_ap_ufes{"success":true,"siteUrl":"ladyswings.com","urls":{"Home":"http://ladyswings.com","Category":"","Archive":"http://ladyswings.com/2017/03/","Post":"http://ladyswings.com/novels-download/tamil-novel-and-book-writer-index/","Page":"http://ladyswings.com/contest-submission/","Attachment":"http://ladyswings.com/?attachment_id=5393","Nav_menu_item":"http://ladyswings.com/uncategorized/ad-test-2/","Wp_automatic":"http://ladyswings.com/wp_automatic/2394/"}}_ap_ufee
Breaking News
Home / Novels / Ithu Kathalendraal / Ithu Kaathalendraal -49

Ithu Kaathalendraal -49

PART –  49.

 

அடுத்தநாள் ஞாயிற்றுக் கிழமை காலை எழுவதே சோம்பேறித் தனமாக இருக்கும் சுஷினுக்கு எப்பொழுதுமே. ஆனால் அன்று மிகவும் உற்சாகமாக இருந்தான் ஐந்து மணிக்கே எழுந்தும் விட்டான். ஆனால் படுக்கையை விட்டு எழாமல் தன் கையணைப்பில் உறங்கும் மினியை பார்த்த வண்ணம் இருந்தான்.

உறக்கம் சுத்தமாக கலைந்து போனது. நேற்று இரவில் அவள் தன்னை ஒண்டியது நினைவில் வந்து இம்சித்தது. நேற்று விலகியிருக்கக் கூடாதோ

அவள் கண்களில் எதிர்பார்ப்பு தெரிந்ததே, அது நிஜம்தானா. வாயைத் தொறந்து உன்னை எனக்கு பிடிச்சுருக்குடா மடையான்னு சொன்னால் குறைந்தா போய்விடுவாள்.

நாய்க்குட்டி மாதிரி உரசமட்டும் தெரியும். ஐ லவ் யு ன்னு சொல்லுறேன் ஏதாவது ரியாக்சன் செஞ்சாளா  நல்ல உரசிகிட்டே தூங்குது. என்னை சூடாக்கி விட்டுட்டு AC ல கதகதப்பா தூங்குறதைப் பாரு.

மினியின் முகத்தை பார்த்தவாறே புலம்பிக் கொண்டிருந்தான் மனதுக்குள். அவன் மனதின் குரல் அவளுக்கு எட்டியதோ என்னமோ விழிகளை திறந்து அவனைப் பார்த்தாள். பார்வையை விலக்கிக் கொள்ள முயலவில்லை இருவரும்.

ஆனால் மினியின் மனம் இப்பொழுது புலம்பியது. பார்வைக்குமட்டும் குறைச்சல் இல்லை. ஒருத்தி வெக்கத்தை  விட்டு ஒண்டினால், கொஞ்சம்கூட உணர்ச்சியே இல்லாமல் ஐ லவ் யுன்னு சொல்லிட்டு படுத்து தூங்க சொல்லுது ஜடம் ஜடம்

 

இப்போகூட மூச்சு விடமுடியாதமாதிரி இறுக்கி கட்டிக்க மட்டும் தெரியுது. பெரிய சூரிய பகவான்னு நினைப்பு பார்வையிலேயே கர்ப்பம் ஆக்கிடுவான்போல , தன் எண்ண ஓட்டத்தை இந்த இடத்தில் நிறுத்தினாள்.

இப்பொழுது அவனது முகத்தை பார்க்கவே முடியவில்லை அவளால். பார்வையை விலக்கிக் கொண்டு , “நான் போகவா” இருக்கவா‘. முதல் வார்த்தையை சத்தமாகவும் இரண்டாம் வார்த்தையை வாய் குள்ளும் முனகிக் கொண்டாள்.

சுஷினுக்கு அவளது பேச்சைக் கேட்டதும் கோபம் வந்தது. காலையில் எழுந்து எதையோ எதிர்பார்த்து ஏமாந்த உணர்வு எழுந்தது அவனுக்குள். எனவே சொன்னான் , “போயேன் உன்னை யார் பிடிச்சு வச்சு இருக்கா”.

வேண்டாம் என்று சொல்லுவான் என எதிர்பார்த்த மினிக்கு ஏமாற்றமாக இருந்தது. எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் அவன் கையணைப்பில் இருந்து விலகினாள்.

இருவருக்குமே விலகல் மிகத் துன்பமாக இருந்தது. அவனுடனே இருந்துவிடுவோமா என்று ஒருநிமிடம் எண்ணியவள் அவனுக்கே தேவையில்லாத போது நான்மட்டும் ஏன் போகவேண்டும் என்ற எண்ணம் தோன்ற விலகிசென்று பாத்ரூமில் புகுந்து கொண்டாள். ஏன் என்று புரியாமலேயே கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

சுஷினிற்கு என்ன செய்வது என்ன சொல்லுவது ஒன்றுமே புரியவில்லை. அவளை போஎன்று ஜம்பமாக சொல்லிவிட்டாலும் அவள் இன்னும் கொஞ்சநேரம் இருக்கட்டுமா என்று கேட்ப்பாள் என்று எண்ணினான். அதையே நீ சொல்லவேண்டியது தானே என்று கேள்விகேட்ட மனசாட்ச்சியை ஓங்கி மிதித்து அடக்கினான்.

காரணம் இல்லாமலேயே கோபம் பெருகியது அவனுக்கு. மினி குளித்துவிட்டு வெளியில் வந்தாள் அவளது கண்கள் அழுததற்கு அடையாளமாக சிவந்து இருந்தது.

சுஷினும் அதை கவனித்தான். என்னை இம்சை படுத்திட்டு இவளுக்கு என்ன அழுகை வேண்டி இருக்கு. இருவரும் ஒருவர் மீது ஒருவர் கோபமாகவும், வருத்தமாகவும் இருந்தனர்.

மினி குளித்துவிட்டு கீழே இறங்கி வரும் பொழுதே ஷிஜியின் குரல் கேட்டது. ஷிஜி வந்திருக்கிறாள் என்றால் அம்மாவும் வந்திருப்பார்களே என்ற உற்சாகம் தோன்ற வேகமாக இறங்கி வந்தாள்.

ஷிஜி மினியை எழுந்துவந்து கட்டிக் கொண்டாள். “என்ன மினி சீக்கிரம் எழுந்து வந்துட்ட, அம்மா இன்னும் லேட் ஆகும்னு சொன்னாங்க”.

மீனாட்சியின் கண்டன விழிகளை சந்தித்துக் கொண்டே , “அதெல்லாம் ஒன்றும் இல்லை ஷிஜி ஞாயிற்றுக் கிழமை மட்டும் கொஞ்சம் லேட் ஆகும் மற்ற நாட்களில் சீக்கிரமே எழுந்து விடுவேன்”.

“பின்ன அன்னைக்கும் இழுத்து போர்த்தி தூங்கினால் காலேஜ் க்கு போக முடியாதே”, மீனாட்சி.

“இங்க என்ன மினியை பேட்டி எடுக்கவா வந்திருக்கிறோம். அவளையே எல்லோரும் குறை சொல்லுரீங்க”, பிரகாஷ்.

“அப்படி சொல்லுங்க அண்ணா , நீங்களாவது எனக்கு சப்போட் பண்ணுறிங்களே. வாங்க அண்ணா எப்படி இருக்கீங்க”.

“அம்மா நாமளுந்தான் வந்திருக்கிறோம், அண்ணனுக்கு மட்டும் வரவேற்பு . இதை என்னன்னு கேளுங்க நீங்க” , ஷிஜி மீனாட்சியை தூண்டினாள்.

“வந்தவுடனே மினிகிட்ட பேட்டி எடுத்தால்………. இந்த வரவேற்புதான் கிடைக்கும்” , சந்தடியில் ஷிஜியின் காலை வாரினான் பிரகாஷ்.

அதற்கு அவனிடம் , “தங்கச்சிக்கு இப்படி சப்போட் பண்ணித்தான் வரவேற்பு வேணும்னா எங்களுக்கு வேண்டாம்”. முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவளது பொய்கோபம்கூட தாங்காமல் எழுந்து அவளிடம்வந்து அமர்ந்து , “மினி என்ன இருந்தாலும் என் ஷிஜியை வரவேற்க்காதது ரொம்ப தப்பு , அவளையும் ஒருவார்த்தை வாஎன்று சொல்லு” , கண்ணை சிமிட்டி ஜாடை செய்தவாறு மினியிடம் கூறினான் அவன்.

மினிக்கு அவர்களின் செல்ல நாடகம் பிடித்திருந்தது. அவள் பேசத் துவங்கும் முன்னர் , “என் தங்கையை நான் வரவேற்கிறேன் இதில் என்ன இருக்கு, மினி நானும் வரட்டும் என்று எதிர்பார்த்து இருந்திருப்பாள் அப்படித்தானே மினி”.

சொல்லியவாறே மினி அமர்ந்து இருந்த ஸோபாவில் அவளை நெருங்கி அமர்ந்துகொண்டான். மினி இதை எதிர் பார்க்கவில்லை. நெருங்கி அமர்ந்தது மட்டுமல்லாமல் அவள் தோளிலும் கையை போட்டுக் கொண்டான்.

 

மினிக்கு கோபம் ஏறியது. பெட்ரூமில் விஷ்வாமித்திரன் மாதிரி இருக்க வேண்டியது வெளியில் வந்து உரச வேண்டியது. யாருக்காக மற்றவர்களுக்காகவா இது எனக்கு வேண்டாம்.

முடிவு செய்த வேகத்தில் அவனிடமிருந்து எழுந்தாள். “அம்மா நான் எல்லோருக்கும் டிபன் எடுத்து வைக்கிறேன் . நீங்க பேசிட்டு இருங்க”. சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

பெட்ரூமில்தான் நெருங்க முடியவில்லை. இங்கே அனைவர் முன்பும் அவளை நெருங்கினால் மற்றவர்களுக்காகவாவது பேசாமல் இருப்பாள் என்று எண்ணினால் இதற்கும் முடியாமல் போயிற்றே.

அவனுக்கும் கோபம் வந்தது. அவளை ஒருவழி செய்யவேண்டும் என்ற ஆத்திரம் வந்தது. ஆனாலும் அவளை சீண்டாமல் விடுவதில்லை என்ற முடிவில் அவன் இருந்தான்.

சாப்பாட்டு அறையிலும் அது தொடர்ந்தது. யாரும் பார்க்காத போது மினியின் கையில் இருந்து சாப்பாட்டை பிடிங்கித் தின்றது, மினியின் ப்ளேட்டில் இட்லிகளை அடுக்கியது இப்படி அவளை சீண்டிக் கொண்டே இருந்தான்.

கை கழுவும் இடத்திலும் கையை கழுவிவிட்டு அவளது துப்பட்டாவில் துடைத்தான். அவள் சீறியதற்கு முடிந்தால் உன் துப்பட்டாவை என்னிடமிருந்து வாங்கிக்கொள் என்று சொல்லிவிட்டு அறைக்குச் சென்று விட்டான்.

அது ரெடிமேட் சுடிதார் எனவே அதன் கழுத்து இறங்கி அபாயகரமாக இருந்தது. துப்பட்டா இல்லாமல் அதை போடவும் முடியாது. வேறு துப்பட்டா போடலாம் என்றால் இந்த கலர் க்கு மேட்ச் ஆகாது.

வேறு வழி இல்லாமல் அவனை தேடிச் சென்றாள். அனைவரும் இருக்கும்போது அறைக்குச் செல்லவே தயக்கமாக இருந்தது அவளுக்கு. அனைவரும் கிட்செனில் பேசிக் கொண்டிருக்க அறைக்குச் சென்றாள்.

அவளது துப்பட்டாவை கழுத்தில் சுற்றி போட்டுக் கொண்டு கட்டிலில் படுத்திருந்தான் சுஷின். வேகமாக அவனிடம் சென்று அவனது கழுத்தில் இருந்து துப்பட்டாவை பிரிக்க முயற்சி செய்தாள்.

ஆனால் அவனிடமிருந்து பிரிக்க முடியவில்லை. தன் முயற்சியிலேயே கவனமாக இருந்தவள் சுஷினின் பார்வை மாற்றத்தை கவனிக்கவில்லை.

அவன் அவளது முயற்சியை தடுக்கவும் இல்லை அதே வேளை துப்பட்டா வரவும் இல்லை. சுஷினை என்ன செய்ய என்று கோபமாக பார்த்தவள் அவனது பார்வை மாற்றத்தை அப்பொழுதுதான் பார்த்தாள்.

அவனது பார்வை பதிந்த இடத்தை அவள் பார்க்காமலேயே உணர முடிந்தது. கை சுடிதாரை சரிசெய்ய எழுந்தது ஆனால் அவளது முயற்சியை தடை செய்தது சுஷினின் கரங்கள்.

அவன் பார்வையை விலக்கிக் கொள்ளவும் இல்லை, அவளது கைகளை விடவும் இல்லை. மினிக்கு அவனது பார்வை மேனியை சிலிர்க்க வைத்தது. விலகு என்று மூளை கட்டளையிட அதை செயல்படுத்த கால்கள் ஒத்துழைக்க மறுத்தது.

அவளது கைகளுக்கு சுதந்திரம் அளித்தவன் அவளது இடையை வளைத்து தன்னை நோக்கி இழுத்தான். அவனது இதழ் தீண்டலை எதிர்நோக்கி கண்களை மூடிக் கொண்டாள் மினி.

அவள் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை ஆனால் அவன் இதழ் பதிந்த இடம்தான் மினியை கலவரப் படுத்தியது. மினியின் சுடிதார் கழுத்து இறங்கி இருந்த இடத்தில் அவனது சூடான இதழ்கள் புரண்டன.

உடம்பில் உள்ள மொத்த ரத்தமும் முகத்தில் பாய தாள முடியாமல் அவன்மேல் சரிந்தாள் மினி அவளை தன்னுடன் சேர்த்து புதைத்துக் கொண்டு கட்டிலில் சரிந்தான் சுஷின். அவனது இதழ்கள் மேலும் முன்னேறின அவளது மேனியில்.

மினியின் கைகள் சுஷினின் முதுகில் பிடிப்பில்லாமல் அலைந்தது. சுஷினின் கைகள் மினியின் மேனியின் மென்மையை பரிசோதித்தன. இருவருமே தங்களை மறந்த நிலை, இந்தநிலை நீடித்திருந்தால் என்ன நடந்திருக்குமோ ஆனால்………….

“அண்ணா…………. ” என்ற அழைப்பில் மினியை நனவுலகம் மீட்டாள். ஆனால் சுஷின் மீள விரும்பாதவனாய் மினியிடம் கட்டுண்டிருந்தான்.

மினியின் உணர்ச்சி வேகம் ஷிஜியின் அழைப்பில் அறுந்தது. ஆனால் சுஷின் கலைய விரும்பாதவனாய் தன் தேவை தீராத மோகத்தில் இருந்தான்.

தன்மேல் படர்ந்திருந்த சுஷினை விலக்க போராடினாள் மினி. ஆனால் அவன் இதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை. ஷிஜி படியேறி வரும் அரவம் கேட்டது மினிக்கு.

அறையின் கதவும் திறந்தே இருந்தது. இந்த நிலையில் ஷிஜி பார்த்தால் என்ன ஆவது , “தேவ்………. தேவ்………. ஷிஜி கூப்பிடுறா பாருங்க”. அவளது தேவ் என்ற அழைப்பே அவனுக்கு போதையேற்றியது.

“அவ கூப்பிடட்டும் நீ சும்மா இரு” , அவனது தேவை இவ்வாறு பேச வைத்தது. ஆனால் ஷிஜியின் வருகை நெருங்கிவிட்டதை அறிந்து, “தேவ்…….. தேவ்………. ஷிஜி படியேறி வந்துட்டா. ப்ளீஸ் எந்திரிங்க ரூம் கதவுவேற தாழ்போடவில்லை” , அவஸ்த்தையாக முணுமுணுத்தாள்.

“அவ மாடிக்கு வரமாட்டா நீ பேசாமல் இரு”, அவனது இதழ்கள் அவளது இதழ்களை மூடியது. அவனது தேவை புரிந்தாலும் பகல் வேளையில், அதுவும் ஷிஜி மேலே வந்துவிட்ட நிலையில் அவளால் அவனுக்கு அடங்க முடியவில்லை.

தன் பலம் முழுவதும் திரட்டி அவனை உருட்டி தள்ளி விட்டாள். தள்ளிய வேகத்தில் அவனிடம் இருந்து உருவி கட்டிலில் இருந்து இறங்கி தன் சுடிதாரையும் துப்பட்டாவையும் எடுத்துக்கொண்டு பாத்ரூமில் புகுந்து ஷவரின் அடியில் நின்றாள்.

 

தன் ஏமாற்றம் முழுவதும் வார்த்தையாக வந்தது சுஷினுக்கு. “என்னை தள்ளி விட்டுட்டு போய்ட்ட இல்ல. இது இரண்டாவது முறை, உன்னிடம் நெருங்கும் என்னைப் பார்த்தால் பயித்தியக் காரன் மாதிரி இருக்கா. இனிமேல் நீயே வரும் வரை நான் உன்னை நெருங்க மாட்டேன் போ போய்டு என் கண் முன்பே நிற்காதே”.

சுஷினால் தூண்டப்பட்ட உணர்வுகள் அடங்க மறுத்தன. தனக்குமட்டும் ஏன் இப்படி ஆகவேண்டும் என்ற எண்ணமும் அவளை வாட்டியது. ஷவரின் அடியில் பச்சைதண்ணீரின் அடியில் தன் எண்ணப் போக்கில் நின்றாள் மினி.

 

சுஷினின் பேச்சு அதைவிட நெஞ்சை சுட்டது. நான் மட்டும் விரும்பியா விலகினேன் , இப்படி புரிந்துகொள்ளாமல் பேசுகிறாரே. என்ன செய்ய.

அறையில் சுஷினின் நிலையோ அதைவிட மோசமாக இருந்தது. முழுமை பெறாத உறவு தணலாய் எரிந்தது உடல் முழுவதும். மினி வேண்டும் என்று உடலின் ஒவ்வொரு செல்லும் துடித்தது. அவளால் மட்டுமே தன் தகிப்பை அடக்கமுடியும் என்று தோன்ற, உதறித் தள்ளிவிட்டு அவள் போனது கடுங் கோபத்தை அவள்மேல் வர வைத்தது.

இனிமேல் அவளே நெருங்காமல் தான் நெருங்கவே கூடாது என்ற வீராப்பையும் விதைத்தது. இது முதல் முறை அல்ல அவள் உதறுவது, அவளை நெருங்கும் போது எல்லாம் என் உணர்வுகளை கொல்லுவதே அவள் வேலையாகிப் போனது.

இவனது சிந்தனை ஓட்டத்தை கலைத்தது ஷிஜியின் குரல் , “என்னண்ணா எவ்வளவு நேரமா கூப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன். ஏதாவது வேலையாக இருப்பியோ என்று கூப்பிட்டுவிட்டு பாதிபடி ஏறி வந்து வெயிட் பண்ணுனா உன்னை காணோம் அதனால்தான் தேடி வந்தேன்.

ரூம் கதவு திறந்தே இருந்தது அதனால்தான் தைரியமா ரூம்க்கே வந்துட்டேன். உன்னை தொந்தரவு செஞ்சுட்டனா”.

About lavender

Check Also

images

Ithu Kaathalendraal -47

PRAT  –  47.   ஷிஜிக்கு யோசிக்க யோசிக்க தலையை வலிப்பதுபோல் இருந்தது. என்ன முடிவு எடுக்க இன்னும் காலேஜ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *