார்வையில் வந்தவன் அவள் கண்களை திறந்ததும் தன் முகபாவத்தை மாற்றிக் கொண்டு, அவள் அருகில் நெருங்கி எதுவும் புரியாதவனைப் போல் அவளது நெற்றியில் கையை வைத்து,

“என்னடா உடம்பு சரி இல்லையா. வேண்டுமென்றால் இன்னும் கொஞ்சநேரம் படுத்துக்கோ”.

அவன் நெருங்கி வந்ததும் தன்னை கண்டு கொண்டானோ என்று பயந்தவள் அவனது கேள்வியில் தெளிந்தாள். அவனது நெருக்கமும் அவனுக்கே உரிய மணமும் அவளை என்னவோ செய்தது.

“அதெல்லாம் எதுவும் இல்லை. சும்மா………… எழுந்தது சோம்பேறியா…………. காலையில் லேட் ஆச்சு……….. . நான் குளிச்சுட்டு வாறேன்”.

தன் படபடப்பை மறைக்க முயன்று தோற்று, பாத்ரூமில் புகுந்துகொண்டாள். இன்னுமே அவனது கை நெற்றியில் இருப்பதுபோல் இருந்தது அவளுக்கு.

என்றைக்கும் விட அன்று அவன் தன்னை நெருங்கி நின்றதுபோல் இருந்தது அவளுக்கு. தன் மன பிரம்மையாக இருக்கும் என்று அதை ஒதுக்கினாள்.

என் தடுமாற்றத்தை கண்டு கொண்டிருப்பானோ. என்ன நினைத்திருப்பான். இல்லை புரிந்திருக்காது புரிந்திருந்தால் ஏளனமாக ஏதாவது சொல்லி இருப்பான்என்று எண்ணிக் கொண்டே குளித்துவிட்டு வந்தாள்.

சுஷின் மினியைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான். அவ என்னை காலையிலேயே தேடுறா, மெய் மறந்து என் வாசனையை அனுபவிக்கிறா, இது ஒருநாள் பழக்கம்போல் இல்லையே.

அப்படியென்றால் தினமும் இப்படித்தான் செய்கிறாளா. நான்தான் கவனிக்கவில்லையா. என் மினி என்னை தேடுறாளா நிஜமா, எழுந்த கொஞ்ச நேரத்தில் என்னால் இவ்வளவு உணர முடியிது என்றால்.

நான் மினியை புரிந்துகொள்ளாமலே நடந்து கொண்டிருக்கின்றேனா. தப்பு செய்து விட்டேனா தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.

மினி குளித்துவிட்டு வந்ததும் சுஷினும் குளிக்கச் சென்றான். மினி டிபன் எடுத்துவைக்க கீழே சென்றாள். அங்கே சுலோ அனைத்தையும் எடுத்து வைத்திருந்தார்.

சுந்தரம் சாப்பிட சுலோ பரிமாறிக் கொண்டிருந்தார். “சாரி அத்தை இன்னைக்கு லேட் ஆயிடுச்சு”.

“நானா செய்யிறேன் வேலைக் காரங்க செய்யிறாங்க நான் மேற்ப்பார்வை இடுறேன். இதில் நீ செய்ய எதுவும் இல்லை. போய் சுஷினை கூட்டிட்டு வந்து சேர்ந்து சாப்பிடுங்க “.

அவரது வார்த்தையை மறுக்க முடியாமல், அங்கேயே நின்றால் இன்னும் ஏதாவது கேள்விவரும் என்று பயந்து மாடி ஏறினாள்.

அங்கே சுஷின் அப்பொழுதுதான் குளித்துமுடித்து ஈரம் சொட்ட சொட்ட ஒரு துண்டை மட்டும் கட்டிக் கொண்டு கண்ணாடியின் முன்னாள் நின்றான்.

அவனது பரந்த முதுகையே வெறித்தபடி நின்றிருந்தாள். அவள் வந்ததை கவனித்தவன் அவளது பார்வையில் சுவாரசியம் தோன்ற அவளை பார்த்தபடி பேசாமல் நின்றான். மினியும் எதுவும் சொல்லாமல் அங்கிருந்த ஸோபாவில் அமர்ந்து கொண்டாள்.

அவன் மீதிருந்து பார்வையை விலக்கவும் முடியவில்லை, பார்க்கவும் முடியாமல் தலையை குனிந்துகொண்டாள். அவளது தயக்கம் புரிந்து அவளை சீண்டிப் பார்க்கும் எண்ணம் தோன்ற,

தலையை துவட்ட துவங்கியவன் “அம்மா” என்று அலறினான். அவனது அலறலில் நிமிர்ந்து பார்த்தவள் அவன் கையை உதறிக் கொண்டிருப்பதை பார்த்தாள்.

அதுமட்டும் அல்லாமல் வலியில் முகத்தை சுருக்கிக் கொண்டான். மினியால் அங்கே அமர்ந்திருக்க முடியவில்லை.

“தேவ் என்ன ஆச்சு ஏன் கத்துனீங்க, கை வலிக்கா என்ன”, பதட்டமாக வினவினாள். அவளது தவிப்பை மனதுக்குள் ரசித்துக் கொண்டே, ‘வலிக்காமல்தாண்டி கத்தினேன் இப்போ என்னங்குற‘ .

வெளியில் அவளிடம் “நேற்று கார் கதவில் இடித்துக் கொண்டேன். நேற்று வலி தெரியவில்லை ஆனால் இப்போ கையை தூக்க முடியாவில்லை வலி உயிர் போகுது”.

“நான் தைலம் தேய்ச்சு விடவா”. அவள் அப்பாவியாக வினவ, ‘ஏண்டி தலையை துடைச்சுவிடவான்னு கேப்பன்னு பாத்தா. இது வேலைக்கு ஆகாது நாமளே ஏதாவது செய்தால்தான் உண்டு‘ ,

“தைலம் பிறகு தடவலாம். முதலில் தலையை துடைக்கணும் எவ்வளவு நேரம்தான் ஈரத்தோடேயே இருப்பது”.

அவன் இப்படி சொன்னதும் மினிக்கு தயக்கமாக இருந்தது. அவளாக இதுவரை சுஷினை தொட்டது இல்லை. தயக்கமும் வேட்க்கமும் போட்டிபோட எதுவும் சொல்லாமல் நின்றாள்.

அவளது தயக்கம் புரிந்தவன் , “சரி விடு ஒருநாள் துவட்டவில்லையென்றால் ஒன்றும் ஆகாது. சளி மட்டும்தான் பிடிக்கும் , அது மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் சரிஆகிவிடும். மருந்து சாப்பிட வில்லையென்றால் ஏழு நாளில் சரியாகிப் போகும்.

நான் டிரஸ் மாற்றிவிட்டு வரேன். சொல்லிவிட்டு விலகப் போனவனை தடுத்தாள் மினி. அவனை நெருங்கி அவன்கையில் இருந்த துண்டை வாங்கி தலையை துவட்டிவிட்டாள். அவனது ஆறு அடி இரண்டு அங்குல உயரத்தை பிரமிப்புடன் பார்த்தாள்.

அவனது உயரத்திற்கு துடைக்க அவனை நெருங்கி உரசியபடிதான் துவட்ட முடிந்தது. முதலில் சாதாரணமாக துடைத்தாலும் , அவனது நெருக்கமும் , அவனது வாசனையும் அவளை தடுமாற வைத்தது.

“நீங்க ஸோபாவில் உக்காருங்க நான் துவட்டி விடுறேன்”. எதுவும் சொல்லாமல் அமர்ந்துகொண்டான். ஸோபாவில் அமர்ந்த பிறகு அவனது உயரம் குறைந்துவிட்டாலும் அவனை நெருங்கி துவட்டும் போது அவனது மூச்சுக் காற்று சூடாக அவளது மார்பகங்களை தீண்டியது.

சுஷினுக்கோ எங்கே அவள் மீது தன் கட்டுப்பாட்டையும் மீறி பாய்ந்து விடுவோமோ என்று எண்ணினான். கண்களை இறுக்க மூடி தன் உணர்வுகளை அடக்க போராடி கொண்டிருந்தான்.

மினி அவனிடமிருந்து வேகமாக விலகினாள். இதற்குமேல் முடியாது என்று தோன்ற, “துவட்டி முடித்து விட்டேன் எழுந்து சாப்பிட வாங்க அத்தை வரச் சொன்னாங்க”. அவனது கண்களை பார்க்காமல் பதிலுரைத்தாள்.

“என்ன துவட்டி முடிச்சுட்டியா, இங்கே பின்னாடி இன்னும் துடைக்கவே இல்லை . இப்படி பாதியிலே விடுவதற்கு நீ துவட்டாமலே இருந்திருக்கலாம். உனக்கு கஷ்ட்டமா இருந்தா போ நான் அம்மா கிட்ட துடைச்சுக்கிறேன்” , அவளை சோதனைக்கு உள்ளாக்கினான்.

க்ராதகா, உனக்கு என்னடா கல்லுமாதிரி உக்காந்து இருக்க , எனக்குதான் உன்னை நெருங்கினாலே என்வசம் நான் இருக்க மாட்டேங்கேனே. இதுல அம்மாகிட்ட துடைப்பானாம். எப்படி என் பொண்டாட்டி துடைச்சு விடலை நீங்க துடைங்கன்னா சொல்லுவ. க்ராதகா……… அரக்கா‘.

மனதுக்குள் அவனை வசை பாடியபடி அவன் சொன்னதை செய்தாள். அவளது இடையில் புரளத்துடித்த கைகளை அடக்கியபடி அவளது நெருக்கத்தை ஆழ்ந்து அனுபவித்தான் சுஷின்.

அன்று முழுவதுமே அவனுக்கு அவனது கையால் சாப்பிட முடியவில்லை. பைல் எடுக்க முடியவில்லை , காபி கப்பில் குடிக்க முடியவில்லை, சூ லேஸ் கட்டக் கூட முடியவில்லை.

மினிக்கு அவனது செய்கையில் சந்தேகம் எழுந்தாலும் அவனது தேவைகளை கவனிப்பதில் அலாதி இன்பம் கண்டாள்.

சந்தேகமாக ஏதோ கேட்கவந்த சுலோவை கண்ணை காட்டி எதுவும் சொல்லாதீர்கள் என்று சொல்லி அவரையும் அடக்கி விட்டான்.

சுலோவும் சிரித்துக் கொண்டே அவர்களுக்குள் நடக்கும் ஊடல் முடிவுக்கு வந்தால் சரிதான் என்பதுபோல் ஒதுங்கிக் கொண்டார்.

இரவு சாப்பாடிற்கு பின் அறையில் ஒரு பயிலில் மூழ்கி இருந்தான் சுஷின். அங்கு வந்த மினி அவனது கையைப் பிடித்தாள்.

சுஷின் செய்த அடாவடிகளில் மினியின் தயக்கம் வெகுவாக காணாமல் போய் இருந்தது. வலிக்காத கையில் அவளாகவே சென்று மருந்து போடும் அளவுக்கு முன்னேறி இருந்தாள் மினி.

அவள் தன் கையில் அயொடேக்ஸ் தடவுவதைப் பார்த்தவன் , “மினி எதற்கு இதைவந்து கையில் பூசுகிறாய்” என்று தெரியாமல் கேட்டு விட்டான். ஆனால் கட்டதற்க்குப் பின்புதான் தான் போடும் நாடகமே நினைவிற்கு வந்தது.

இப்பொழுது என்ன சொல்லி அவளை சம்மாளிக்க என்று எண்ணியவன் , “கைவலிக்கு அயோடெக்ஸ் தான் நாங்க போடுவோம் நீங்க வேற மருந்து வச்சு இருக்கீங்களா” , என அப்பாவிகாக கேட்டு அவனை குளிர வைத்தாள்.

“வேறு மருந்து இல்லை நீ இதையே போடு” , என்று சொல்லி கண்களை மூடி படுத்துக் கொண்டான்.

எதுவும் சொல்லாமல் அவன் கையில் மருந்தை தடவிவிட்டு மறுபுறம் சென்று படுத்துக் கொண்டாள். இன்றைய நாள் இனியநாளாக சென்றதுபோல் தோன்றியது அவளுக்கு.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதியாக இருப்பதுபோல் உணர்ந்தாள் மினி. பக்கத்தில் படுத்திருக்கும் சுஷினைப் பார்த்தாள் அவன் தூங்கிவிட்டது சீராக எழுந்து தாழ்ந்த அவன் மார்பில் தெரிந்தது.

இரவு விளக்கின் ஒளியில் சுஷினின் முகத்தை பார்த்தாள். சலனமில்லாத பிள்ளையின் முகம்போல் இருந்தது. AC காற்றில் அவனது தலைமுடி அசைவதை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனது கூந்தலை கலைத்து விளையாட ஆவல் எழுந்தது. என்றும் அவன் அறியாமல் பட்டும் படாமல் செய்யும் செயல் , இன்று அவனது நெருக்கத்தால் தயக்கம் நீங்கி ஒருவித எதிர்பாப்புடன் அவனது முன்னுச்சி முடியை கோதினாள்.

உறக்கத்தில் இருந்த சுஷின் இனிய கனவு காணும் உணர்வுடன் , “நிலா…….. ம் நிலா……..”, என்று சொல்லி மினியின் புறம் திரும்பிப் படுத்தான்.

மினிக்கு கண்களில் கண்ணீர் வழிந்தது. திருமணம் முடித்து ஆறு மாதங்களுக்குப் பின்னர் கேட்க்கும் அவனது நிலா என்ற அழைப்பு மினியை தன்னிலை இழக்க வைத்தது.

தன்னிடம் கோபம் கொண்டு பேசாமல் விலகியே இருந்தாலும் கனவில்கூட தன்னை தன் பெயரைச் சொல்லி அவன் புலம்புவதை கேட்டபின்பும் அவனைவிட்டு விலகி இருக்க முடியாது என்று தோன்ற அவனை நெருங்கிப் படுத்து அவனது முடியை கோதி “தேவ்…….” , என மெதுவாக அழைத்தாள்.

ஏதோ ஒரு வேகத்தில் அழைத்து விட்டவள் அவன் எழுந்து என்னவென்று கேட்டால் என்ன சொல்வது என்ற கேள்வி மனதில் எழவும் அவனைவிட்டு விலகிப் படுக்கப் போனாள்.

ஆனால் விலக முடியாமல் சுஷினின் கரம் அவளை தடுத்தது. அவன் தன்னை தடுத்ததும் அவனது கண்களை சந்தித்தவள் எதுவும் சொல்லாமல் அவனது மார்புக்கு அருகில் ஒன்றினாள்.

அவளது அடைக்கலம் புரிந்தும் எல்லை மீறாமல் அவளை தன்னுடன் புதைத்துக் கொள்பவன்போல் இறுக்கிக் கொண்டான்.

அவனது இதழ்கள் மினியின் உச்சியில் பதிந்து அங்கேயே நிலைத்தது. மினி உணர்ச்சி வேகத்தில் அவனது மார்பில் புரண்டாள். அவளது தேவையும் எதிர்பார்ப்பும் புரிந்தும் எதுவும் செய்யாமல் , “என்னடா தூக்கம் வரலையா, நான் இருக்கேன் எதுக்கும் கவலைப் படாமல் எதைப் பற்றியும் யோசிக்காமல் தூங்குடா. ஐ லவ் யு நிலா……….. ஐ லவ் யு “.

அவனது பேச்சில் ஏமாற்றம் அடைந்தாலும் அவன் காதல் சொன்ன நிம்மதியில் கண்களை மூடினாள் மினி. தான் அவனிடம் அடைக்கலம் ஆனா பின்பும் தன்னை எடுத்துக் கொள்ளாதது கவலையை அளித்தது மினிக்கு.

ஆனால் பதிலுக்கு அவளிடமிருந்து அந்த வார்த்தையை எதிர்பார்த்த சுஷின் ஏமாந்துபோனான். தன்னை அவள் இன்னும் முழு மனதுடன் ஏற்க்கவில்லையோ என்று எண்ணினான்.

About lavender

Check Also

images

Ithu Kaathalendraal -47

PRAT  –  47.   ஷிஜிக்கு யோசிக்க யோசிக்க தலையை வலிப்பதுபோல் இருந்தது. என்ன முடிவு எடுக்க இன்னும் காலேஜ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *